வாழ்க்கை வாழ்வதற்கே

 வணக்கம்! 


நம்முடைய மூன்று தலைமுறை எண்ணங்களும் , சூழல்களும், கல்வியும் நம்முடைய வாழ்க்கை என்ற புத்தகத்தை வடிவமைக்கின்றன.


நம்முடைய வாழ்வு எவ்வாறு உள்ளது என்பதை சுயபரிசோதனை செய்து அதை மாற்ற புதிய எண்ணங்களையும், சூழலையும், கல்வியையும் மாற்றியமைத்தால் எந்த நேரத்திலும், காலத்திலும், வயதிலும் நம் வாழ்க்கையை மாற்றியமைக்கலாம்.


சுயபரிசோதனை எவ்வாறு செய்வது?


நன்றாக சிந்தியுங்கள்! 


நான் என்னுடைய வாழ்க்கையில் ஆனந்தமாக, இன்பமாக இருக்கின்றேனா? அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயம், சந்தேகம், நிலையில்லாத தன்மை இவைகளினால் என் மனம் சூழப்பட்டு நான் ஏன் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்றும் எவ்வாறு வாழப்போகிறோம் என்றும் கவலைகளும், கற்பனைகளும் உங்கள் மனதை நிறைக்கின்றனவா?


அல்லது ஏதோ ஒரு குருட்டுப்போக்கில் வாழ்கிறீர்களா?


நீங்கள் நல்லவண்ணம் வாழ்கிறீர்கள் என்றால் எதிர்காலத்தைப்பற்றி துளியும் பயமோ, கவலையோ உங்கள் மனதை வாட்டாது.


அரசியல் சூழ்நிலையைப்பற்றிக்கூட நீங்கள் யாதொரு பயமோ, ஐயமோ படமாட்டீர்கள்.


பிறர் குற்றத்தை தேவையில்லாமல் காணமாட்டீர்கள்.


குடும்பத்தில் என்றும் சந்தோசமாக வாழ்வீர்கள்.


மாறாக இதற்கு எதிர்மறையாக உங்கள் வாழ்வு அமைந்தால் உங்கள் வாழ்க்கை என்ற புத்தகம் தவறுதலாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற பொருள்.


இந்த வாழ்வை எவ்வாறு சீர் செய்வது?


காலையில் சூரியயோகப்பயிற்சி, மாலையில் தேகப்பயிற்சி, சீரான உணவு ( கண்டிப்பாக அசைவம் கூடாது)


உங்களுடைய வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வரையறை விளக்கப்பாடத்தை ஒரு தாளில் எழுதி, காலை எழுந்தவுடன், இரவு படுக்கும் முன் அதை வாசிக்கவும்.


உங்களுடைய வாழ்வு என்ற புத்தகம் விழிப்புணர்வுடன் திருத்தியமைக்கப்படும்.


கண்டிப்பாக சினிமா, வலைதளங்களின் Facebook, whatsapp, செய்திகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாசித்தல் கூடாது. நண்பர்களின் தலையீட்டை உங்களின் வாழ்வில் கூடுமானவரை தவிர்க்கவும்.


இதற்கு எளிய வழிமுறை தியானம்.


இங்ஙனம் உங்களின் வாழ்வை திருத்தியமைத்து ஒரு சிறந்த வாழ்வை அமைத்துக்கொள்ளவும்.


இதற்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். எங்களிடம் ஆலோசனைகளை பெறலாம்.


பிறர் பாராட்டுகளுக்கு ஏங்காமல், வீணர்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல், என் வாழ்வு, என் இன்பம், என் ஆனந்தம், என் எதிர்காலம் என சிறந்த சீர்மிகு வாழ்வை வாழும் போது மனநிறைவை அடைந்து அதன் மூலம் வாழ்விலும், குடும்பத்திலும் நல்ல மகிழ்ச்சி நிலவும்போது அந்த குடும்ப உறுப்பினர்கள் இன்பமாக வாழ்வர்.


இதுபோல் ஒவ்வொரு குடும்பமும் இன்பநிலையை எய்தும் போது உலகம் அமைதி பெறும்.


தொலைக்காட்சி பெட்டி , குளிர்சாதனப்பெட்டி,காற்று குளிர்விப்பான் என்ற AC பெட்டி இவைகள் உங்களுடைய இயமனாகும். தெரிந்து தெளிக...


இறைஉணர்வோன் சங்கர்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி