ஆழ்வார்கள்

 12 ஆழ்வார்கள்:


தமிழ் மொழியை, சமஸ்க்ருதத்திற்கு நிகராக பெருமைப்படுத்தியவர்கள் 12 ஆழ்வார்கள்.


ஸ்ரீமன் நாராயணனே முழு முதற் கடவுள் என்று நான்மறை வேதத்தின் உண்மையை தமிழில் பாசுரமாக செய்த மகாத்மாக்கள்.


தமிழ் இன்று வரை, நம்மிடம் ஓரளவாவது இருக்க  ஆழ்வார்கள் செய்த தமிழ் தொண்டே காரணம்.


12 ஆழ்வார்கள், 4000 திவ்ய பிரபந்தங்கள் தமிழனுக்கு தந்தார்கள்.


இந்த தமிழர்களை பற்றி சிறு குறிப்பு இதோ:


1. பொய்கை ஆழ்வார்.


இவர் காஞ்சிபுரத்தில் உதித்தார். (முதல் திருவந்தாதி இயற்றினார்)


2. பேயாழ்வார்.


இவர் மைலாப்பூர் - சென்னையில் உதித்தார்(இரண்டாம் திருவந்தாதி இயற்றினார்)


3. பூதத்தாழ்வார்.


இவர் மகாபலிபுரத்தில் உதித்தார்.(மூன்றாம் திருவந்தாதி இயற்றினார்)


4. திருமழிசை ஆழ்வார்.


இவர் திருமழிசை ஊரில் உதித்தார். (நான்முகன் திருஅந்தாதி, திருச்சந்த விருத்தம் இயற்றினார்)


நான்கு ஆழ்வார்களும், ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்துக்கும் முன் த்வாபர யுகத்தில் இருந்தவர்கள். இவர்களுடைய அந்தாதி ஸ்ரீ நாராயணனை குறித்தது. முதல் மூவரும் திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் சந்தித்தனர்.


ஸ்ரீ கிருஷ்ண அவதாரம். கிருஷ்ண அவதாரம் தொடர்ந்து வந்த ஆழ்வார்கள் 8.


5. மதுரகவி


இவர் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடியில் உதித்தார். இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்ற அந்தணர். (கண்ணி நுண் சிறுத்தாம்பு இயற்றினார்)


6. நம்மாழ்வார்.


இவர் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடியில் பிள்ளைமார் சமுதாயத்தில் உதித்தார்...


நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார்.


நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு.


அவை, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.


இவை ரிக், யஜூர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக சொல்வார்கள்.


5000 வருடங்களுக்கு முன், மதுரகவி என்ற அந்தணர், ஞானத்தில் சிறந்த பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்த நம்மாழ்வாரை தன் ஆசாரியனாக ஏற்றார்.


ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி தன் ஆச்சாரியன் நம்மாழ்வாரை போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.


4000 திவ்யபிரபந்தங்களில் நம்மாழ்வார் மட்டுமே 1296 இயற்றினார்.


ஆழ்வார்களில் மிக மிக முக்கியமானவர் நம்மாழ்வார் மாறன், சடகோபன், குருகூர் நம்பி, குழந்தை முனி, ஸ்ரீவைணவக் குலபதி என்று பலவாறு நம்மாழ்வார் போற்றப்படுகிறார்.


பிறந்தது முதல் 16 வருடங்கள் யாரிடமும் பழகாமல், பேசாமல் இருந்த நம்மாழ்வார் என்ற சடகோபன், மதுரகவி ஆழ்வார் வந்தபின் அவரிடம் பேசினார். நம்மாழ்வார் சொல்ல மதுரகவி ஆழ்வார் சொல்ல நமக்கு கிடைத்தது தான், நம்மாழ்வாரின் 1296 திவ்யபிரபந்தம்.


மதுரகவி இல்லையேல், நம்மாழ்வார் யார் என்பதும் தெரிந்து இருக்காது, இவரின் 1296 திவ்யபிரபந்தமும் கிடைத்து இருக்காது.


7. குலசேகர ஆழ்வார்.


இவர் சேர அரசன். இவரின் ஆட்சியின் கீழ் கூடல் (மதுரை), கொல்லி (உறையூர், திருச்சி) போன்ற தேசங்களை ஆண்டு வந்த, க்ஷத்ரிய அரசன். (பெருமாள் திருமொழி இயற்றினார்)


8. பெரியாழ்வார்.


இவர் மதுரைக்கு அருகே உள்ள வில்லிபுத்தூரில் உதித்தார். விஷ்ணு சித்தர் என்றும் அழைப்பர். பெரியாழ்வார் மதுரையில் உள்ள கூடலழகர் கோயிலில் குடிகொண்டுள்ள பெருமாளை பார்த்தே திருப்பல்லாண்டு பாடினார். பெருமாளுக்கே மற்றவர் கண் பட்டு விடுமோ என்று இவர் பாடிய திருப்பல்லாண்டு, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசை க்ரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை 4000 திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.


பெரியாழ்வார், திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி இயற்றினார்.


9. ஆண்டாள்.


இவள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்ணாக, துளசி செடியின் அடியில் கிடைத்தாள். பெரியாழ்வார் வளர்ப்பு பெண்ணாக வளர்ந்தாள். 100 வருடங்களுக்கு முன்பு தான் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் நடந்து இருந்தது. கிருஷ்ண பக்தி ஆரம்பித்து இருந்த காலம் இது. ஆண்டாள் 'திருப்பாவை', 'நாச்சியார் திருமொழி' இயற்றினாள்.


வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் ஆவார்.


ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.


10. தொண்டரடிப் பொடி ஆழ்வார்.


இவர் சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் உதித்தவர். இது பாபநாசம் தாலுக்கா தஞ்சாவூர் அருகே உள்ளது.


இவர் 'திருமாலை' மற்றும் 'திருப்பள்ளி எழுச்சி' இயற்றினார். ஸ்ரீரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார். இவர் இயற்றிய 'திருப்பள்ளி எழுச்சி' மார்கழி மாதத்தில் திருமலை உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் பாடப்படுகிறது.


பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர், ஆழ்வாரின் 'திருமாலை' எனும் நூலை படித்தால் போதும். இதையே "திருமாலை அறியாதர் திருமாலையே அறியாதர்" எனும் வழக்கு இவரின் படைப்புகளுள் ஒன்றான திருமாலையின் உயர்வை செப்புகிறது.


11. திருப்பாண் ஆழ்வார்.


இவர் பாணர் குலத்தில் திருச்சி அருகே உள்ள உறையூரில் உதித்தார்.


இவர் 'அமலன் ஆதிப்பிரான்' ஸ்ரீரங்க அரங்கனை பார்த்து இயற்றினார்.


இந்தியாவில் மகாவீரர் பிறந்தார். ஜைன மதம் உருவாக்கப்பட்டது.


இந்தியாவில் கௌதம புத்தர் பிறந்தார். பௌத்த மதம் உருவாக்கப்பட்டது.


சந்திரகுப்த, அசோக சக்ரவர்த்தி போன்ற வலிமைமிக்க அரசர்கள் கூட இந்த பௌத்த, ஜைன மதங்களில் ஈர்க்கப்பட்டனர்.


அந்தோ பரிதாபம் !! இந்தியாவுக்கு வந்த கேடு !


அரசர்கள் சந்யாசி தர்மத்தை எடுக்க, அரசர்களும், படை வீரர்களும் சோம்பேறிகள் ஆகி கொண்டிருந்த காலம்... இந்தியர்கள் கேடு காலம் ஆரம்பிக்க விதை போடப்பட்டது இந்த சமயமே.


12. திருமங்கை ஆழ்வார்.


இவர் பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர்.


தஞ்சாவூர் சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.


இவர் 'பெரிய திருமொழி', 'திருக்குறுந் தாண்டகம்', 

'சிறிய திருமடல்',

'பெரிய திருமடல்', 'திருவெழுக்கூற்றிருக்கை' போன்ற பிரபந்தங்கள் இயற்றினார்.


பௌத்த, ஜைன மதத்தின் காரணமாக, போர் பயிற்சியை விட்டு, கவனத்தை சிதற விட்டு கொண்டிருந்தார்கள் அரசர்கள். தமிழ்நாட்டு மன்னர்கள்   வைஷ்ணவர்களாக மட்டுமே இருந்ததால், இந்தியாவுக்கு வரப்போகும் பெரும் பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பித்தனர் என்று சரித்திரம் காட்டுகிறது.


ஆப்கான் நாட்டில் இருந்த அமித் சூரி என்ற ஹிந்து அரசன் பௌத்த மதத்தை ஏற்று இருந்தான்.


முதல் இஸ்லாமிய படையெடுப்பின் போது, வீரம் குறைந்த பௌத்த மதத்தை விட்டு, இஸ்லாமியன் ஆனான்.


இவன் பரம்பரையே உருவாக்கியது முதல் இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில். முகம்மது கோரி போன்றவர்கள் இவன் சந்ததியினர் என்று மறுக்க முடியாதது. சரித்திரம் தெரிந்து கொள்வது அடிப்படை தேவை.


தமிழ்நாடு இன்றும் தமிழ் நாடாக இருப்பதற்கு காரணம் இந்த 12 ஆழ்வார்கள் தான்.


இவர்கள் எழுதிய பாசுரங்கள் தமிழனுக்கு தெரிய வில்லை என்றால், தமிழ் இனி சாகும் என்பதில் சந்தேகம் இல்லை.


நாத்தீகர்கள் தமிழை வளர்க்கிறேன் என்று கடந்த 60 வருடங்களில், பாசுரங்கள், பிரபந்தங்கள் அளித்த ஆழ்வார்களை புறக்கணித்து, சாதித்து கிழித்தது தமிழை மெல்ல அழித்தது தான்.


சமஸ்க்ருதம் தெரியாது, ஏன் நாங்கள் படிக்க வேண்டும் என்று கேட்கும் தமிழன், உண்மையான தமிழ் பற்று இருந்தால், இத்தனை வருட காலம் தமிழை காப்பாற்றி தந்த பாசுரங்கள், பிரபந்தங்கள் அளித்த ஆழ்வார்களை முதலில் மதிக்க வேண்டும்.


தமிழன், தமிழை காப்பாற்ற முதலில் செய்ய வேண்டியது இவர்கள் கொட்டி தந்துள்ள பாசுரங்களை ஒன்றையாவது படித்து தங்கள் மகனுக்கும், மகளுக்கும் சொல்லித்தருவதே


தமிழை இன்று வரை உயிரோடு வைத்து இருந்த ஆழ்வார்களை மதிப்போம்.


 💐 ஓம் நமோ நாராயணாய🙏

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி