மூலிகையை பறித்தல்

 நிழல் படாமல் 

மூலிகை  பறிக்க வேண்டும் 


நகம் படாமல் 

மூலிகை பறிக்க வேண்டும் 


என்பதற்கான விளக்கங்கள்


      மூலிகை பறிப்பதாக இருந்தால் காலைப்பொழுதில் மூலிகையின் மேற்குப் பக்கமாக நின்று கொண்டு அதன் இலைகளை பறிக்க வேண்டும் என்றும்


      மாலைப் பொழுதிலே மூலிகை பறிப்பதாக இருந்தால் மூலிகையின் கிழக்கு பக்கமாக இருந்து கொண்டு மூலிகையை பறிக்க வேண்டும் என்றும் நமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்


    அதாவது நமது நிழல் எக்காரணத்தைக் கொண்டும் மூலிகையின் மேல் பட்டு விட கூடாது என்பதற்காகவும் மூலிகை பறிப்பவர்கள் சூரியனை பார்த்தபடியே மூலிகை பறிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஒரு விதி முறையை சொல்லி இருக்கின்றார்கள்

    

எதற்காக இப்படி சொல்லப்பட்டிருக்கின்றது என்றால்


     அனைத்து உயிர்களுக்கும் அதனுடைய நிழலே அதன் கர்மாவாக பிறவிதோறும் பின்தொடர்ந்து வருகின்றது என வேத சாஸ்திரங்களில் சொல்லி இருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது


      கர்ம வினைப் பயனே நோய்கள் வருவதற்கும் காரணம் என சித்தர்களும் பல நூல்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்


வைத்தியம் பார்த்து கொள்ள வருகின்ற நோயாளிகளுக்கும் கர்மா இருக்கின்றது பிணி தீர மருந்து தரும் வைத்தியனுக்கும் கர்மா எனும் வினை இருக்கின்றது


அதனால்


     கர்ம வினையால் வருகின்ற நோய்களுக்கு வைத்தியம் பார்க்க மூலிகை பறிக்கின்ற பொழுது வைத்தியர்களின் கர்மா எனும் நிழல் மூலிகையின் மேல் படக்கூடாது என்று கூறியிருக்கின்றார்கள் 


     அப்படி நிழல் பட்டால் வைத்தியம் பலிக்காது என்று கூறுவதற்கு காரணம் வைத்தியரின் கர்மா இன்னும் தீர்க்கப்படாததாய் இருப்பதால் இவனது கர்மாவான நிழல் மூலிகையில் மேல் பட்டால் கர்ம வினையால் வருகின்ற நோய்களுக்கு இவனுடைய கர்மாவின் நிழல் பட்ட மூலிகை பயன்படாது என்பதை உணர்த்தவே மூலிகையின் மேல் நிழல் படக்கூடாது என சொல்லி இருக்கின்றார்கள்


    

     கர்மாவின் வினைப்பயனால் வருகின்ற நோய்களுக்கு கர்மத்தின் வினைப்பயனால் பிறவியைப் பெற்ற வைத்தியனின்  நிழல் படக் கூடாது என்பதற்கு இதுவே காரணம்


     நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதனை நாம் உணர்ந்து கொள்வதற்காகவே சூரியன் இருக்கின்ற திசையை நோக்கி மூலிகை பறிக்க வேண்டும் என சொல்லப் பட்டிருக்கின்றது அதனால்தான் முறையான வைத்தியர்கள் சூரியனை வணங்கி விட்டு அதன் பிறகே மூலிகை பறித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 


     இயற்கையின் கடவுளான சூரிய பகவானின் அனுமதியோடு மூலிகையை பறிக்க வேண்டும் என்பதற்காகவே சூரியன் இருக்கும் திசையை நோக்கி நின்று கொண்டு மூலிகையை பறிக்க வேண்டும் என மறைபொருளாக சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது


        நமது முன்னோர்களான வைத்தியர்கள் அனைவருமே யாருக்கும் தெரியாமல் மூலிகையைப் பறித்த உடனே அதை கசக்கி விடுவார்கள் அதன் பின்னே அதைக் கல்வத்திலிட்டு அரைத்து பிணியாளர்களுக்கு மருந்தாய் தருவார்கள் இதுவே அவர்களின் வழக்கமாக இன்றளவும் இருக்கின்றது


     மூலிகையின் அடையாளத்தை மறைப்பதற்காக அவர்கள் இப்படி செய்வதில்லை இந்த மூலிகை தானா என பிணியாளர்கள் சாதாரணமாக நினைத்து விட கூடாது என்பதற்காகவே இப்படி செய்கின்றார்கள்


சரி விஷயத்திற்கு வந்து விடுவோம்


     மூலிகையைப் பறிக்கும் பொழுதோ அல்லது அதைக் கசக்கும் போதோ நகத்தில் இருக்கின்ற அழுக்கு மூலிகையில் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே நகம் படாமல் மூலிகையை பறிக்க வேண்டும் என சொல்வதற்கு காரணமாக இருக்கின்றது


    ஆகவே  நகம் படாமல் மூலிகையை

பறிப்பதற்கும் நிழல் படாமல் மூலிகையை பறிப்பதற்கும் இதுவே காரணங்களாக இருக்கின்றது


ஓம் பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி