வெள்ளைப்படுதல்
#வெள்ளைப்படுதல்_நல்லதா…❓ #அதை_எப்போது #பிரச்சினைக்குரியதாக #பார்க்க_வேண்டும்…❓❓❓ எல்லாப் பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் நிகழ்கிறது. பிறப்புறுப்பு, கருப்பையின் வாய் போன்ற இடங்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய கசிவே வெள்ளைப்படுதல். இது சாதாரணமாக இருக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் வெள்ளைப் படுதல் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடையாளம். 🔴 இந்தக் கசிவு இல்லையென்றால் என்னவாகும்❓ 🔴 பிறப்புறுப்பு உலர்ந்துவிடும். ஏன் பிறப்பிறுப்பில் ஈரப்பசைத் தன்மை இருக்க வேண்டும்……❓ 👉வெள்ளைப்படுதலில் சிறிதளவு அமிலத்தன்மை இருக்கும். இது கிருமிகளைக் கொல்லக் கூடியது. இதேபோல் பின்னாளில் ஆண்-பெண் உறவு நிகழும்போது பிறப்புறுப்பு உலர்வாக இருந்தால் வரக்கூடிய எரிச்சலையும் வலியையும் இது கட்டுக்குள் வைக்கும். 👉சாதாரண வெள்ளைப்படுதல் என்பது இறந்துபோன செல்களும் பிறப்புறுப்பில் உள்ள நுண்ணுயிரிகளும் இணைந்தது. அது மெல்லிதாக ஒட்டக்கூடிய தன்மையுடனும் நீளக் கூடியதாகவும் இருக்கும். வெள்ளை நிறத்திலோ லேசான மஞ்சள் கலந்த வெள்ளையாகவோ இருக்கும். எவ்விதத் துர்நாற்றமும் இருக்கா...