வெள்ளைப்படுதல்

 #வெள்ளைப்படுதல்_நல்லதா…❓


#அதை_எப்போது

#பிரச்சினைக்குரியதாக #பார்க்க_வேண்டும்…❓❓❓


எல்லாப் பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் நிகழ்கிறது. பிறப்புறுப்பு, கருப்பையின் வாய் போன்ற இடங்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய கசிவே வெள்ளைப்படுதல். 


இது சாதாரணமாக இருக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் வெள்ளைப் படுதல் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடையாளம்.


🔴 இந்தக் கசிவு இல்லையென்றால் என்னவாகும்❓


🔴 பிறப்புறுப்பு உலர்ந்துவிடும். ஏன் பிறப்பிறுப்பில் ஈரப்பசைத் தன்மை இருக்க வேண்டும்……❓ 


👉வெள்ளைப்படுதலில் சிறிதளவு அமிலத்தன்மை இருக்கும். இது கிருமிகளைக் கொல்லக் கூடியது. இதேபோல் பின்னாளில் ஆண்-பெண் உறவு நிகழும்போது பிறப்புறுப்பு உலர்வாக இருந்தால் வரக்கூடிய எரிச்சலையும் வலியையும் இது கட்டுக்குள் வைக்கும். 


👉சாதாரண வெள்ளைப்படுதல் என்பது இறந்துபோன செல்களும் பிறப்புறுப்பில் உள்ள நுண்ணுயிரிகளும் இணைந்தது. 

அது மெல்லிதாக ஒட்டக்கூடிய தன்மையுடனும்  நீளக் கூடியதாகவும் இருக்கும். வெள்ளை நிறத்திலோ லேசான மஞ்சள் கலந்த வெள்ளையாகவோ இருக்கும். எவ்விதத் துர்நாற்றமும் இருக்காது. இத்தகைய வெள்ளைப்படுதல் பற்றிப் பதற்றம் தேவையில்லை.


👉மாதவிடாய்ச் சுழற்சியின்போது வெள்ளைப்படுதலின் தன்மை மாறும். 


👉சுழற்சிக்குமுன், சுழற்சிக்குப்பின், சுழற்சியின் நடுப்பகுதி போன்ற நாட்களில் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்.  


👉நடுப்பகுதியில் வரக்கூடிய வெள்ளைப்படுதல் சளி போன்று இருக்கும். 


👉கையில் எடுத்துப் பார்த்தால் இரண்டு விரல்களுக்கு இடையில் நீண்டு நிற்கும். இந்த நாட்களில் பெண்ணின் கருமுட்டை முதிர்ச்சியடைந்து, விந்தணுவைச் சந்திக்கத் தயாராக இருக்கும். 


⭐இந்த நாட்களில் உறவுகொண்டால் கருவுற வாய்ப்புள்ளது. 


🔴👉 வெள்ளைப்படுதலை எப்போது பிரச்சினைக்குரியதாக பார்க்க வேண்டும்…❓


🚺வெள்ளைப்படுதல் துர்நாற்றம் வீசும்போது.


🚺வெள்ளைப்படுதலின் நிறம் மாறும்போது. பச்சை, சாம்பல் நிறம் அல்லது சீழ் போன்று இருக்கும்.


🚺வழக்கத்தைவிட அதிகமான அளவில் வெள்ளைப்படும்போது.


🚺பிறப்புறுப்புப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும்போது.


🚺தயிர் போன்று கெட்டியாகக் காணப்படும்போதோ சீழ் கலந்து இருக்கும்போதோ.


🚺வெள்ளைப்படுதலில் ரத்தம் கலந்து வந்தால்.


🚺அடிவயிற்றில் வலி, காய்ச்சல், பசியின்மை, எப்போதும் சோர்வு, எடைக் குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால்.


🚺இளம் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்போது.


➡ இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. நாமாகவே கைவைத்தியம் செய்கிறோம் என்று எதையாவது செய்யக் கூடாது. சிலர் பிறப்புறுப்பைக் கழுவி, ஆயின்மென்ட்டைத் தடவி சமாளிக்கப் பார்ப்பார்கள். இது தவறு. 


💢 வெள்ளைப்படுதல் குறித்து இளம் பெண்கள் மட்டுமல்ல இல்லத்தரசிகளும் வெளியே சொல்லக் கூச்சப்படுகின்றனர். 


💢ஆரோக்கியம் குறித்தவற்றில் கூச்சம் தேவையில்லை.


⭕ அசாதாரணமான வெள்ளைப்படுதல் வருவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கக்கூடும்❓


சிறுநீர்த்தடத்தில் வரக்கூடிய நோய்த்தொற்று.


பிறப்புறுப்பில் வரக்கூடிய தொற்று.


பால்வினை நோய் தொடர்பான தொற்று.


⭕ சிறுநீர்த் தடத் தொற்றுக்குக் காரணம் என்ன❓


❌ நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக்கொள்வது.


❌ அதிகப்படியான வியர்வை வரும்போது,  பருத்தி உள்ளாடைகள் இல்லாமல் நைலான் உள்ளாடைகள் அணிவது.


❌ சிறுநீர்த் தடப் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது.


❌ பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய தொற்றுக்கும் சிறுநீர்த் தடத் தொற்றுக்கும் தொடர்பு உண்டு.  பிறப்புறுப்புத் தொற்று, சிறுநீர்த் தடத் தொற்றாக மாறலாம். சிறுநீர்த் தடத் தொற்று பிறப்புறுப்புத் தொற்றாக ஆகலாம். எதுவாக இருந்தாலும் சிகிச்சை பெறுவது அவசியம்.


❌ சின்ன பெண்தானே பிறப்புறுப்புத் தொற்று பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கக் கூடாது. இதனால் பில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். 


பிறப்புறுப்புத் தொற்று, கருப்பைக்குப் போய் அங்கிருந்து கருக்குழாய்க்குப் போகலாம். 


இதனால், கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, பின்னாளில் குழந்தைப்பேறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.  


இடுப்புப் பகுதிகளிலும் பிரச்சினைகள் வரலாம். 


பின்விளைவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றால் அசாதாரணமான வெள்ளைப்போக்குக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.


⭕ பிறப்புறுப்புத் தொற்றுகளைத் தவிர்க்க என்ன செய்வது❓


பிறப்புறுப்புப் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 


நீண்ட நேரம் சிறுநீரை அடக்க 

முயலக் கூடாது. 


வீடு தவிர வெளியிடங்களில் கழிவறையைப் பயன்படுத்தப் பிடிக்காது என்று நீண்ட நேரம் சிறுநீரை அடக்கிக்கொள்வது தவறு.  


மாதவிடாயின்போது பயன்படுத்தக்கூடிய துணியோ நாப்கினோ சுத்தமாக இருக்க வேண்டும். 


உள்ளாடைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். 


பருத்தி உள்ளாடையே நல்லது.


பால்வினை நோய்த் தொற்று இருப்பவர்களுக்கும் அசாதாரண வெள்ளைப்போக்கு இருக்கலாம்.  

அந்த நேரத்தில் பெண் மட்டும் சிகிச்சை எடுத்தால் போதாது. 

அவருடைய துணைவரையும் சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.  


🚻👉 ஏனென்றால், பால்வினைத் தொற்று ஆணிடமிருந்து பெண்ணுக்கும் பெண்ணிடமிருந்து ஆணுக்கும் பரவும்.  இருவரும் சேர்ந்து சிகிச்சை பெறாவிட்டால் பாதிப்பு தொடரும்.


வெள்ளைப்படுதலை ஆரோக்கியக் கேடாகப் பார்க்காமல் நம் உடலின் ஆரோக்கியத்தையும் ஆரோக்கியக் கேட்டையும் உணர்த்தும் அறிகுறியாகப் பார்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி