மனிதமனங்களின் நிலை
மனித மனங்களின் நிலை: "உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, மலர்கள் மலர்ந்ததும் எனக்காக, அன்னை மடியை விரித்தால் எனக்காக" என சில மனம். " கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள், துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்" என ஒப்பாரி வைக்கும் சில மனங்கள். இவற்றிற்கு நடுவே "உன்னையறிந்தால் , நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்ற மனம் "நீ யார்?" " உன்னுடைய வல்லமை என்ன? "உன் மனதின் முழு சக்தி என்ன? "நீ ஏன், எதற்காக பூமிக்கு வந்தாய்?" "உன்னுடைய வாழ்வின் நோக்கம் தான் என்ன? " ஓவ்வொரு மனித மனத்தின் முடிவான ஆசை என்ன?" மனிதன் பிரபஞ்ச இயக்க ஆற்றலை ஒருங்கே கொண்டு , உணர்வு என்ற நிலை யை அனுபவிக்கப் பிறந்த மகா பிரபஞ்சத்தின் தனித்தனி வடிவாய் பூமியில் பிறக்கிறான். அவன் அனுபவிக்கும் முதல் உணர்வு ஆனந்தமாகும். ஆம் ஆணும் பெண்ணும் சம்யோகம் செய்யும் வேலையில் பூரண உணர்வெய்தி ஆணின் உடலில் விந்தாய் மாறி, பெண்ணின் கருக்குழாயில் தெறிக்கும் சமயம் ஏற்படும்...