முகவாதம்

 🇨🇭#முகவாதம்


🇨🇭 #முற்றிலும்_குணப்படுத்த

#முடியும்…❗❓


⏩  முகவாதம் அதன் அறிகுறிகள் என்ன❓❓❓


⏩  யாருக்கு வரும்❓


⏩  எப்படி வருகிறது❓


⏩  தடுப்பது எப்படி❓


⭕ முகவாதம். இந்த நோய்க்கு 

“#பெல்ஸ்_பால்சி” (bells palsy) என்று பெயர்.


முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்படைவதால் முகத்தில் ஏதேனும் ஒரு பக்க தசைகள் செயலிழந்து விடும் அல்லது வலுவிழந்து விடும். இதனால் வருவது தான் முகவாதம். 


இரவில் படுக்கப்போகும் போது நமக்கு முகம் நன்றாக தான் இருந்திருக்கும். காலையில் எழுந்திருக்கும் போது முகம் ஒரு பக்கமாக கோணிக் கொண்டு போகும். 


👉காபி சாப்பிட்டால் வாய் ஒழுகும். 


👉 ஒரு பக்கம் கண்ணை முழுவதுமாக மூட முடியாது. 


பயந்து போய் டாக்டரிடம் ஓடுவோம். அவர், “உங்களுக்கு முகவாதம் வந்துள்ளது” என்பார். 


முகம் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும்………


➡ பயம், 


➡ கோபம், 


➡ துக்கம், 


➡ மகிழ்ச்சி 


முதலான மனதின் உணர்வுகளை முகம் காட்டிக் கொடுக்கும். 


முகத்தின் அசைவுகள், உணர்வுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும், வழிநடத்தும் பொறுப்பு தலையுடையது. தலைதான், மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாகம்.மனிதன் மட்டுமே, முக அசைவுகளின் மூலமும், பேச்சின் மூலமும் பிறருடன் தொடர்பு கொள்ள முடியும். முக அசைவு மற்றும் பேச்சு இரண்டுமோ அல்லது இரண்டில் ஒன்று மட்டுமோ தடைப்படுவது முகவாதம் எனப்படும். 


முகவாதம் 80 வகையான வாத வியாதிகளுள் ஒன்றாகும். 

வாத தோஷத்தின் இயல்புநிலை மாறி விடுவதால் வரும் இவ்வியாதியால், உடலின் இயல்பான செயல்பாடுகள் குறைந்து, ஊனம் அடைய நேரலாம். இறப்பு கூட வரலாம். 


இந்நோய் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய சூழலில் குளிர்ந்த காற்று, குளிர்ந்த சூழ்நிலையில் அதிகம் இருப்போருக்கு அதிகம் இந்நோய் வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த ஒழிக்க இது தகுந்த தருணம் ஆகும்.


⭐ முகத்தின் இடது, வலது பக்கம் கோணலாகி விடுவது முகவாதம். 

அத்துடன் பாதிக்கப்பட்ட இடத்தில் அசைவு, உணர்ச்சி ஆகியன இயல்புநின்ற மாறிவிடும். இந்நோய், முகத்தின் ஒரு பக்கத்தோடு சேர்ந்து உடலின் பகுதிகளிலும் பாதிப்பு வரலாம். அல்லது வராமலும் இருக்கலாம். 


⭕ #யாருக்கு_வரும்❓


பிறந்த குழந்தை முதல் பல் போன கிழவர் வரை எந்த வயதினருக்கும் இந்த நோய் வரலாம் என்றாலும், 40 வயதை கடந்தவர் களுக்கு முகவாதம் வரும் வாய்ப்பு அதிகம். 


👉சர்க்கரை நோய், 


👉உயர் ரத்த அழுத்தம், 


👉மிகை ரத்த கொழுப்பு, 


👉மூளையில் கட்டி 


ஆகிய நோய் உள்ளவர்களுக்கு முகவாதம் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட நான்கு மடங்கு அதிகம்.


💢 #மேலும்…… 


👉அதிகநேரம் சத்தமாக பேசுவது, 


👉கடினமான, உணவுபொருட்களை மெல்லுவது, 


👉அதிகப்படியான சிரிப்பு, 


👉தும்மல், 


👉கொட்டாவி, 


👉தலையில் அதிக சுமை சுமத்தல், 


👉தலை மற்றும் கழுத்தை, திடீரென திருப்புவது, 


👉தூங்கும் போது சரியான நிலையில் தூங்காமை, 


👉தலையணை அதிக உயரமாகவோ, குறைந்த உயரமாகவோ இருத்தல் 


ஆகிய காரணங்களால் கூட நேரலாம். ரத்தசோகை ஏற்படும்போது இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது. 


👉மகளிர் கருவுறும்போதும், 


👉குழந்தை பிறப்புக்கு பின்னும் இந்நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. 


👉குழந்தைகள், வயதானவர்கள், 


👉உடல் மிகவும் மெலிந்து இருப்பவர்கள் 


ஆகியோருக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம்.


⭕ #எப்படி_வருகிறது❓


தும்மலை அடக்குவதால் இந்நோய் வருகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.


மூளையிலிருந்து வரும் ஏழாவது கபால நிரம்பு தான் முகத்தசைகளை இயக்குகிறது. மூளையின் தண்டுப்பகுதியிலிருந்து புறப்படும் இந்த நரம்பு காதின் உட்புறம் இருக்கும் “முகக்குழாய்” எனும் மிகவும் குறுகிய பகுதியின் வழியாக கபாலத்தை விட்டு வெளியேறி, முகத்திலுள்ள தசைகளுக்கு வந்து சேருகிறது. முகத்திற்கு வந்ததும் ஐந்து கிளைகளாகப் பிரிந்து முகத்தசைகள், கண்ணீர் சுரப்பிகள், உமிழ் நீர் சுரப்பிகள், நாக்கு, உள்காது ஆகியவற்றில் உள்ள தசைகளை இயக்குகிறது. இந்த நரம்பு பாதிக்கப்படும் போது இந்த தசைகளின் இயக்கங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.


⭕ #நோய்_வருமுன்_காணப்படும் #அறிகுறிகள்❓


▶முதலில் காதின் முன்புறம் அல்லது பின்புறம் சிறிய வலி தோன்றும். இதைத் தொடர்ந்து முகத்தில் வலது அல்லது இடது பக்கக் கன்னத்தில் தொடுஉணர்வு குறையும். 


▶பார்வை மங்குதல்


▶தோலில் தொடு உணர்ச்சி குறைதல்


▶கழுத்தில் ஒருவித இறுக்கம்


▶தாடைகளில் இறுக்கம்


▶மயிர்க்கூச்செறிதல் ஆகிய அறிகுறிகள் தென்படும்.


▶நாக்கில் சுவை தெரியாது. 


▶வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்ளும். 


▶உணவு சாப்பிட்டால் அல்லது பானங்கள் அருந்தினால் ஒழுகும். 


▶உணவை மெல்லும் போது அது பாதிக்கப்பட்ட பகுதியில் பல்லுக்கும், கன்னத்திற்கும் இடையில் தங்கிக் கொள்ளும். 


▶கண்ணிமைகள் தளர்ந்து, கண் பாதி திறந்த நலையில் இருக்கும். 


▶உறங்கும் போது கூட கண்ணை முழுவதுமாக மூட முடியாது. இதனால் கண்ணின் வெண்படலம் காய்ந்து கண் எரிச்சல் ஏற்படும். 


▶சிலருக்கு தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படும்.


⭕ #நோய்வந்த_பின்_உள்ள #அறிகுறிகள்❓


* முகம் சரியான கோணத்தில் இருந்து விலகி, ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளல்


* தலை நடுக்கம் 


* பற்கள் நடுக்கம்


* கண்களை சரியாக மூட முடியாமை.


* மூக்கு கோணல் 


* பேசுவதில் சிரமம்


* குரலில் கரகரப்பு


* காது கேளாமை


* காதில் வலி


* வாசனையை நுகர முடியாமை


* உணவை, மென்று விழுங்குவதில் சிரமம்


* கழுத்து, கன்னம், பல் ஆகியவற்றில் கடும் வலி


* மறதி, பேசும் போதும, சிரிக்கும் போது வாய் கோணல்


* தூங்கும் போது ஒரு வித பயம் ஆகிய அறிகுறிகள் தென்படும்.  பெல்பால்சி எனப்படும் கடுமையான முகவாதம் முகத்தின நரம்புகளில் நீர் கோர்த்து, பலூன் போல் உப்புவதால் இந் நோய் ஏற்படுகிறது.


* வழக்கமாக ஒரு பக்கம் மட்டும் வரும் இவ்வகை வாதம் சில சமயம் இரு பக்கமும் வரும்.


* காதுக்குள், கன்னத்தில், காதுக்கு பின்புறம் சைனஸ் இடத்தில் வலி இருக்கும்.திடீரென உருவாகும்


* முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் தசைகளில் வாதம் வரும்.


* புருவத்தை உயர்த்த முமயாமை, இமைகள் மூடிக் கொள்ளல்.


* கண்களை மூட முடியாமை


* சாப்பிடும் போது புரையேறுதல்


* கண்களை மூட முயலும் போது கண்களின் விழிக் கோளம், மேலும் கீழும் உருளும். இது பெல்ஸ் பினோமினம் எனப்படும்.


* கண்களில் நீர் வடிந்து கொண்டே இருத்தல்.


* காதின் நடுப்பகுதியில் ரத்த ஓட்டத்தில், பாதிப்பு ஏற்பட்டால் நாக்கில் சுவை உணர்வு குறைந்து விடும்


* காதுகளில் இயல்பான சப்தத்துக்கு மாறாக, மிக அதிக தொனியில் இரைச்சல் கேட்கும்.


* சில சமயம் காது கேளாமை கூட நேரும்.


நோய் வந்திருப்பவர் பலசாலியாக இருப்பின் நோய் விரைவில் குணமாகும். நோய் வந்தவுடன் சிகிச்சை தரப்படினும், நோய் விரைவில் குணமாகும். 


நோயாளி பலமில்லாதவராக இருப்பினும் கண்களை மூட முடியாமல் இருந்தாலும், பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் நடுக்கம் இருந்தாலும், நோய் வந்து 3 வருடங்கள் ஆகியிருந்தாலும் வாய், கண்கள், மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தாலும் அந்த நோயாளியை குணப்படுத முயற்சி செய்து பார்க்கலாம்.


.

💊#உணவு_முறை❓💊


❌ வாதத்தை அதிகரிக்கும் உணவுகளான கொண்டைக் கடலை, நிலக்கடலை, கிழங்கு வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.


* எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்.


* நாட்டுக் காய்கறிகளை உண்பது நல்லது.


.

❌#தவிர்க்கும்_வழிகள்❓


* எளிதில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது.


* அதிக மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றைத் தவிர்ப்பது.


* பயணத்தின் போதும் பிற சமயங்களிலும் அதிக குளிர்ச்சியான காற்று முகத்தில் படாமல் பாதுகாப்பது.


* தொடர்ந்து ஏசி அறைகளில் இருப்பதை தவிர்ப்பது.


* வாதத்தை அதிகரிக்கும் உணவுகளை தொடர்ந்து அதிகம் உண்ணாமல் இருப்பது ஆகியன இந்நோய் வராமல் தடுப்பதற்கான சில வழிமுறைகள் ஆகும்.


.

🙏#உடனிருப்போரின்_பெரும்பங்கு…


இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்படும் தாழ்வுணர்ச்சி வந்துவிடும். 


சமூகத்திலிருந்து விலகி இருக்க நினைப்பர், தனிமை மேலும் மன உலைச்சலை அதிகப்படுத்தும். இதனை உடனிருப்போர் உணர்ந்து நோயாளிக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் தக்க முறையில் பேசி மன உலைச்சல் தவிர்க்கப்பட வேண்டும்.


உடல் அளவில் அவர்களது பாதிப்புக்கு உதவுவதற்கு மேலே அவர்களது மன பாதிப்பு நீக்கப்பாடுபடுவது 

மிக முக்கிமானது. குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது, மருந்து கொடுப்பதில் நேரம் தவறாமை, உணவு கொடுப்பதில் கவனம். வெளிளே அழைத்து போவது, அதிக நேரம் அவர்களுக்காக செலவிடுவது என உடனிருப்போர் பங்கு அதிகமானது மிகவும் முக்கியமானது.


.

🇨🇭#சிகிச்சை ❓


👉நோயின் பாதிப்புக்கு தகுந்தபடி குணப்படுத்தும் காலமும் வேறுபடும். 


⭐ பாதிப்பு குறைவாக இருந்து உடனே சிகிச்சையை மேற்கொண்டால் நோய் சரியாகலாம். இந்நோயுடன் வேறுபாதிப்புகள் இல்லாமலிருந்தாலும் விரைவில் குணமாகலாம்.


⭐ பாதிப்பு அதிகமாக இருந்தாலோ சிகிச்சை தொடங்க தாமதம் ஆனாலோ கூட வேறு உடல் பாதிப்புகள் இருந்தாலோ முழுதும் குணமாக காலதாமதம் ஆகும். 


முழுவதும் குணமாகமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.


ஆகவே வந்தபின் குணமடையச் சிரமம் மேற்கொள்வதை விட வராமல் பாதுகாப்பது சிறந்தது.


.

💊#எப்படித்_தடுப்பது❓


➡மிகவும் குளிர்ச்சியான பானங்களை குடிக்காதீர்கள். 


➡ஐஸ்கிரீம் போன்றவற்றை அளவோடு சாப்பிடுங்கள். 


➡பேருந்து பயணங்களின் போது முகத்தில் குளிர்ந்த காற்று படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 


➡அதேபோல் குளிர்காற்று பட்டு பாதிப்படையாமல் இருப்பதற்கு காதில் பஞ்சு வைத்துக்கொள்வது பலன்தரும். 


➡உணவை மெல்லப் பயன்படும் தசைகள் வலுப்பெற சூயிங்கம் மெல்வது உதவும்.


➡சின்னம்மை நோய்க்கு முதலிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். 


➡சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள். 


➡காது மற்றும் தொண்டை நோய்களுக்கு உடனே சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.


➡ முகவாதத்தால் பாதிப்படைந்தவர்கள் 

மற்றும் பாதிப்பு அடையாதவர்கள்

பயணத்தின்போது கண்டிப்பாக கண்ணுக்கு கண்ணாடி அணிய வேண்டும். இதன் மூலம் இமைகள் திறந்திருப்பதால் கண்களில் குளிர் காற்று படுவதையும்,தூசு மற்றும் அழுக்குகள் படுவதையும் தடுக்க முடியும்.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


       999 437 9988 ☎ 81 4849 6869


💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி