முந்திரி
முந்திரி பருப்பு சார்ந்த நன்மைகள் மற்றும் பாரம்பரிய மிக்க தின்பண்டங்கள்: 😋😋😋
முந்திரியில் ஆரோக்கியமான நல்ல கொழுப்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நமது இதயத்திற்கு சிறந்தது.
இதில் அதிகளவில் புரோட்டீன் இருப்பதால் ஒரு நாள் முழுவதும் நீங்கள் களைப்படையாமல் உற்சாகமாக இருப்பீர்கள்.
முந்திரி பருப்பில் விட்டமின் சி, தயமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதில் அதிகளவில் ட்ரைப்டோபோஃன் அமினோ அமிலம் இருப்பதால் இவை செரோடோனின் சுரப்பை தூண்டி மனநிலையை அமைதியாக்குகிறது.
மேலும் ஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டா பாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது.
கோவில்பட்டி, கடலை மிட்டாய்க்கு மட்டும் பிரபலம் அல்ல. முந்திரி மிட்டாய்க்கும் பிரபலமானது. இதனுடைய தனிச்சுவை அனைத்து வயதினரையும் ஈர்க்க கூடியவை. அதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது. மேலும் முந்திரியில் உள்ள விட்டமின் ஈ உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது. பாரம்பரிய முறையில் Kaju Katli க்கு வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்து புதுமை ஊட்டிய பெருமை தமிழனயே சாரும்.
Comments
Post a Comment