முருங்கை வைத்தியமும் கியூபாவும்

 *நம்மிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால்* 


*கொரானா நோயென்ன  எத்தனை தொத்து கிருமிகள் வந்தாலும் அஞ்ச தேவை இல்லை..* 


*எளிய தமிழ் வழி உணவுமுறைகள்ஒரு நாட்டின் உண்மை வழி பாடம்...*


கியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!!*


கியூபா உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது, அவர்களை உற்றுநோக்கும் உலகம் ஒரு உண்மையினை சொல்கின்றது, அது நமக்கு அவசியமானது.


1.5 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவில் கொரோனாவில் கொரோனா 2 ஆயிரம் பேரை தாக்கியது வெறும் 84 பேரை தவிர இதர மக்கள் பிழைத்தெழுந்தார்கள், கொரோனா இல்லா நிலை நோக்கி கியூபா வேகமாக சென்று கொண்டிருக்கின்றது.


இது எப்படி சாத்தியமாயிற்று என்றால் அவர்கள் மருத்துவம் மேற்குஉலகம் சார்ந்ததல்ல *கிழக்குஉலகம் மற்றும் தமிழ் வழி மூலிகை சார்ந்தது*.


காஸ்ட்ரோவும்,  மருத்துவரும், போராளியுமான சேகுவாரும் அன்றே செய்த ஏற்பாடு அது, சேவுக்கு பின் காஸ்ட்ரோ அதை செவ்வனே செய்தார். எல்லா வகை தமிழ் மருத்துவ மூலிகைகளையும் கியூபாவுக்கு கொண்டு சென்றார்கள், மூலிகை தோட்டம் வீடுகளில் கட்டாயமாக்கப்பட்டு அவைகளை பயன்படுத்த பயிற்சி வகுப்புகள் அரசாங்கம் நடத்தி 100% சதவீதம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். வேப்பமரங்கள், முருங்கை , அகத்தி மரங்கள் ஏராளம் பயிரிட்டனர்.


இந்நிலையிலும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க, பெரும் ஆய்வுகளை செய்ய உத்தரவிட்டார், அப்பொழுது ஒருவித வயிற்றுபோக்கு நோய் ஏற்பட்டு கியூபாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது


காஸ்ட்ரோவுக்கு கொடுக்கபட்ட அறிக்கை *நோய் எதிர்ப்பு சக்திக்கு முருங்கை மரத்து காயும் இலையும் மருந்து* எனவும் அந்தவகை முருங்கை இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இருப்பதாகவும் சொல்லபட்டது.


தமிழ்நாட்டுக்கு வந்த கியூப குழு அவ்வகை முருங்கைகளை கியூபாவுக்கு கொண்டு சென்றது, பெரும் பண்ணைகள் அமைக்கபட்டன, *முருங்கை இலை நேரடியாகவும் இலை காயவைத்து பொடிசெய்தும் கொடுக்கபட்டன‌*, இத்துடன் இயற்கை காட்டுத் தேன் பயன்படுத்தி, 

கியூபா மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அரசாங்கம் உதவி செய்து. அதன் பின் பெரும் நோய்கள் இல்லை, மக்கள் ஆரோக்கியமாக வாழ வழி வகை செய்தது.


இப்பொழுது கொரோனா காலத்திலும் உலகம் அதை மறுபடியும் உணர்கின்றது.


ஆம், கொரோனா என்பது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதோரை மட்டும் குறிவைத்து தாக்கும் நோய். அறுவை சிகிச்சை,நீரிழிவு என சிக்கிய நோயாளிகள் தின்னும் மாத்திரை கூடுதலாக ஆண்டிபயாட்டிக் இம்சைகள் அவர்கள் உடலை வலுவற்றதாக்குகின்றது. மேலும் ரசாயனம் கலந்த உணவை சாப்பிடுவதும் உடல் பல வீனம் அடைகிறது.


இதனால் அவர்கள் எளிதில் மரணமடைகின்றார்கள் என்பதுதான் விஷயம், நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெருகியிருக்கும் உடலில் கொரோனாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை.


*இறைவன் கருணையுள்ளவன் அவன் நோய் எதிர்ப்பு சக்தியினை முருங்கை , வேம்பு, அகத்தி கீரை, அருகம்புல், கீரைகள் என மிக எளிதான வகையில் தமிழகத்திலே வைத்திருக்கின்றான்.*


ஆனால் அதே தமிழகம் அதை உண்ணாமல் காபி, டீ, கொக்க கோலா பரோட்டா , நூடுல்ஸ், ரசாயன ம் கலந்த பிஸ்கட் என எதிலெல்லாமோ சிக்கி தன் ஆரோக்கியத்தை இழந்திருக்கின்றது.


தமிழர்களும் இந்தியர்களும் கியூபாவிடம் இருந்து பாடம் கற்பது நல்லது.


ஆம், கியூபாவின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை கீரை உங்கள் காலடியிலே கிடக்கின்றது, அதை விடாதீர்கள்


இன்னொரு விஷயமும் சொல்கின்றார்கள், நுரையீரல் பலமிழந்திருப்பவர்களை கொரோனா எளிதில் தாக்கும் அதற்கு மிகபெரும் நிவாரணம் அகத்தி கீரை


ஆம் அகத்திகீரை நுரையீரலை வலிமையாக்கும்


இந்த இரு கீரைகளும் இப்போதைக்கு அவசியமானவை, தமிழர்கள் 7 நாளும் 7 வகை கீரைகளை நாளுக்கு ஒன்றாக சேர்த்தார்கள் என்கின்றது பழம் தமிழ் உணவு முறைகள்.


அது உண்ணும் வரை ஆரோக்கியமாக இருந்தார்கள், பெரும் அணை கட்டவும் கல்தூண்களை எளிதாக சுமக்கவும் அவர்களுக்கு வலு இருந்தது.


இப்பொழுது கொரோனா காலம் எவ்வளவோ விஷயங்களை கற்று கொடுக்கின்றது, அது பழந்தமிழரின் மருத்துவ உணவாக இருந்த கீரைகளின் அவசியத்தை சொல்கின்றது.


இந்தியாவில் சர்வ சாதாரணமாக காணப்படும் விஷயம் முருங்கை கீரை அகத்தி கீரை


ஒரு நாள் விட்டு ஒருநாளாவது இதை உணவில் சேருங்கள், ருசிக்காக இல்லாமல் மருந்துக்காக சேருங்கள். இன்றிலிருந்தாவது தொடங்குங்கள்


கொரோனா நம் பக்கமே வராது.


கொரோனா என்பது ஒரு உயிர், உயிர் என்பது தெய்வத்தால் மட்டும் படைக்கபடுவதால் அது சில நன்மைகளை அல்லது எச்சரிக்கைகளுக்காக மட்டுமே உலகில் அனுமதிக்கபடும்.


கொரோனா என்பது தெய்வத்தின் செய்தி


குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் இவை நுரையீரலை கெடுக்கும். காம விவகாரங்களில் கட்டுபாடோடு இருங்கள் அது உடலை கவசமாக்கும்


நாக்குக்கு அடிமையாகி கண்டதையும் உண்ணாதீர்கள், குறிப்பாக *முன்பே சமைத்த உணவினை உண்ணாதீர்கள்*, 


*பேக் அயிட்டம் எனப்படும் உணவுகளை உண்டால் உடல் கெடும் என்பதே கொரோனா சொல்லும் செய்தி*


ஆம் *அன்றாடம் சமைத்த உணவே ஆரோக்கியம் காக்கும் என்கின்றனர் தமிழக சித்தர்கள்.*


இப்போது உலகம் சொல்லும் செய்தி நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா தாக்காது, அந்த சக்தியினை கூட்டும் விஷயம் முருங்கையில் மிகுந்துள்ளது, அகத்தி கீரையில் வயிறு நுரையீரல் பாதுகாப்பும் உண்டு.


இது போக அருகம்புல்லையும் சொல்கின்றார்கள் , அருகம்புல் சாறு ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கும் , ரத்தம் சுத்தமான உடலில் ஒரு நோயும் தாக்காது


 நம் கீரையின் மகத்துவத்தை நம்மை விட கியூபர்கள் படித்திருக்கின்றார்கள். இன்றுவரை போதை மருந்து இல்லா பூமி அது, கூடவே *முருங்கையினை போற்றும் மண் அது.*


கீரைகளை நிறைய சேருங்கள், முருங்கையினை தவிர்க்காதீர்கள், உண்டபின் ஒரு துண்டு கசப்போடு அது வேப்பம்பூ துவையலோ இல்லை பாகற்காய் துண்டோ அல்லது பசு நெய்யில் வதக்கிய சுண்டைக்காய் சேர்த்து, அதோடு உணவினை முடியுங்கள், ஒரு நோயும் அண்டாது.


ஆரோக்கியம் என்பது தமிழருக்கு அவர்கள் வீட்டின் முன்பும் பின்பும் வேப்பிலை மற்றும் முருங்கையாக நிற்கின்றது, அதுபோக கீரையாகவும் அருகம்புல்லாகவும் தரையில் கிடக்கின்றது


அதை கண்டெடுங்கள் போதும், வீணான மருத்துவ செலவும் இதர கலக்கங்களும்  உங்களை அண்டாது, உலகுக்கே வழிகாட்டுவீர்கள்.


படியுங்கள். பகிருங்கள். பாதுகாப்பாக.. ஆரோக்கியமாக இருங்கள்.

சத்திய யுகம் காப்போம் வாருங்கள் தெய்வீக நண்பர்களே.. நாம் ஒற்றுமையாக செயல்பட்டு மகிழ்ச்சியாக வாழலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி