உணர்ந்தேன்

 உணர்ந்தேன்...உணர்ந்தேன்... உணர்ந்தேன்...


கண்டு கேட்டு உண்டுணர்ந்து உறவாடும் பெண் என் மனம் என்பதை உணர்ந்தேன்.


ஆணாகிய என் ஜீவனான சிவத்தை பேணும் "பெண்" என் மனம் என்பதை உணர்ந்தேன்.


என் கணவனான என் ஈசனை என் கண் என்பதை என் மனதால் உணர்ந்தேன் .


"ஆணுக்குப் பெண் அடிமை" ஆம் என்னை ஆட்கொண்ட என் ஆண்டவனே ஆண் எனவும் அவனுக்கு நான் அடிமை என்பதை உணர்ந்தேன்.


*இராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தி" என் ஜோதியாகிய இராமன் உறையும் சிரசின் அயோத்தியே எனக்கு வீடு என்பதை உணர்ந்து என் கணவன் வீட்டிற்கு சென்று வாழ்வதே என் இலட்சியம் என உணர்ந்தேன்.


" கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருசன்" என கல்லிலும் புல்லிலும் சிவமாகிய கணவனே உறைகிறான் என்பதை உணர்ந்தேன்.


தற்போது நான் (மனம்) என் கணவனை பிரிந்து வாழாவெட்டியாக ஊர் சுற்றி என் வாழ்வை வீணாக கழிக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.


எவ்வாறு நான் என் கடவனோடு சேர்வது?


வடகரை வள்ளல் சுவாமி சிவானந்தனின் வாசியோகம் என்ற சித்தவித்தையை முறைப்படி கற்று, நடவடிக்கை கிரமங்களை கடைபிடித்தால் என் கணவனோடு ஐக்கியமாகி பேரின்பம் அணுபவிக்கலாம் என்று உணர்ந்தேன்.


"ஐயகோ இடையில் என் கள்ளப்புலன்கள் என்னை கழிவிலேற்றப் பார்க்கின்றனவே என் செய்வேன்?


திடமனதோடு, உயர் இலட்சியத்தோடு வாழ என் மனம் செம்மையாகி என் இறைவனான கணவனை கரம்பிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என உணர்ந்தேன்.


வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

உடல் வாழ்க!

உயிர் வாழ்க!

உடலிலே உறையும் இறை வாழ்க!

இகபர சௌபாக்கியங்களுடன் எல்லோரும் இன்புற்று வாழ்க வாழ்கவே...


இறை உணர்வேன் சங்கர்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி