உடல் சூடு சமனாக

 🇹🇷#உடல்_சூட்டை_கட்டுப்படுத்த❗❗


🇻🇳#உதவும்_மூலிகை_மருத்துவம்❓❓


.

💊#தேவையான_பொருட்கள்❓


பன்னீர் ரோஜா - 2 எண்ணம்,


நன்னாரி வேர் - 2 கிராம்,


செம்பருத்தி பூ - 2 எண்ணம்,


பனை வெல்லம் - தேவையான அளவு,


பெருஞ்சிரகம் - 2 கிராம்,


தண்ணீர் - 100 மி.லி.


💊#செய்முறை❓


முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


பிறகு நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.


இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அதனுடன் அரைத்த நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரக பொடியை சேர்க்க வேண்டும்.


மேலும் இதனுடன் செம்பருத்தி  பூ,பன்னீர் ரோஜா,மற்றும் பனை வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


மேலும் நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இவ்வாறு உருவான நீரை உடல் சூடு அதிகமாக இருக்கும் நேரத்தில் குடித்து வந்தால் உடல் சூடு நிரந்தரமாக குறைந்து விடும்.

Comments

Popular posts from this blog

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்

இடு மருந்து