திப்பிலி மிளகு காரம்

 🇨🇭#மிளகாயயை_விவாகரத்து #செய்துவிட்டு……❗❗❗


🇨🇭#மிளகு_திப்பிலியுடன்_குடும்பம் #நடத்துங்கள்...❗❗❓❓


⭕ பழங்காலமாக நம் சமையல் அறையில் இருந்தது திப்பலி ..மிளகாய் வந்தவுடன் நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டது தற்செயலா திட்டமிடபட்டதா என தெரியவில்லை , மிளகாய் திப்பிலி இரண்டிலுமே காரம் இருக்கிறது ஆனால் திப்பிலியில் மட்டுமே காரமும் கூடவே சாதாரண சளி முதல் ஆண்மையை அதிகரிப்பு வரை என ஏகபட்ட மருத்துவ குணம் இருக்கிறது.


நம் காலசூழ்நிலையில் சாதாரணமாக வளரகூடிய கொடிதாவரம் இது..வீட்டிலும் மொட்டமாடியிலும் வளர்க்கலாம் எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திப்பிலி செடி வளர்க்கிறோம்..பழங்குடி மற்றும் கிராம மக்கள் அசைவ உணவிற்க்கு பின் திப்பிலி செடியின் இலையை மென்று சாப்பிடுவார்கள்,.இதன் இலை ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் அதனால்தான் 


திப்பிலி……மிளகிற்க்கு அண்ணன் 

இதன் இலைகளோ வெற்றிலைக்கு தம்பி.❗


▶சளி,


▶காசநோய், 


▶காய்ச்சல், 


▶கபம், 


▶கோழைச்சளி,   


▶இருமல்,


▶வாய்வுத் தொல்லை, 


▶வயிற்றுப் பொருமல், 


▶வறட்டு இருமல், 


▶இளைப்பு, 


▶களைப்பு,  


▶வெள்ளைப் படுதல், 


போன்ற பிரச்சனைக்கு உணவிலும் சேர்த்துகொள்ளலாம் அல்லது பவுடர் செய்து மிளகு தூள் போல பயன்படுத்தலாம். ஆனால் மிளகைவிட காரம் அதிகம்.


💊திப்பிலி தூளை நெய் அல்லது நாட்டுசர்க்கரையுடன் சாப்பிட்டால் ஆண்மை பலம் அதிகமாகும்.


💊திப்பிலி பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து வெற்றிலைசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி காய்ச்சல் இருமல் குணமாகும்.


💊திப்பிலி பொடியுடன் சமஅளவு குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி  பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால் மூலம் பெளத்திர குணமாகும்.


💊திப்பிலி 5 பங்கு தேற்றான் விதை 

 3 பங்கு இவை பொடி செய்து அரிசி கழுவிய  நீரில் காலை மாலை என இருவேளை மூன்று நாட்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகரித்து போகும் ரத்தபோக்கு  பிரச்சனை சரியாகும்.


💊ஆட்டுக்கறி கோழிகறியில் தந்தூரி சமைக்கும் போது திப்பிலி பொடியை லேசாக தூவி வேக வையுங்கள் சுவை அருமையாக இருக்கும் உடலுக்கும் நல்லது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி