Vitamin c

 🇨🇭#உடலுக்கு_வலுவையும் #உற்சாகத்தையும்……❗❓


🇨🇭#தருவம்_வைட்டமின்_C…❗❗❓❓


உடலுக்கு வலுவையும், உற்சாகத்தையும் தருவது உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள் தான். இந்த உயிர்ச் சத்துக்களானது உடலுக்கு அவசியத் தேவையாகும். வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் சரிவிகிதத்தில் உடலில் சேர்ந்தால்தான் உடல் நோய் நொடிகளின் தாக்குதலிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.


உயிர்ச்சத்தான வைட்டமின் ‘C’ மனித உடலில்  வளர்ச்சி உண்டாக்கக் கூடிய சத்து எலும்புகள், தசை நார்கள், இரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 


⭕வைட்டமின் ‘C’ யும் உடல் வளர்ச்சியும்………


· இந்த வைட்டமின் ‘C’ உடலின் எந்தப் பகுதி செல்களில் பாதிப்பு ஏற்பட்டாலும், அவற்றை சீர் செய்து உடலை நன்கு செயல்படவைக்கிறது. செல்களின் வளர்ச்சியே உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாகும்.


· இந்த வைட்டமின் ‘C’ இரத்தத்தை சுத்தப்படுத்தி சீராக இயங்கச் செய்கிறது.


· தோல், பல்லீறுகள், பற்கள், எலும்புகள் போன்றவற்றிற்கு உறுதியளிக்கிறது.


· உடம்பில் உண்டான காயங்களை மிக விரைவில் ஆற்றுவதற்கு இந்த சத்து மிகவும் தேவைப்படுகிறது.


இந்த வைட்டமின் ‘C’ சத்து குறைந்தால்


· வைட்டமின் ‘C’ குறைவினால் ஸ்கர்வி என்ற பல் ஈறுகளிலிருந்து இரத்தம் கசியும் நோய் உண்டாகிறது.


· வைட்டமின் ‘C’ குறைவினால் சரும வறட்சி ஏற்படுகிறது. அதனால் சருமம் பளபளப்பு தன்மையை இழக்கிறது. மேலும் சருமத்தில காயம் ஏதும் உண்டானால் அவை எளிதில் ஆறாத தண்மையை உண்டாக்குகிறது.


·வைட்டமின் ‘C’ குறைவால் ஒவ்வாமை, இரத்தச் சோகை உண்டாகும்.


· இந்த உயிர்ச்சத்து குறைவதால் தசைகள் பலவீனமடைகின்றன.


· பற்கள் வலிமையற்று பல்லீறுகளில் இரத்தம் கசிந்து கொண்டேயிருக்கும். இதனால் வாயில் துர்நாற்றம்உண்டாகும்.


· பசியை குறைத்து, சீரண உறுப்புகளின் செய்லபாட்டை சீர்குலைக்கிறது.


· எலும்பு மூட்டுக்கள், முக்கியமாக கால் எலும்பு மூட்டுகளில் உள்ள நீரினை பசை போல் ஆக்கி மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது.


நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.


முகம் மற்றும் சருமத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், கரும்படலம் முதலியவை வைட்டமின் ‘இ’ குறைவால் அதிகமாகிறது.


🇨🇭வைட்டமின் ‘C’ யினால் உண்டாகும் நன்மைகள்❓


· வைட்டமின் ‘C’ சத்து அதிகமாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அளவு வைட்டமின் ‘இ’ உட்கொண்டால் உடலில் வளர்ச்சி சீராக இருக்கும்.


· மனிதர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் சளிகாய்ச்சல், போன்றவை அடிக்கடி ஏற்படாமல் தடுக்க வைட்டமின் ‘இ’ உயிர்ச்சத்து பயன்படுகிறது. அதிகளவில் இந்த உயிர்ச்சத்து சேரும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.


· இரும்புச் சத்தை உடலில் அதிகளவில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் ‘இ’ முக்கிய பங்காற்றுகிறது. உணவில் உள்ள இரும்பு சத்தானது உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் ‘இ’ ன் ஈர்ப்புதான் காரணமாகிறது.


· சிறுநீரகம், சிறுநீர்பை, சிறுநீர் தாரை போன்றவற்றில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. சிறுநீரின் வழியே வைட்டமின் ‘இ’ வெளியேறும் போது உடலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களையும் சேர்த்துக்கொண்டு வெளியேற்றுகிறது.


· சிகரெட் பிடிப்பதினால் பல்லீறுகள் மற்றும் நுரையீரல் பைகளில் உண்டாகும் புண்களை ஆற்ற இந்த உயிர்ச்சத்து அவசியமாகிறது.


· வயிறு மற்றும் குடல் புண்களில் உண்டான இரத்தக் கசிவை போக்க இந்த உயிர்ச்சத்து பயன்படுகிறது.


· ஆஸ்துமாவின் பாதிப்புகளை குறைக்கும் தன்மை இந்த உயிர்ச்சத்துக்கு உண்டு என்று அறிவியல் ஆய்வு கூறுகிறது. தினமும் தேவையான அளவு வைட்டமின் ‘இ’ உடலுக்கு கிடைத்தால் ஆஸ்துமாவின் பாதிப்பு அறவே நீங்கும்.


· புற்று நோயை தடுக்கும் குணம் வைட்டமின் ‘இ’ -க்கு உண்டு என்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர். உடலில் வாய், தொண்டை, வயிறு, நுரையீரல் போன்றவற்றில் உண்டாகும் புற்று நோயை தடுக்கும் வல்லமை இதற்குண்டு. புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வைட்டமின் ‘இ’ சத்து அதிகம் கொடுத்து நோயின் பாதிப்பு மிகாமல் தடுக்கப்படுகிறது.


· மாரடைப்பு வருவதை தடுக்க வைட்டமின் ‘இ’ அதிக அளவில் உதவுகிறது. தினமும் உணவின் மூலம் இந்த சத்து உடலுக்குக் கிடைத்தால் மாரடைப்பு வருவது முற்றிலும் தடுக்கப்படும். இதய சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது.


உலக உணவு மற்றும் ஊட்டச்சத்து கழகம் அண்மையில், உடலுக்கு தினமும் தேவையான 

வைட்டமின் ‘இ’ ன் அளவு பற்றி அட்டவணை வெளியிட்டுள்ளது.


தாய்ப்பாலில் வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.


🇨🇭வைட்டமின் ‘C’ அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்❓


💊பழங்கள்.


நெல்லிக்கனி – 200 மி.கி.


மாம்பழம் – 16 மி.கி.


பலாப்பழம் – 7 மி.கி.


வாழைப்பழம் – 16 மி.கி.


மாதுளம் பழம் – 16 மி.கி.


கொய்யா பழம் – 212 மி.கி.


நாவற்பழம் – 16 மி.கி.


ஆரஞ்சு பழம்- 1 மி.கி.


ஆப்பிள் – 57 மி.கி.


பப்பாளி – 63 மி.கி.


எலுமிச்சை பழம் – 63 மி.கி.


தக்காளி – 27 மி.கி.


மேலும் தர்பூசணி மற்றும் சப்போட்டா பழங்களில் கணிசமான அளவு உள்ளது.

.


.


🔯 கீரை வகைகள் 🔯


கொத்துமல்லி – 38 மி.கி.


முள்ளங்கி கீரை – 79 மி.கி.


முளைக்கீரை – 49 மி.கி.


பருப்புக் கீரை – 29 மி.கி.


குப்பைக் கீரை – 178 மி.கி.


மணத்தக்காளி கீரை – 11 மி.கி.


பொன்னாங்கண்ணி கீரை – 17 மி.கி.


முருங்கை கீரை – 220மி.கி.


தண்டுக் கீரை – 99 மி.கி.


பசலைக் கீரை – 28 மி.கி.


வெந்தயக் கீரை – 52 மி.கி.

.


.

🔯 காய் வகைகள் 🔯


முருங்கைக்காய், பாகற்காய், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு, முள்ளங்கி, கத்தரிக்காய், காளிபிளவர்

.


.

🔯 பயிறு வகைகள் 🔯


காராமணி, பட்டாணி, உளுந்து, பச்சைப் பயறு, முளைவிட்ட மொச்சை போன்றவற்றில் அதிகம் உள்ளது.


வைட்டமின் சத்து நீரிலும், காற்றிலும் கரையக்கூடிய தன்மையுள்ளதால் நன்கு பச்சையாக உள்ள பழங்களையும், கீரைகளையும் சாப்பிடுவது நல்லது. கீரைகள் மற்றும் காய்கறிகளை பாதியளவு வேகவைத்து சாப்பிட்டால் வைட்டமின் ‘இ’ முழுமையாக நம் உடலுக்கு கிடைக்கும்.


வைட்டமின் ‘C’ என்ற உயிர்ச்சத்தினை தேவையான அளவு பெற மேற்கண்ட உணவு வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோமாக.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி