நன்றி- நன்மை அறி

 நன்றி! நன்றி! நன்றி!


அண்ட சராசரங்களால் இப்பூவுலகை உருவாக்கிய வேதியனுக்கு நன்றி!


இப்பூவுலகில் எனக்கொரு இடமளித்த இயற்கை பேராற்றலுக்கு நன்றி!


எம் உடன் ஜீவித்திருக்கும் 84 இலட்சம் யோனி பேத ஜீவராசிகளுக்கு நன்றி!


எம் உயிரை அணுவாக இயற்கை பேராற்றல் உருவாக்கம் செய்ய உதவிய என் தந்தைக்கு நன்றி!


என் அணுவை தன் கருப்பையில் அண்டமாக மாற்றி என்னை கருச்சுமந்த என் தாய்க்கு நன்றி!


என் தேவைகளை உணவு, நீர், நிலம் என அனைத்தையும் எனக்களித்த இப்பிரபஞ்சத்திற்கு நன்றி!


என்னை, தன்னை உணர எனக்கு சித்தவித்தை என்ற நற்கொதி அடைய, அதன் மூலம் என் ஜீவனாகிய சிவத்தை உணர தீட்சை அளித்து என் பயிற்சிக்கும் முயற்சிக்கும் உறுதுணையாக நிற்கும் " வடகரை வள்ளல் சுவாமி சிவானந்த பரமஹம்சருக்கு நன்றி!


என்னை நல்வழியில் வழி நடத்தும் என் மனதுக்கு நன்றி!


நான் வாழ காரணமாக இருக்கும் இவ்வுலக மாந்தர்கள் யாவருக்கும் நன்றி!


என்னை நேசிக்கும் அத்துணை ஜீவர்களுக்கும் நன்றி!


பெறர்க்கரிய பேறு பெற்றேன் இப்பிறவியை எடுத்து வாழ...


அன்பால் இன்புற்றேன், ஐயனே என்னுள் இருந்து என்னை இயக்கும் பெருங்கருணையே உனக்கு என்னால் நன்றி சொல்ல இயலுமா?


நான் வேறு , நீ வேறோ? 


எனக்கு நான் என்ற உணர்வை நீயே கொடுத்தாய்...


என்னை ஆட்கொள்ளும் தயாபரனே! உனக்காக உன் வாசல் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.


என்னை சரியான பாதையில் வழிநடத்தி நற்கொதியளித்து என்னால் இப்பூவுலகில் என்ன செயலை செய்ய விரும்புகிறாயோ? அதைச்செய்.


வாழ்வு என்ற நாடக மேடையில் என் கதாபாத்திரத்தை நான் செய்து முடித்துவிட்டேன் என்று நீ முடிவு செய்யும் நாளில் என்னை உன்னோடு ஐக்கியப்படுத்திக்கொள்.


இயற்கை இறையே சரணம்!


எனை ஆளும் ஈசனே சரணம்!


எனைக்காக்கும் தயாபரனே சரணம்!


என்னை தன்னுள் வைத்து இயக்கும் என் முதலாளியே சரணம்!


நன்றி! நன்றி! நன்றி!


இவன் பிரம்மஸ்ரீ சங்கர்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி