கழிவுநீக்கம் அக்குபஞ்சர்

 கழிவு நீக்கம் என்றால் என்ன?

 

பல இந்திய அக்கு ஹீலர்களின் பிரதான ஆயுதமாக இருப்பது கழிவு நீக்க தத்துவம் என்றால் அது மிகையல்ல.

முதலில் எது கழிவு நீக்கம்? 

எது நோய் என்று புரிந்துகொள்ளவேண்டும். 


 இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து பேதி ஆவதையோ, வாந்தி எடுப்பதையோ, காய்ச்சல் ஏற்படுவதையோ அல்லது கட்டுக்கடங்காமல் சிறுநீர் போய்க்கொண்டு இருப்பதையோ எப்படி கழிவு நீக்கம் என்று எடுத்துக் கொள்ள முடியும்?  


"உடலின் மொழியை புரிந்து கொள்வதை விட உயிரின் மொழியை புரிந்துகொள்ளுங்கள்" 

இதை புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு துயரரின் நோயை களைய முடியும்.


இந்த விஷயத்தை "ஹூவாங் டி நீ சிங்" ல் மிகத் தெள்ளத் தெளிவாக எழுதிவைத்துள்ளார்கள்.


அதில் தொடர் வயிற்றுப்போக்கு, கட்டுப்பாடற்ற சிறுநீர் போக்கு குறித்து குறிப்பு உள்ளது.


 அவ்வாறு போவதை அவர்கள் கழிவு நீக்கம் என்று குறிப்பிடாமல் அதை disorder ( இயக்கச் சீர்கேடு) என்கிறார்கள்.


அந்த இயக்கச்சீர்கேட்டை உடனடியாக சரிசெய்யவேண்டும், இல்லையெனில் அதனால் ஐந்து யின் உறுப்புகளின் இயக்கம் சீர்குலைந்து உயிரிழக்கநேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.


If the intestines and stomach can't store the food and fluids and diarrhea occurs. This is because the door to the house is not regulated.


If there's incontinence, the bladder cannot store and govern the turbid Fluids.


The above mentioned "disorders" should be to restored normalcy, if the five zang organs also restore their normal functioning. 


If they cannot do so, then the condition will worsen and eventually lead to death.


அக்குபங்சர் பற்றி பேசும் ஒரிஜினல்  அக்குபஞ்சர் நூல்கள் எதிலும் இந்த கழிவு நீக்கத் தத்துவம் பற்றிப் பேசப்படவில்லை... அப்படியிருக்க எந்த "அக்குபங்சரின் தந்தை" 😜இதை அதில் புகுத்தியது?


கழிவுகளின் தேக்கமே நோய் என்றால், ஒரு ஆரோக்கியமான உடலில் எப்படி கழிவு உருவாகும்? 

உறுப்புகளின் இயக்க குறைவினால் தான் கழிவுகள் தேங்குமே தவிர கழிவுகள் தேங்குவதால் மட்டுமே உறுப்புகள் பாதிக்கப்படும் என்பது அவ்வளவு சரியல்ல.


முதலில் உட்புற மற்றும் வெளிப்புற நோய் காரணிகளால் உறுப்புகள் பாதிப்படைகிறது, 

அதன் காரணமாக கழிவுகள் தேங்கி வெளியேறுகிறது.


இதன் அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.

step 1. உறுப்பு பாதிப்பு.

step 2. கழிவு தேக்கம். 


இதில் இரண்டாவது நிலையில் தான் நிலையில் தான் கழிவு நீக்கம் என்பது வருகிறது.

ஆகவே "தொடர்ச்சியான" கழிவு நீக்கம் என்பதே நோய்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


சரியான முறையில் அக்குபங்சர் சிகிச்சை செய்தால் கழிவுகள் அனைத்தும் நீங்க வேண்டிய வழியில் நீங்க வேண்டிய நேரத்திலேயே நீங்கிவிடும். அதற்காக over time, extra time வேலைகள் பார்த்து கழிவுகள் நீங்கினால் அது நோயாகவே கருத வேண்டும். 


அக்குபங்க்சர் என்றால் அது.. 


* Yin - Yang and its manifestations

* Five vital substances

* Internal & External pathogens and its pathophysiology in human

* Five phases and it's transformations 

* Zang fu organs and it's meridian theories


இந்த முக்கிய ஐந்து அம்சங்கள் இருக்கவேண்டும். அதுதான் அக்குபங்சர்.


மேற்கண்ட அம்சங்களில் எதையாவது ஒன்றை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக 


"கழிவு நீக்கம்"

"உடலே மருத்துவர்"

"இயற்கையே குணமாக்கும்"


இப்படி ஏதாவது தத்துபித்து தத்துவத்தை அதில் புகுத்தினால்....


அது அக்குபங்க்சர் அல்ல அதன் பெயர் "மக்குபங்சர்".


மேலே குறிப்பிட்ட குறைந்த பட்ச அம்சங்களைக் குறித்த பாடத்திட்டம் இல்லாத எந்த நிறுவனத்திலும் பயிற்றுவிக்கப் படுவது அக்குபங்சரே அல்ல.


எண்ணம்.         உமாபதி

எழுத்து.             முருகானந்தம்

தொகுப்பு.         மகேந்திரன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி