படித்ததில் பிடித்தது

 உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!!


இந்த உலகத்தினால் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாது....!!


உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்.....!


1.உனது ஆடைகளை களைவர்.

2.குளிப்பாட்டுவர்.

3.புது துணி அணிவிப்பர்.

4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.

5.சுடுகாடு என்ற புதிய இடத்திற்கு எடுத்துச் செல்வர்.

6.உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர்.

7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் , உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும்.அல்லது வெளியில் வீசப்படும்.

* உன்னுடைய உடமைகள், உடைகள்.

*புத்தகங்கள்

*பைகள்

*செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும்.


.உறுதியாக விளங்கிக்கொள்,

* உனது பிரிவால் உலகம் கவலைப்படாது.

*பொருளாதாரம் தடைப்படாது.

*உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார்.

* உனது சொத்து வாரிசுக்கு போய்விடும்

* இவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தும் வெறும் கையுடன் படுத்திருப்பதை நீ உணர மாட்டாய்.


நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே....!! (பாடி எப்ப வரும்.....?)  உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள்.


எனவே உனது குடும்ப கெளரவம், பட்டம், பதவி என்று வாழும் போதே ''வாழாமல்'' உன்னை நீயே ஏமாற்றி விட வேண்டாம்.


உன்னைப்பற்றிய கவலை - 3 பங்காக்கப்படும்.


1. உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று.


2. நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்.


3. உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்.


4. மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.


5. உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்.


உன்னை விட்டு நீங்குவது.


1.உடம்பு மற்றும் அழகு

2.சொத்து

3.ஆரோக்கியம்

4.பிள்ளைகள்

5.மாளிகை

6.மனைவி.....இதில் உனது ஜீவனுக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்......?


எனவே, கீழ்க்காணும் இவ்விஷயங்களில் ஆசை வை.


1. தவறாது ஜீவ சமாதிகளுக்கு செல்!


2. தவம் செய்!


3. உனக்கான் செயல் கர்மம்! பிறருக்கான செயல் தர்மம்! எனவே தர்மம் செய்து கர்ம வினைகளை அழி!


4. கடவுளை பற்றிய நல்லதை சொல்!


5. ஆத்மாவுக்கு உரியதை பற்றி சிந்தனை செய்!


6. கடவுள் பார்க்கும்படி நல்ல செயல்கள் செய்! (நல்லதை செய்தால் கடவுள் உன்னை பார்ப்பார்)


7.யாருக்கும் கெடுதல் செய்யாதே. நினையாதே!


உலகில் ஏதோ ஒன்றை தேடுகிறாய்... 

தேட ஓடிக் கொண்டிருக்கிறாய் ஆனால், மேற்கூறியது மட்டுமேஉண்மை.... என்பதை உணராமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து வாழ்! இந்த தன்மையில் வாழும்போது ஆத்ம சக்தி வெளிப்பட்டு மாபெரும் "அதிசயங்கள்" உன் வாழ்வில் நடப்பதை கண்டு மிரண்டு போவாய்! அனைது வரங்களும் உன் மனநிலை, தகுதிக்கேற்ப மிகுந்த சோதனைகளுக்குப்பிறகு வழங்கப்பட்டே தீரும்!

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி