கால் நரம்பு சுருட்டல் குணமாக

 🔯#வெரிகோஸ்வெயின் 

#என்ற………


🔯#இரத்த_நாளவீக்க_நோய்கான…❓


💊💊#வீட்டு_கை_வைத்தியம்…💊💊💊


.

✴ #வெரிகோஸ்_நரம்பு_முடிச்சி #நோய்_என்றால்_என்ன❓


பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 


முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. 


இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? 


⭕👉 #உண்மைதான்……


இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய 

நோய் அல்ல. 


நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரியது அல்ல என்பதுதான் உண்மை. தலைவலி கூட தலை போகும் பிரச்சினையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால் ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந்தாலும் அதனைக் குணப்படுத்த முயல வேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். 


கை, கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் களுக்கு வெயின் என்றுபெயர். 


வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். 


🔴இதயத்திற்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம். 🔴

.


🔯 #வெரிகோஸ்வெயின்_நோய் #எதனால்_வருகிறது❓


மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித் தொங்கிய படி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின் பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது. 


மலச்சிக்கல் ஏற்படும் போது, இரத்தநாளங்கள் அனைத்தும் 

அழுத்தப்படுகின்றன. 


நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. 

ஆக, மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது. 


அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்க விட்ட படியே அசைவற்று உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற்கான காரணமாகும். 


இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் 

ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 


பாதங்களில் இருந்து இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்கவேண்டி உள்ளது. அது இயலாமல் போகும் போது, இரத்தம் மீண்டும் கீழ்நோக் கியே செல்லத் தொடங்கும். இதனால், இரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத்தும் வீங்கியும் காணப்படும். ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

.

.

🈵 வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்❓


▶அதிக எடை, 


▶மலச்சிக்கல், 


▶கருவுற்றிருக்கும் காலத்தில் 

போதியபராமரிப்பின்மை, 


▶அசைவற்றிருத்தல் 


போன்ற காரணங்களால் பெண்களுக்கு வரவாய்ப்பு அதிகம். 


⬅பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும். 


⬅வயது முதிர்ந்தவர்களுக்கு இரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு. 


⬅கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு 3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது. 


⬅அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும். 


⬅பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 


⬅அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்வது, 


⬅அசைவற்று ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

.


.

⭕#அறிகுறிகள்❓❓❓❓


🔰வெரிகோஸ் வெயின் நோய்க்கான அறிகுறிகள் என்ன❓ 


↗தோலின் உட்புறத்தில் இரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும். 


↗கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல். 

பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல். 


↗பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல். 


↗கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில் உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாக கருதிவிடுவது உண்டு) 


↗வெரிகோஸ் வெயின் இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல். 

.

.

⭕#வருமுன்_தடுக்க❓


👉இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக்காமல் ஆங்கில மருத்தும் மூலம் பார்த்துக்கொள்ளலாம். 


👉எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 


👉அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும். 


👉எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது. 


👉தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது. 


👉தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும். 


👉எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். 


👉எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 


👉சிகிச்சை வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம்  வெரிகோஸ் வெயின் புதிதாக உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும் வேதனைகளைக் குறைக்க முடியும். 


❌ அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாக பயன் கிடைக்காது. ஏனென்றால்………


👉 மற்றொரு இரத்த நாளத்தின் மூலமாக இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. 


❌ வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும், வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள். 


👉கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஆண்களுக்குத்தான் அதிகம் வரும்.


♦#இது_பெண்களுக்கும்_ஏற்பட #வாய்ப்புண்டா❓


ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளது. 

பெண் களுக்கு சுரக்கும் ஹோர்மோன்கள்தான் இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான பெண்களுக்குத்தான் அதிகம் வருகிறது. 


✳ கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை என்றால் என்ன❓


கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்பது, கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வதுதான். ஆரோக்கியமான கால்களில் உள்ள நரம்புகள் இருதயத்திலிருந்து செலுத்தப்படும் இரத்தத்தை ஒரே சீராகச் செல்ல அனுமதிக்கும். அதேபோல கால்களிலிருந்து இதயத்திற்கு இரத்த ஓட்டம் சீராக நடைபெற வழி வகுக்கும். இதற்கு கால் நரம்புகளில் உள்ள வால்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பழுதடைந்தால், நரம்பு களில் அடைப்பு ஏற்பட்டு, அவை கால் களிலேயே தங்கிவிடும். இதனால் கால்கள் பாதிக்கப்படும். அல்லது கடுமையான வலி ஏற்படுத்தும். கால் நரம்பு களில் இருந்து இரத்தம் மீண்டும் இருதயத்திற்கு செல்லாத நிலையில் கால்கள் வீக்கமடையும். 


இவ்விதம் கால் நரம்புகளில் ரத்தம் தேங்குவதால் நரம்புகள் சுருண்டு கொள்ளும். இதைத்தான் வெரிகோஸ் வெயின் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இவர்களது கால்கள் வீக்கமடைவதுடன், நரம்புகள் சுருண்டு கொண்டிருப்பதையும் காண முடியும். இரத்தம் தேங்கி விடுவதால் நரம்புகள் கருநீல நிறத்தில் காட்சி அளிக்கும். ஆரம்ப நிலை என்றால், சிறிய அளவில் மாறுபட்ட நிறத் திலான கோடுகள் சிலந்தி வலை போன்று காட்சியளிக்கும். பெரும்பாலோர் இது வெறும் தோல் சம்பந் தப்பட்ட பிரச்னை என்று நினைக்கிறார்கள். ஆனால் இது மருத்துவ ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு நோய். நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஏற்பட்டால் கடுமையான வலி தோன்றும். சில சமயங்களில் உடலில் மிகுந்த களைப்பு ஏற்படும். இந்நோய் மிகவும் முற்றிய நிலையில் தோலின் நிறமே மாறும். தோலின் மீது கொப்புளங்கள் தோன்றும். கால் களிலும், கணுக்கால்களிலும் கொப்புளங்கள் தோன்றும். கொப்புளங்களிலிருந்து சில சமயம் இரத்தம் வெளியேறும். சில சமயங்களில் இரத்தக் கட்டிகள் நரம்புகளில் ஏற்படக்கூட வாய்ப்புண்டு. 


🉐 எத்தகைய பெண்களுக்கு கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை ஏற்படும்❓


உடல் பருமனான பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், அதிலும் குறிப்பாக அதிக குழந்தைகள் பெறும் தாய்மார்களுக்கு இப்பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில பெண்களுக்கு கருவுற்ற காலத்திலேயே கால்களில் நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படும். குழந்தை பிறந்தவுடன் இந்த நரம்புகள் மறைந்துவிடும். ஆனால் குழந்தை பெற்ற பின்னரும் தொடரும். பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு இப்பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.


.

🇨🇭 #வீட்டு_கை_வைத்தியம்_மருந்து 🇨🇭


💊#மருந்துஒன்று💊


இரத்த நாள வீக்க நோய் கசாயம் !!


வல்லாரைக் கீரை ......... ஒரு கைப்பிடி 


நெருஞ்சில் ........... ஐந்து கிராம் 


கருஞ்சீரகம் ........... ஐந்து கிராம்


சீரகம் ........... ஐந்து கிராம்


சுக்கு ........... ஐந்து கிராம்


மிளகு ........... ஐந்து கிராம்


திப்பிலி ........... ஐந்து கிராம்


ஆகிய ஆறு பொருட்களை சம அளவு எடுத்து லேசாக வெதுப்பி ஒன்றிரண்டாக இடித்து மண் சட்டியில் போட்டு 

அத்துடன் ஒரு கைப்பிடி வல்லாரைக் கீரை போட்டு 

ஐநூறு மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கசாயமாக்கி நூறு மில்லியாக சுருக்கி குடித்து வர வெரிகோஸ் வெயின் என்ற இரத்த நாள வீக்க நோய் படிப்படியாகக் குணமாகும் 

தினமும் மூன்று வேளைகள் குடிக்க வேண்டும் ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து சாப்பிட வேண்டும்.


.

💊#மருந்துஇரண்டு💊


அத்திப் பட்டை  .......  பத்து கிராம் (சிதைத்துக் கொள்ளவும் )


மருதம்பட்டை தூள் ...........  அரைத்தேக்கரண்டி 


மிளகு  ........  அரைத்தேக்கரண்டி 


சீரகம்   .....  அரைத்தேக்கரண்டி 


இஞ்சி  ................  அரைத்தேக்கரண்டி (சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது )


இந்துப்பு  ,...........  தேவையான அளவு 


அனைத்துப் பொருட்களையும் இருநூறு மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து நூறு மில்லிக் கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி நாள்தோறும் காலை மாலை என இரு வேளைகள் குடித்து வர நரம்பு சுருட்டல் அதனால் ஏற்படும் அரிப்பு நமைச்சல் இரத்தம் வருதல் போன்ற பிரச்சினைகள் படிப்படியாகக் குணமாகும்.


.

💊#நோய்க்கான_தீர்வு💊


குப்பைமேனி இலை


மிளகு 


சம அளவு சேர்த்து அரைத்து காலை வெறும் வற்றில் சாப்பிட்டு வரவும்.


.

💊#வெளி_உபயோகம்💊


√ தினசரி குளிப்பதற்கு ஒரூ மணி நேரம் முன்பு


நாட்டுக் கோழி முட்டை   2


மக்காச் சோளமாவு பவுடர்


கழற்சிக்காய் பவுடர்


இரண்டு நாட்டுக் கோழி முட்டைகளை எடுத்துக் கொண்டு அதில் உள்ள மஞ்சள் கருவை நீக்கவும்.    பின்னர் அதனுடன் மக்காச் சோளமாவு  (பவுடர்) தேவையான அளவு கலந்து  கழற்சிக்காய் பவுடர் சிறிதளவு கலந்து தடிப்பு உள்ள இடங்களில் பூசி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் சுடு தண்ணீரில் குளித்து வரவும்.  


48 நாட்கள் இதுபோன்று செய்து வரவும். 


.

💊#வெளிஉபயோகம்💊


பூண்டு பற்கள் ஆறு எடுத்து நசுக்கி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அதில் இரண்டு ஆரஞ்சு பழத்தின் சாறினையும், இரண்டு ஸ்பூண் ஆலிவ் எண்ணையையும் ஊற்றி நன்கு மூடி 12 மணி நேரம் ஊற வைத்து, பின் அதில் சில சொட்டுகள் எடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் நன்கு மசாஜ் செய்யவும்..

ஒரு நாளைக்கு இருமுறை, குறைந்தது ஒரு மாதமாவது தேய்த்து வந்தால், வலி, வீக்கம் குறையும்.


.

🔴#முக்கிய_குறிப்பு


👉பரோட்டா , மஸ்கத் அல்வா , ஊறுகாய் , அப்பளம் , ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 


👉ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.


🔴 கண்டிப்பாக மலசிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி