இருமல் காரணம்

 மீள் பதிவு.


இருமலின் வகைகள் மற்றும் அது உருவாகும் காரணங்கள் பற்றி huang di மற்றும் Qi Bo இருவரும்

(The Yellow Emperor’s Classic of medicine chapter 38) கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டனர்.


ஹுவாங் டி கேட்கிறார்.

 “நுரையீரல் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது  இருமல் வருவது ஏன்? ” 


Qi Bo பதிலளித்தார், 

இது நுரையீரலோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல,

ஐந்து Zang மற்றும் ஆறு Fu உறுப்புகளில் ஏதேனும் ஒன்று சமநிலையற்று இருக்கும் போது ஒருவருக்கு இருமல் ஏற்படலாம்.


ஹுவாங் டி கேட்டார், 

"பல்வேறு வகையான இருமல், அவற்றின் நோயியல் மற்றும் குறிக்குணங்கள் பற்றி எனக்கு விளக்க முடியுமா?


Qi bo பதிலளித்தார், 

தோல் மற்றும் உடலின் ரோமங்கள் அனைத்தும் (தலைமுடியை தவிர) வெளிப்புற உடலில் உள்ள நுரையீரலின் வெளிப்பாடுகளாகும். 

இவையே வெளிப்புற நோய் காரணிகளிடமிருந்து  உடலைக்காக்கும் முன்வரிசை பாதுகாப்பாளர் எனலாம். 

எப்போது தோலுக்கடியில் பாயும் பாதுகாப்பு சக்தியானது (Wei Qi) தேக்கமடைந்து,  நோய்க்காரணிகள் தாக்குகிறதோ, அப்போது நுரையீரலின் Qi ஐ பரவச்செய்யும் பணி பாதிக்கப்படும். 

இவ்வாறு நுரையீரல் பாதிக்கப்படும்போது இருமல் ஏற்படும், 

மேலும் குளிர்ச்சியான மற்றும் சமைக்காத உணவுகளை தொடர்ந்து அதிக அளவில் உட்கொள்வதால் வயிற்றில் குளிர்ச்சி ஏற்பட்டு stomach Qi தேக்கமடைகிறது, பின்னர் அந்த குளிச்சியானது மண்ணீரல் Qi மற்றும் Nutritive Qi யுடன் நுரையீரலை நோக்கி மேலெழும்பி நுரையீரலில் தேக்கத்தையும் இருமலையும் உண்டுபண்ணும்.


மற்ற ராஜ உறுப்புகளின் சமநிலையற்ற தன்மை காரணமாகவும் இருமல் உண்டாகும், பொதுவாக இதுபோன்ற இருமல் ஒரு ஆண்டின் ஏதாவது சில நாட்களில் இருக்கும், பெரும்பாலும் இவ்வகையான இருமலுக்கும் புறக்காரணிகளால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அதனால் வரும் இருமலுக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை, பண்நெடும்காலமாகவே சுற்றுப்புற சூழலோடு மனிதன் இணைக்கப்பட்டு இருக்கிறான், இதன் காரணமாக புறக்காரணிகளால் எளிதில் பாதிப்பும் அடைகிறான், அந்தவகையில் எப்போதெல்லாம் yin உறுப்புகள் குளிர்ச்சி எனும் நோய்காரணியால் தாக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அவை மனிதனிடம் நோயாக வெளிப்படும், நோய்காரணியின் தாக்கம் மேலோட்டமாக இருக்கும் போது இருமல் ஏற்படும், 

அதன் தாக்குதல் பலமானதாக இருந்து குளிர்ச்சியானது உட்பாதி உடம்பில் நுழையும் பட்சத்தில் சிலருக்கு வயிற்று வலியும் சிலருக்கு வயிற்றுப்போக்கும் உண்டாகும்.


இலையுதிர்காலத்தில்(Autumn) குளிர் (cold) எனும் நோய்காரணி தாக்கும் போது ​​நுரையீரல் தான் முதலில் பாதிக்கப்படுகிறது,


வசந்த காலத்தில்(spring) அது கல்லீரலை முதலில் பாதிக்கிறது,


கோடையில்(summer) அது இதயத்தையும், 

கோடையின் பிற்பகுதியில்(late summer) இது மண்ணீரலலையும்,


 குளிர்காலத்தில் (winter) சிறுநீரகத்தையும் முதலில் பாதிக்கிறது,  இந்த அனைத்து நிகழ்வுகளின் பின்னாலும் குளிரானது நுரையீரலுக்கு கடத்தப்படுகிறது, 

இதனாலும் இருமல் ஏற்படும்.


ஹுவாங் டி கேட்டார், 

"ஒருவர் இந்த வகை இருமலால் தான் பாதிக்கப்படுள்ளார் என்பதை எவ்வாறு வேறுபடுத்துவது?"


Qi Bo பதிலளித்தார், 

நுரையீரல் பிரச்சினைகள் காரணமாக  இருமலானது ஏற்படும்போது (dyspnea_டிஸ்பீனியா) சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும், எப்போதாவது 

(Hemoptysis_ஹீமோப்டிசிஸ்) சளியில் இரத்தம் வெளியேறும், சுவாசிக்கும் போது மூக்கில் ஒருவித ஒலி உண்டாகும். 


இதய பிரச்சினைகள் காரணமாக வரும் இருமலோடு நெஞ்சு பகுதியில் வலியும், தொண்டையில் சுறுக்கமும் (தொண்டைக்கட்டு) உருவாகும்.


கல்லீரல் பிரச்சினைகள் காரணமாக இருமல் ஏற்படும் போது 

ஹைபோகாண்ட்ரியாக் பகுதியில் வலி, அசைவற்ற தன்மை மற்றும் நிறைந்திருக்கும் உணர்வு(fullness) ஏற்படும்.


மண்ணீரல் கோளாறுகளால் உண்டாகும் இருமலோடு வலதுபக்க விலா எலும்புகளின் கீழ் வலி ஏற்பட்டு அதன் வீச்சு தோள்பட்டை எலும்புவரை பரவி அதன் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும். இருமலும் அதிகரிக்கும். 

சிறுநீரகத்தின் பிரச்சனை காரணமாக இருமல் வந்தால் முதுகுவலியும், இருமும்போது சளி அல்லது உமிழ்நீர் வெளியேறும்.


ஹுவாங் டி கேட்டார், 

"ஆறு Yang உறுப்புகளின் பாதிப்பால் உண்டாகும் (FU) இருமலை  எவ்வாறு வேறுபடுத்தி அறிவது?"


Qi Bo பதிலளித்தார்,

 ஐந்து யின் உறுப்புகளின் பாதிப்பால் உண்டான இருமலானது நாள்பட்டு நீடிக்கும் பட்சத்தில், அவை ஆறு yang உறுப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்படும்.


மண்ணீரல் சார்ந்த இருமல் நீடித்தால் அது வயிற்றுக்கு (stomach) மடைமாற்றம் பெறும்,

இது குமட்டல் மற்றும் வாந்தியாக வெளிப்படும். 

கல்லீரல் காரணமான இருமல் நாள்பட்டு இருந்தால், 

அது பித்தப்பைக்கு அனுப்பப்படுகிறது, 

இதனால் இருமல் மற்றும் பித்தவாந்தி ஏற்படும். 


நுரையீரல் சார்ந்த இருமல் நீடித்து இருந்தால், அது பெருங்குடலுக்கு அனுப்பப்படும், இதனால் பெருங்குடல் கட்டுப்பாட்டை இழந்து, கழிவு பொருட்களை அடக்க முடியாமல் வெளியேற்றும் நிலை உண்டாகும். 

இதய பிரச்சனையால் ஏற்பட்டஇருமல் நாள்பட்டதாக நீடிக்குமானால், அது சிறுகுடலுக்கு திசைதிருப்பப்படும், 

இது வாய்வு பிரச்சனை, வயிற்றுபொறுமல் போன்ற பிரச்சனைகளை தருகிறது. 


சிறுநீரக பிரச்சனையால் உண்டான இருமல் நீடித்து நிலைத்திருக்குமாயின் அது சிறுநீர்ப்பைக்கு கொண்டு சேர்க்கப்படுகிது,

இதனால் சிறுநீரை அடக்க முடியாத நிலை ஏற்படும்.

 இந்த Yang உறுப்புகள் சார்ந்த இருமல் தொடருமானால், அவை மூவெப்ப மண்டலத்திற்கு அனுப்பப்படும், இதனால் இருமல், பசியின்மை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிகோலும். 

மொத்தத்தில் ஒவ்வொரு வகையான 

இருமலுக்கும் மூல காரணமான நோய்காரணியானது, முதலில்  வயிற்றில்(stomach) தான் குவியும்,

பின்னர் சேனல்கள் வழியாக நுரையீரலுக்கு நகரும், இதனால் பின்னோக்கி நகரும் Qi யுடன் (rebellious qi) இருமல் ஏற்படும், 

முக வீக்கம், அதிகப்படியான கபம், மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


ஹுவாங் டி கேட்டார், 

"இதற்கான சிகிச்சை முறை என்ன?"


Qi Bo பதிலளித்தார்,

 ஐந்து Yin உறுப்புகளின் கோளாறுகள் காரணமாக ஒருவருக்கு இருமல் ஏற்படுமேயானால், அவருக்கு சிகிச்சையளிக்க shu-stream மற்றும் Back-shu புள்ளிகளை தெரிவு செய்யவேண்டும், 


Yang உறுப்புகளின் கோளாறுகள் காரணமாக உருவான இருமலுக்கு சிகிச்சையளிக்க வேண்டுமெனில் Lower He-sea புள்ளிகளைப் பயன்படுத்தலாம். 

வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுமானால் அதன் காரண உறுப்பை கண்டறிந்து, பின்னர் அந்த உறுப்பின் சக்தியோட்ட பாதைகளில் உள்ள புள்ளிகளில் சிகிச்சை செய்ய வேண்டும்.


மொழியாக்கம்.

மகேந்திரன்.

ஜேடர்பாளையம்.

நாமக்கல்.

cell.9597820861

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி