பரிணா வளர்ச்சி

 மனித இனத்தின் முடிவான பரிணாமம் எது?


 அரிய பிறப்பான மானுட பிறப்பை  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் போராட்டங்களினாலும், பல இன்னல்களினாலும், மதிப்புமிக்க அனுபவங்களினாலும் அடைந்தது மனித இனம்.


இவ்வாறு அடைந்த இப்பிறவியை காமம், கோபம், பொறாமை, பேராசை , டம்பம், அசூயை, அதர்மம், லஞ்சம், களவு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நயவஞ்சகம், சூது, வாதம் , சூழ்ச்சி, ஆட்சி, அதிகாரம்,  இவைகளை மனத்தால் நிறைத்து அன்பை உணராமல் இழி பிறவிகளாய் மரணிக்கவா பிறந்தோம்?


அகங்கார மாயையால் பெறர்க்கரிய பிறவியை நாசம் செய்தல் முறையோ?


நம்முடைய பிறப்பை பூரணத்துவம் அடையச்செய்ய என்ன செய்ய வேண்டும்?


"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"


இதைவிட ஒரு வழிகாட்டுதல் வேண்டுமோ?


மனிதனின் பரிணாமம் அன்பால் விளைந்தது என கற்க. அந்த அன்பின் வழி நிற்க.


அன்பு அகத்தே செழித்து உடலை உருவாக்குகிறது, அதை பாதுகாக்கிறது என உணர்க.


இந்த அன்பை புறத்தே தவத்தின் மூலம் பெற்று மனிதநேயம், மனிதமாண்பு, தயை, இரக்கம், கருணை, ஜீவகாருண்யம் என்ற உன்னத குணங்களால் மனிதனை மனிதநேயராக மாற்றம் செய்து அதன்படி நின்றால் உடலில் அமுதம் சுரக்கும், பசிப்பிணி தீரும்.


காம, குரோத, மதமாச்சரியம் என்ற இராகத்துவேசமான விருப்பு , வெறுப்பு அகலும்.


அகங்காரமாயை அறுந்தொழியும். 


அன்பே சிவமென்று உணரும். 


மகான்களின்  வார்த்தைகளாக 

அன்பே சிவமென்று அறிகிலார், அன்பே சிவமென்று உணர்ந்தபின்,

அன்பால் மரணமிலா பெருவாழ்வை அடைந்து,

அன்பே சிவமாய் அதற்கு தக அமர்திடுவார் பாரே!


ஆம் மரணமிலா வாழ்வான , உடலை விட்டு உயிர் பிரியாமல், உடலிலே இருத்தி, புறமனதை ஒடுக்கி அகமனதின் இயக்கத்தை கடந்து பிரபஞ்ச பிரக்ஜையால் நிறைந்து வாழ்தலே மனிதனின் பூரணம்.


இதுவே பரிணாமத்தின் கடைநிலை.


இதை எய்தாதோர். மானுடபிறவியை பெற்றதே வீண் என அறிக...


வந்த வேலை தானாய் தன்மயமாய் ஆகி ஈசனாய் மாறுவதற்கே!


நீசனாய் மாறி பாவங்கள் பல செய்து , பந்தத்திலே மூழ்கி, நோயுற்று பரிதவித்து மாள்வதற்க்கல்ல.


உணர்வீர் உலகோரே!


மூலம் : வடகரை வள்ளல் சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளிய, பரிசளித்த பரிணாம வேத இரகசியங்களை உள்ளடக்கிய "சித்தவேதம்" என்ற நூல் மற்றும்

 17 ஆண்டுகளாக அவர் கொடுத்த சித்தவித்தையின் அனுபவமும்...

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி