Posts

Showing posts from June, 2021

விசக்கடி வைத்தியம்

 விஷ ஜந்துக்கள் கடித்தால் அவசர மருத்துவம் : விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் . கண்ணாடி விரியன்:-  பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க. தேள்:-             கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும். வண்டு:-  கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர். சிலந்தி:-         ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும். வெறிநாய்:-         மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும். எலி:-  வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது. பூனை:-  தூய்மைய...

தினசரி வாழ்வியல்

 உடலில் நல்ல மாற்றங்கள் நிகழ...  சிவப்பு அழகு வேண்டுமா? என்று கேட்டு, எத்தனையோ வகையான கிரீம்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன! உடற்பயிற்சியே செய்யாமல், நொறுக்குத் தீனிகளையும் கைவிடாமல், உடல் எடை குறையும் என்றுகூறி விதவிதமான மாத்திரைகள்- தைலங்கள் விற்பனையாகின்றன! எப்போதும் ஒலி- ஒளிபரப்பாகும் அழகு குறிப்புகளைப் பார்த்து, அதை அரைகுறையாக கடைபிடித்து உலக அழகி ஐஸ்வர்யாராய் போல் ஆக வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அப்படி ஆசைப்படுகிறவர்களுக்கு தம் உடலில் இருக்கும் ஒரு பிரதான உறுப்பே அழகு, ஆரோக்கியத்தின் ஊற்று என்பது தெரியுமா?! மனித உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. மனித உடலில் இருக்கும் பஞ்ச பூதங்கள் பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத சக்தியை வாங்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கின்றன. எப்படியென்றால்... நம் தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று உறுப்புகளைச் சேரும். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே இந்த உயிர் சக்தி பிரதானமாய் செல்லும். உதாரணமாக நு...

வெள்ளையனின் பொய்யும் புளுகும்

 *காலச்சக்கரம் சுழன்று நம்மை பல நூற்றாண்டிற்கு பின்பு எப்படி மாற்றி வீணடித்துள்ளது என்பதை பார்ப்போம்.* *ஆங்கிலேய கிறிஸ்தவனின் ஏமாற்று வேலையால் நிகழ்ந்த  குற்றங்கள் தான் இவைகள்.* *பொய்யை தெரிந்துகொள்வதற்கு முன் நம் நாட்டினுடைய உண்மையான பலம் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம் வாருங்கள்.* *பாட்டன், முப்பாட்டன், சின்ன பாட்டன், பெரிய பாட்டன், சின்ன அப்புச்சி, பெரிய அப்புச்சி, சின்ன அம்மிச்சி, பெரிய அம்மிச்சி, சின்ன அப்பாரு, பெரிய அப்பாரு, சின்ன அப்பத்தா, பெரிய அப்பத்தா, எள்ளு தாத்தா, எள்ளு பாட்டி, கொள்ளு தாத்தா, கொள்ளுப் பாட்டி, தாத்தா, பாட்டி, எள்ளு பேரன், எள்ளு பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி, பேரன், பேத்தி, அம்மா, அப்பா, கணவன், மனைவி, அண்ணன், அண்ணி, தம்பி, தங்கச்சி, அக்கா, தாய் மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமனார், மாமியார், மருமகன், மருமகள், ஆண் சம்மந்தி, பெண் சம்மந்தி, நங்கையா, நாத்தனார், கொளுந்தனார், கொளுந்தியா, மாமன், மச்சான், மாப்பிள்ளை, பங்காளி, மச்சினன், மச்சினிச்சி, மச்சாண்டார், சகலை என அருமையான உறவு முறைகள்.* *என்னங்க பிரம்மித்து பார்க்கிறீர்...

குருநானக்

 மகான்களின் வாழ்க்கை வரலாறு  மகான் குருநானக் - இந்து-முஸ்லிம் பேதம் பாராட்டாது வாழ்ந்த மாபெரும் சித்தர் தான் குருநானக். மேற்கு பாகிஸ்தானில் உள்ள தால்வண்டி கிராமம் தான் இவர் அவதரித்த சிற்றூர். ஒரு கார்த்திகை மாத பவுர்ணமி அன்று, மேதாகலூரா என்ற எளிய மனிதருக்கும் அவரது மனைவி மட்டாதிரிபாத் என்ற பெண்மணிக்கு இரண்டாம் குழந்தையாகப் பிறந்தார். அவதார புருஷரான அவருக்கு உலகியல் படிப்பில் நாட்டம் தோன்றவில்லை. நானக்கின் தந்தை அவரை மாடுமேய்க்க அனுப்பினார். நானக் மகிழ்ச்சியோடு மாடுமேய்த்தார். மாடுகளை ஓட்டிச் சென்று மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு, நாள்தோறும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பல மணிநேரம் நானக் தியானம் பழகலானார். மாடுகள் சமர்த்துப் பசுக்கள். கொஞ்சகாலம் நன்றாகத்தான் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றிற்கு மெல்ல மெல்ல திருட்டுப் புத்தி வந்தது. கண்டிப்பார் யாருமில்லை. மேய்க்க வந்த சிறுவனோ மரத்தடியில் கண்மூடி உட்கார்ந்திருக்கிறான். இனி என்ன? மாடுகள் கூட்டம் கூட்டமாக அடுத்தவர் வயல்களை மேயலாயின. அதனால் பெருமளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் பஞ்சாயத்தைக் கூட்டினார். என்ன அக்கிரமம் இது! மாடுகளை என் வயலில்...

Steroid injection awareness in tamil

 ஸ்டீராய்டு ஊசிகள்,ஸ்டீராய்டு  மருந்துகள், ஸ்டீராய்டு ஆயின்மென்டுகள்,ஸ்டீராய்டு மாத்திரைகள் என்றால் என்ன ???... முழுமையாக படிக்கவும். மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்ட அலோபதி மருத்துவர்களை வைத்து அலோபதி ஆஸ்பத்திரி முதலாளிகள் கையாளுகிற பலே டெக்னிக்குகள் சொல்லி மாளாதவை. மக்களுக்கு வேண்டியது எல்லாம் நோய் உடனடியாக குணமாக வேண்டும். அப்படி உடனடியாக  குணம் படுத்துகிற டாக்டர் மக்களைப் பொறுத்த வரை கைராசிக்கார டாக்டர். எப்படி அந்த அலோபதி டாக்டர் மட்டும் கைராசிக்காரர் ஆகிறார் என்று யோசியுங்கள்... அங்கேதான் சூழ்ச்சியே இருக்கிறது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் போதே நோய் குணமான உணர்வை உண்டாக்கும் மருத்துவர்கள் இன்று எக்கச்சக்கம்.  அதற்கு அவர்களது திறமையோ, அனுபவமோ காரணம் இல்லை.  பின்னே என்ன..? அவர்கள் தரும் ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்தான் காரணம் ! 🔥அது என்னய்யா ஸ்டீராய்டு ? ஸ்டீராய்டு என்பது நோயைக் குணமாக்கும் மருந்து அல்ல. மறைக்கும் மருந்து.  ஆஸ்துமா அதிகம் ஆகி, திணறத் திணற ஆஸ்பத்திரிக்கு போகும் ஒரு நபர், ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கெத...

கத்தரி-கண்டங்கத்தரி

 உலகிலேயே அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில்  #வயிற்று_புற்றுநோய் மிக மிக குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியும்? #கத்தரிக்காய்... இவ்வளவு கடுமையான காரம் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில் கத்தரிக்காய் பயன்பாடு உள்ளதால் அவற்றில் உள்ள வேதிபொருட்கள் புற்றுநோயை அழிக்கும் தன்மை உள்ளதை  அறிந்த பன்னாட்டு கம்பெனிகள் #மரபணு_மாற்றம் செய்த கத்தரியை புகுத்தியுள்ளதாக ஒரு தகவல் உள்ளது. 😭 கத்தரி வகையில் உயர்ந்த மருத்துவகுணம் நிறைந்தது "#கண்டங்கத்திரி" கண்டங்(கழுத்து)+ கத்திரி கழுத்து பகுதியில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கத்தரித்து விடும் என்பதால் இதற்கு கண்டங்கத்தரி என பெயர் பெற்றது. இவற்றிற்கு #கோழை_அகற்றி என பெயரும் உண்டு. நுரையீரலில் உள்ள நீர் மற்றும் சளியை அகற்றும் பண்பு உண்டு. #தொண்டை பகுதியில் ஏற்படும் அனைத்து விதமான நோயையும் போக்கிவிடும் இவற்றை உட்கொள்ளும் போது. #தைராய்டு_நோயையும் இவை குணமாக்கும். தூதுவளைக்கு இணையான மருத்துவகுணம் கொண்டது. 2020 ல் இந்தியாவில் சுமார் 50 கோடி பேருக்கு புற்றுநோய் இருக்கும் என மதிப்பிட்டு.  புற்றுநோய்க்கான மருந்தை...

கசகசா வைத்தியம்

 கசகசா மருத்துவ குணங்கள் பயன்கள்..... கசகசா… நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது. சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.  எந்தவொரு பொருளையும் அளவாக சாப்பிட்டால் அது நன்மையை தரும்.  அளவுக்கு மீறி எந்த உணவுப் பொருட்களை உட்கொண்டாலும் அது நமக்கு தீமையே கொடுக்கும். கசகசா எப்படி கிடைக்கிறது? வெள்ளை, சிவப்பு, வெளிர் சிவப்பு, வெளிர் நீலம் ஆகிய வண்ணங்களில் அழகான பூக்களைப் பூக்கிறது. இப்பூக்களிலிருந்து பச்சைநிற 4-6 செமீ உயரமும், 3-4 செமீ விட்டமும் கொண்ட கோளவடிவிலான காய்கள் தோன்றுகின்றன.  இவை போஸ்தக்காய் என்றழைக்கப்படுகிறன. போஸ்த்தக்காய் இளமையாக இருக்கும் போது (விதைகள் உருவாகும் தருணத்தில்) அதனுடைய வெளிப்புற...

சதகுப்பை வைத்தியம்

 🇨🇭#சதகுப்பை_மூலிகையின்   💊#மருத்துவ_பலன்கள்❓❓❓ ◆சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் இவற்றை சம அளவு  அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை,மாலை சாப்பிட்டு வர கருப்பை பலமடையும்.   ◆கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும். ◆இரத்த அழுத்த நோய் குறைய கருங்காலிப்பட்டை, சதகுப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து சுண்டவைத்து சாப்பிட இரத்த அழுத்த நோய்  குறையும். ◆இரத்த சோகை குறைய சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாறில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும். மேலும் பெண்கள்  மாதவிடாய் நேரத்தில் இதை குடித்து வந்தால் இரத்தம் விருத்தியடையும். உடல் பலம் பெறும். ◆சதகுப்பை இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும். மிளகு, சுக்கு, சதகுப்பை, ஏல அரிசி, தேன் அனைத்தையும் இடித்து வடிகட்டி வடிகட்டிய தூளை தேன் சேர்த்து சாப்பிட்டால் முறையாக பசி ஏற்படும். ◆ரோஜாப்பூ மொட்டு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை இடித்து சுடு நீ...

உடல் மன ஆரோக்கியம்

 🇨🇭#உங்கள்_உடலை_நீங்கள்  #கவனித்தால்…❗❗ 🇨🇭#உங்கள்_உடல்_உங்களை #கவனித்துக்_கொள்ளும்.❓❓❗❗ ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை, நிறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள்.  👉ஸ்கேன், 👇எக்ஸ்ரே,  👉ப்லட் டெஸ்ட்,  👉யுரின் டெஸ்ட்,  👉மொஷென் டெஸ்ட்  எதுவும் வேண்டாம். ஆயிரம் கணக்காக பணம் செலவழிக்கவும் வேண்டாம்.  🔰  கீழ் கூறப்படும் ஐந்து விஷயங்களை சரி பார்த்தாலே போதும்.🔰 ▶ தரமான பசி ▶ தரமான தாகம் ▶ தரமான உறக்கம் ▶ முழுமையான கழிவு நீக்கம் ▶ மன அமைதி 💊 தரமான பசி • உழைப்புக்கேற்ற பசி இருக்க வேண்டும் • அதிக உழைப்பு அதிக பசி, குறைந்த உழைப்பு குறைந்த பசி • குறைந்தது 2 வேளை பசி இருக்க வேண்டும் • உண்ட உணவு சுலபமாக செரிக்க வேண்டும் • உண்ட பிறகு வயிறு  உப்புசம், பாரம், அசதி, தூக்கம் இருக்கக் கூடாது 💊தரமான தாகம்💊 • உழைப்புக்கேற்ற தாகம் இருக்க வேண்டும் • உதடு காய்வது தாகம் அல்ல • தாகத்தை புரிந்துகொள்ள வேண்டும் • தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது 💊 தரமான உறக்கம்💊 • படுத்த 10 நிம...

நோய் தடுப்பு முறை

 *3 ஆம் அலை சித்தா தடுப்பு மருந்துகள் 🔱🔥❤️🙏🏽* ---------------------------------------------------- *தற்சார்பு தடுப்பூசியில் நான் கூறிய ஆறு சித்தா தடுப்பு மருந்துகளையும் ஒன்றாக நீங்கள் எப்படி எடுக்கலாம் என நான் உங்களுக்கு வழங்கும் பரிந்துரையே இந்த பதிவு ✒️* *இம் மருந்துகளை இதில் கூறி உள்ளது போல் தொடர்ந்து நீங்கள் எடுத்து வந்தால்* *இனி எத்தனை எத்தனை அலை கொரோனா உருமாறி வந்தாலும் உங்களை தொற்றுகள் தாக்காது 🔥* *இது கவசமாக மாறி தங்களின் உயிர் காக்கும் 🔱* *இது தான் உண்மையான தடுப்பு மருந்து 🔥* *இதோ 3 ஆம் அலை சித்தா தடுப்பு மருந்தின் கவச பாடல் ❤️🔱🙏🏽* --------------------------------------------------------------- *ஞாயிறு நோ யெதிர்ப்பைய திகரி* *திங்க ளிலெடுச் சீந்தில்* *ஷண்முகன் காப்பு செவ்வாயில்* *புத குடிநீர் லேகிய மெடுத்து வா* *குரு மருந்து கரிசாலை குருநாளில்* *சுக்கிரநாளில் அஸ்வகந்தா தொடர்* *சனியன்று சிவசக்திவிஷ்ணு மருந்தெடுக்க*  *சுரத்தொற்றுகள் எவையு முனை யண்டாதே !*  *என்னங்க இவை எந்த நூலில் உள்ளது என்று பார்க்கிறீர்களா 🙄* *புதிதாக இருக்கா 🤔*  *இப்பாடல் நான் எழ...

அறுசுவை

 உணவே மருந்து  அறுசுவையும் ஆரோக்கியமும் 1 துவர்ப்பு சுவை  உடலுக்கு உறுதியையும் உற்சாகத்துடன் சுறுசுறுப்பையும் தரும் சுவை இது    உடலில் துவர்ப்பு சுவை குறைந்து விட்டால் அதிக வியர்வையுடன் கூடிய படபடப்பு ரத்தப்போக்கு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தோன்றும்       இந்த நோய்கள் தோன்றினால் வாழைக்காய் வாழைப்பூ மாதுளம் பழம் அத்திக்காய் போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இதனால்  உடலுக்கு தேவையான துவர்ப்பு சுவை கிடைத்து விடும் துவர்ப்பு சுவை பற்றாக்குறையால் வருகின்ற நோய்கள் இதன் மூலம் விலகும்     பொதுவாக உடலுக்கு தேவையான ஆற்றலைத் தரும் சுவையாக துவர்ப்பு சுவை விளங்குகின்றது 2 கார்ப்பு சுவை   இந்த சுவையை அதிகமாக விரும்பி சாப்பிட்டால் உடலில் நீர்த்தன்மை பாதிக்கும் இதனால்  உடல் இளைத்து விடும் சத்துப் பற்றாக்குறை உண்டாகும் எனவே உணவில் வர மிளகாய் பச்சை மிளகாய் போன்ற கார்ப்பு சுவை உள்ள பொருட்களை பயன்படுத்தக் கூடாது இதற்கு பதிலாக தீமையைத் தராத கார சுவையுள்ள இஞ்சி பூண்டு மற்றும் மிளகு போன்ற பொருட்களை உணவில் பயன்படுத்தி கொள்ள வே...

சியாட்டிகா மாத்திரை

 சயாடிக்கா என்றால் என்ன?             நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும். முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும். #மூட்டுவாத மாத்திரை: (வீர்யபடுத்தப்பட்டது) பைனல்கார்டு நோய்கள், தண்டுவட சவ்வு நோய்கள்(முதுகெலும்பு சவ்வு) டிஸ்க் பிரலாப்ஸ் தீரும்.            பாலில் அவித்து உலர்த்திய                       அமுக்கரா பொடி              -100 கிராம். திரிபலா சூரணம்            -100 கிராம். மகாதிரிகடுகு சூரணம் - 50 கிராம் பிரண்டை உப்பு  ...

அழியும் பாரம்பரியம்

 #மெல்லஅழிந்த_இயற்கைஉணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான். தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது. அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது. இங்கு வெள்ளையன் வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது. சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான். வந்தவன் மிளகை வாங்கிவிட்டு...

பிரம்மசரியம்

 பிரமச்சரியம் - உண்மை/சன்மார்க்க  விளக்கம் பிரம்மம் ஆகிய ஆன்மாவை அடைய செயும் முயற்சியும் பயிற்சியும் தான் பிரமச்சரிய விரதம்  இந்த வார்த்தை உச்சரித்தவுடன் – எல்லவர்க்கும் நினைவு வருவது 1 திருமணம் செய்யாமல் இருத்தல் 2 மனைவியுடன் உடலால் கலவாமல் இருத்தல் 3 விந்து நீக்கம் தவிர்த்தல் உண்மை இது தானா ?? ஆனால் உண்மை இதுவல்ல பிரமச்சரியம் எனில் ?? எந்த பயிற்சி ஆற்றினால் அதனால் ஆன்மா ஆகிய பிரம்மம் காண முடியுமோ ?? அதுவே ஆகும் அது விந்துவை சிரசில் இருக்கும் பிரமத்துவாரத்துக்கு ஏற்றுவதாகும் அங்கிருக்கும் குளம் நிறைந்து , அதன் மூலம் சுப்பிரமணி சிரோன்மணி – ஷண்முக மணி – கௌதமமணி உருவாகும் வரை நடை பெற வேண்டியதாகும் அதுக்கு தோராயமாக 12 ஆண்டு என கணக்கிட்டார்கள் அந்த காலத்துக்கு விந்து நீக்கம் இல்லாதிருந்து அதை சிரசுக்கு ஏற்ற வேண்டியது அவசியமாகுது இது தான் உண்மையான பிரமச்சரிய விரதம் ஆம் திருமணம் ஆகா சாமியார்கள் சன்னியாசிகள் மேற்கொளவது அல்ல

நீரிழிவு நோய. குணமாக

 சர்க்கரை வியாதி தீர எளிய வைத்தியம்     நாவல் பழக் கொட்டையை ஒன்றிரண்டாக இடித்து இதை ஒரு பீங்கான் பாத்திரத்தில் போட்டு இது மூழ்கும் அளவிற்கு ஆடுதீண்டாபாளைசாறு விட்டு ஒரு நாள் ஊறவைத்து அதை வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு    இந்தப் பொடியை வல்லாரை அல்லது சிறுகுறிஞ்சான் இதில் ஏதாவது ஒரு சாற்றைவிட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த மாத்திரையை காலை  வெறும் வயிற்றில் வெந்நீருடன் கலந்து குடித்து வர சிறுநீர் சர்க்கரையானது ஒரு மாத காலத்தில் கட்டாயமாக குறைந்து சம நிலைக்கு வந்து விடும் 2 சர்க்கரை வியாதி குறைய                  ஒரு எளிய பரிகாரம் தேவையான பொருட்கள்  நெல்லிக்காய் சாறு 10 மில்லி                                தேன் 5 மில்லி                 மஞ்சள் தூள் 2 கிராம்   இவைகளை 250 மில்லி சுடு ந...

மனம் மாறுதல் வேண்டும்

 🎆 யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்........??? யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன.......??? இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா.......??? இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய் உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன் அது மனதின் வேலை உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது இது மனதின் "உயர்வு - தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது  அந்த மனப்...

சர்க்கரை அளவு

 🇨🇭#சர்க்கரை_கட்டுப்பாட்டில்_வராமல்  🇨🇭 #இருப்பதற்கான_சில #காரணங்கள்.❓❗ 1, ரத்தத்தில் கொழுப்பின்  (LDL & TGL) அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                   2, கல்லீரல் மற்றும் மண்ணீரலின் செயல்பாடு சரியாக இல்லாமல் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                    3, சிறுநீரில் அல்புமின் கசிவு இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                   4, சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                       5, தொடர்ந்து சளி இருமல் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                    6, குடலில் அமில சுரப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                ...

சியாட்டிகா

 🇨🇭#மனிதரைப்_படாய்படுத்தும்… 🇨🇭#கால்வலி……… 🇨🇭#இடுப்புவலி…… 🇨🇭#முதுகுவலி_என்ற……❗❓ 🇨🇭#சியாடிக்கா_வலி……… 🇨🇭#SCIATICA……  ❗❗ இடுப்பிலிருந்து காலுக்கு பிரியும் நரம்பின் பெயர் Sciatic nerve இதில் ஏற்படும் வலிநோய்க்கு sciatica என்றுபெயர் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண்களுக்கு இத்தகைய வலிகள் வருகிறது. முதலில் இடுப்பில் வலி ஆரம்பிக்கும் பிறகு தொடை வழியாக கால்வரை பரவும் நடந்தால் வலி கூடும். கொஞ்சதூரம் நடந்த பிறகு மேலும் நடக்க முடியாமல் நிற்பார்கள் ஏதேனும் ஒரு காலில் வலி அதிகமாக இருக்கும். அதிக வலி உள்ளவர்கள் உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் கீழே விழுந்து புரளுவார்கள். 👉 நவீன மருத்துவம் முதலாவதாக M.R.I   பரிசோதனை எந்த இடத்தில் நரம்பில் அழுத்தம் உள்ளது என்று துல்லியமாக கண்டறிதல் எலும்பு தேய்மானத்தை கணித்தல் 👉 சிகிச்சை ❗இடுப்புக்கு பிடிமானமாக பெல்ட் அணிதல் ❗வலி மாத்திரைகள் ❗உடற்பயிற்ச்சி சிகிச்சைகள் 💔இறுதியாக ஆபரேஷன். பலருக்கு இந்த சிகிச்சைகளால் குணமாவது இல்லை…❗ ⭕ யார் யாருக்கு அதிகம்வரும்❓ மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வலை இழுக்கும் மீனவர்கள் அதிக தூரம்வண்டி ஓ...