கல்லீரல் பாதுகாப்பு

 🔥 குடிகாரன்களுக்கும் பாக்கெட் எண்ணெய் உபயோகிப்போருக்கும் ஒரே மாதிரி கல்லீரல் Liver பஞ்சர் ஆகிறதே...ஏன் ?.


கல்லீரல் நம் உடலுக்கு மிக முக்கியமான உறுப்பு ஆகும்.


மிகவும் முக்கியமான நம் கல்லீரல் கெட்டுப் போனால் சர்க்கரை வியாதி,கிட்ணி பெயிலியர், நுரையீரல் பாதிப்பு, கொழுப்பு செமிக்காமல் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் நமக்கு உருவாகும்.


குடிகாரன்களுக்கு முதலில் சீரழிவது கல்லீரல் Liver தான்.


குடிக்காத எங்களுக்கு ஏன் கல்லீரல் பிரச்சனை வருகிறது என்று பலர் எண்ணுகிறார்களே தவிர அவர்களுக்கு பிரச்சனையின் ரூபம் புரிவது இல்லை.


மஞ்சள் தூளில் செல்ஃபாஸ், சன்செட் யெல்லோ, டார்ட்ராசின், கார்மோசின் போன்ற நிறமிகளும், அதிக நாட்கள் கெடாமலிருக்க சோடியம் பென்ஜோவிட் என்ற ரசாயனமும், சுவையைக் கூட்ட அஜினோமோட்டோவும், மசாலாப் பொடிகளில் கலந்து,உணவுகளில் கலந்து விற்று மக்களின் ஆரோக்கியத்தை நித்தமும் கெடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.


நான் சிகரெட் குடிப்பது இல்லை,

நான் சாராயம் குடிப்பது இல்லை என்று மார் தட்டுவோர்கள் செக்கு சமையல் எண்ணெய்க்கு பதில் பாக்கெட் பெட்ரோலியம் எண்ணெய் உபயோகித்தால் கல்லீரல் சட்ணி ஆகி நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் போய் விடுகிறது  என்பதை இன்னும் ஏன் மக்கள் உணரவில்லை ???


சல்பர் இல்லாமல் தேங்காயை காய வைக்கும் கொப்பரை வியாபாரம்   இன்று பெரும்பாலும்  இல்லை. இந்த சல்பர் தேங்காய் எண்ணையை  சாப்பிட்டால் முடி மட்டும் போகாதுங்க. ரத்த கொதிப்பு ஏற்பட்டு நம் இருதயமே ஓடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதை உணர்ந்து சாப்பிடுங்கள்.


உணவே மருந்து.


மேழிச் செல்வம் கோழை படாது.

உழவே தலை.


தவறாமல் பகிர்வோம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி