அடக்கம்

 எல்லையில்லா ஆற்றலை எல்லாம் வல்ல ஆதிபகவனால் தன்னுள் அமையப்பெற்ற ஆத்மாவாகிய சிவமாகிய ஜீவனின் அருளால் பிறப்பெடுத்து வாழ்கிறோம்.

 இடையிலே கல்வி என்ற பெயரால் பொருளியலை வேண்டி நம் மனத்தை கடின சித்தமாய் கல்விச் சூழல் மாற்றம் செய்ததனால் அன்பு கருணையை மறந்து மன அடிமைகளாய் வாழ்ந்து பெறர்க்கரிய பேரான வாழ்க்கையை நரகவாழ்வாய் வாழ்ந்து மடிகிறோம். 

நம் மனத்தில் ஈசனாகிய நம் உயிரின் வல்லமையை உணர மகான்களின் அடியொற்றி அவர்களின் சொல்படி வாழ்க்கையை அமைத்தால் , அதன்படி நடந்தால் சுவர்கத்தை நம்முள்ளே காணலாம். 

எனக்கும் எம் உடன் பிறவா சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் சுவர்க வாழ்வு அமைய, அதை உணர பெறர்க்கரிய பேறு பெற அருள்வாய் பூரணனே! 

மனத்தோடான வாழ்வு மரணத்தை தரும், அகத்தோடான வாழ்வு அமரத்துவத்தை தரும். 

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் "

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி