குறட்டை தீர

 🔯#குறட்டை_வர_காரணமும்❓


🔯#இயற்கை_முறையில்_தீர்வும்❓❓


தூங்கும் போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. குறட்டை விடுவதால் அருகில் உள்ளவர்களுக்கும் தூக்கம் கெடுகிறது.


✍️உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடல் எடை குறைப்பது அவசியமாகும். மது அருந்துவதால் தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே மதுவை தவிர்க்கவும்.


✍️நேராக படுப்பதால் குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பக்கவாட்டில் படுக்கவும். மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், கமலாப்பழம் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம்.


✍️தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சீரான சுவாசம் கிடைக்கும்.


✍️புகை பிடித்தால் சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாகும். குறட்டை தொல்லை அதிகரிக்கும். எனவே புகைபிடிப்பதை தவிர்க்கவும்.


✍️தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை தீரும்.


✍️இஞ்சி தேநீர் அருந்தினால் குறட்டை தொல்லை குறையும். இது தொண்டைக்கு இதமளிக்கும்.


✍️ஏலக்காய், சுவாசப் பாதையில் உள்ள அடைப்புக்களை நீக்கி நெஞ்சு சளியை குறைக்கும். குறட்டை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.


✍️2 பூண்டு பற்களை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


✍️இரவில் படுக்கும் முன் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை சில நிமிடங்கள் நுகர்ந்து வாருங்கள். இதன் நறுமணம் சுவாசப் பாதையில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து குறட்டை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி