பாகற்காய்

 பாகற்காய் சாப்பிட்டால் பறந்திடும் பல நோய்கள் (Bitter Gourd in Tamil)


நம் தமிழ் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காயான பாகற்காய், நம் ஆரோக்கியத்திற்கு எவ்விதத்தில் துணை நிற்கிறது என்பதை  தெரிந்து கொள்ளலாம் இப்பதிவில்…


பாகற்காயின் தனித்துவம் என்ன..?


 சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து

பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.


இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்குகின்றன. பாகற்காயில் நார்சத்து அதிகமாக உள்ளதால் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. இது மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை பாகற்காய் போக்குகிறது.


இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் பாகற்காய் தீர்க்கிறது. பாகற்காயை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் கலந்து இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலுக்குத் தேவையான சத்துக்கள் மட்டும் உணவில் இருந்து எடுக்கப்பட்டு வேகமாக உடல் எடையை குறைக்கிறது.


வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பாகற்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரலில் இருக்கும் நச்சு கிருமிகளை அகற்றி கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. அல்லது, தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்சனைகள் நீங்கும். பாகற்காயை சாப்பிடுபவர்களுக்கு முகத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை எளிதில் நீங்கும்.


“பாகற்காய், இரைப்பையில பூச்சிகளை கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதோட பழம் மற்றும் இலைகள்லயும்கூட நிறைய மருத்துவ குணம் இருக்கு.


பாகல்பழம் சாப்பிட்டா இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு நீங்கும். கை கால்கள்ல வர்ற எரிச்சலுக்கு பாகல் இலைகளை அரைச்சு உள்ளங்கை உள்ளங்கால்கள்ல தேய்ச்சா எரிச்சல் நீங்கும்.


பாகற்காய் விதைகள் கிருமிநாசினியா செயல்படுது. கல்லீரல் ஆரோக்கியத்துக்காக பாகல்பழங்கள சாப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும். காமாலை நோய்க்கு மருந்தா பாகல் இலைகளும் பழங்களும் வழங்கப்படுது.


#pragyagreenfarms 

#logupalanisamy 

#sailogu

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி