சுகமாக வயிறு சுத்தம் செய்ய

 மலமிளக்கிக் கசாயம் (சுக பேதிக் கசாயம்)

காலை எழுந்த உடன் எல்லா கழிவுகளும் உடலை விட்டு வெளியேறினால்தான் ஆரோக்கியமாக வாழ முடியும்

கழிவுகள் உடலை விட்டு முழுமையாக வெளியேறாவிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இதயம் சம்பந்தப் பட்ட நோய்கள் ஏன் புற்று நோய் வருவதற்குக் கூட மலசிக்கல காரணமாக அமைந்து விடுவது உண்டு

நில ஆவாரை சூரணம் ............... மூன்று கிராம்

சோம்பு சூரணம் ............... மூன்று கிராம்

சுக்கு தூள் ............... மூன்று கிராம்

தனியா( கொத்துமல்லி விதை சூரணம் ) ............... மூன்று கிராம்

ஆகிய நான்கு  பொருட்களையும் கொடுக்கப் பட்டுள்ள அளவுகளின்படி எடுத்து நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து நூறு மில்லி கசாயாமாக சுருக்கி இறக்கி வடிகட்டி இரவு படுக்கப் போகும் முன் ஒரு வேளை மட்டும்  மருந்தாகக் குடிக்க வேண்டும்

கசப்பு சுவை உடைய கசாயம் இது

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம்

காலை எழுந்த உடன் ஒரு துளி கூட கழிவுகள் உடலில் தேங்காமல் வெளியேறி விடுவதைக் காணலாம்

எனிமா கொடுத்தாலும் கூட வெளியேறாத கழிவுகள் கூட வெளியேறி விடும்

உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள்

வயிற்று புண்கள் குடல் புண்கள் கேஸ் ட்ரபுள் வயிற்று உப்புசம் பிரச்சினை

உள்ளவர்கள் நலமடைய இது ஒரு நல்ல மருந்து

சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும் அற்புதமான மருந்து

உடல் கழிவுகள் வெளியேறுவதில் பிரச்சினை இல்லாதவர்களும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இதைப் பயன்படுத்தலாம்

பித்தத்தால் ஏற்படும் பிரச்சினைகளாக

செரிமானக் கோளாறுகள்

வயிறு சம்பந்தப் பட்ட கோளாறுகள்

வயிறு எரிச்சல்

நெஞ்சு எரிச்சல்

தொடர்பான பிரச்சினைகள்

கடுமையான மலசிக்கல் பிரச்சினைகள்

அடிக்கடி மலம் கழிக்கும் இரிடபல் பவல் சின்ரோம்

அல்சரேடிவ் கொலாயிடிஸ் போன்ற பிரச்சினைகள் ஆகும்

உடலை சுத்தப் படுத்த வேண்டும் என்று வரும்போது உடலில் இருக்கும் பித்தத்தையும் வெளியேற்றினால்தான் உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்கள் கட்டுக்குள் வரும்

அந்த வகையில் சுகபேதிக்கசாயம் மலக் கழிவுகளை மட்டுமல்ல உடலில் இருக்கும் பித்தத்தையும் வெளியேற்றும்

இதக் கசாயத்தை கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் இதய நோய் உள்ளவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வயதானவர்கள் என அனைவரும் இதைப் பயன்படுத்தி நலமுடன் வாழலாம்

இதை ஒரு மருந்தாக அல்ல மூலிகைதேநீராகப் பயன்படுத்தி நலமடையலாம்


Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி