வாழ்வு சிறக்க

 ஆனந்த வாழ்வு!


உங்களால் மாற்றக்கூடியவற்றை வாழ்வில் மாற்றமுனையுங்கள்.


நம்மால் முடியாதவற்றைப்பற்றிய எண்ணங்களை தூக்கி தூர வீசி எறியுங்கள்.


மாற்றக்கூடியவை...


நான் என் அப்பாவை/ அம்மாவை/ கணவனை/ மனைவியை/ அண்ணன், தம்பியை/ அக்கா, தங்கையை நேசிக்கிறேனா?


இல்லையெனில் ஏன்? காரண,காரியங்களை தெளிந்து அதை மாற்ற முயலுங்கள்.


முதலில் உங்கள் குடும்ப அங்கத்தினர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!


உங்களை நேசியுங்கள்! நீங்கள் முக்கியமானவர். இந்த இயற்கையின் கொடை நீங்கள்.


பிரபஞ்சத்தின் சொத்து நீங்கள்.


 ஆனந்தமாகவும், இன்பமாகவும், இனிமையாகவும் நீங்கள் வாழ்வதை இந்தப்பிரபஞ்சம் விரும்புகிறது.


ஏனெனில் இந்தப்பிரபஞ்சத்தின் பாசமிகு மகள்/ மகன் நீங்கள் தான்.


உங்களுடைய மன எண்ணங்களை சிதைக்கும் நிகழ்ச்சிகளை உங்கள் வாழ்விலிருந்து தூக்கி தூர எறியுங்கள்!


தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், பாலுணர்வை கொச்சைப்படுத்தும் ஈனர்களின் செய்திகள்.


குடும்ப உறவை சிதைக்கும் பழக்க, வழக்கங்கள் , என நீங்கள் குப்பையில் தூக்கி எறிந்து தீயிட்டுக் கொளுத்த வேண்டிய எண்ணங்கள் ஏராளம்...ஏராளம்...


இதைச்செய்துவிட்டுப் பாருங்கள். உங்கள் மனது இலேசாக , இலகுவாகியிருக்கும். மன இறுக்கம் இல்லாதபடியால் நோய்களிலிருந்து விடுபடுவீர்.


இவ்வறு வாழ்ந்து உங்கள் வாழ்வை நல்எண்ணங்கள், நல் உழைப்பு, நற்சிந்தனையால் நிறையுங்கள். 


வாழ்வு மலரும், புதிய பாதை தெரியும். நீங்கள் ஒரு கதாநாயகனாக/ கதாநாயகியாக உங்கள் வாழ்வு என்ற திரைப்படத்தில் மிளிர்வீர்கள்...


மாற்றமுடியாத எண்ணங்களை தவிருங்கள்!


உதாரணமாக..


பா.ஜா.கா இந்த நாட்டை அழிக்கிறது என்ற செய்தி...


முஸ்லீம்கள் தீவிரவாதிகளாகி இந்த உலகை அழிக்க முற்படுகின்றனர்...


அமைச்சர்கள் கொள்ளையடித்து பல தீவுகளை வாங்குகிறார்கள்...


சீனா நம்மீது போர் தொடுக்க நினைக்கிறது...


இலுமினாட்டிகள் நம்மை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்...


இந்துக்கள் நம்நாட்டில் மைனாரிட்டியாக மாற்றப்படுகின்றனர்...


இது போன்ற செய்திகள் முட்டாள் தனமாக சில வீணர்களால் பரவவிடப்படுகின்றன...


இதை நாம் நினைக்கத்துவங்கும் போது மன உளைச்சல்... நோய் தாக்கம், எதிர்மறை எண்ணங்கள்...

மதநல்லிணக்க சிதைவு.. என எண்ணற்ற தீமைகள்...


இவற்றையெல்லாம் பிரபஞ்சம் பார்த்துக்கொள்ளும் என நீங்கள் நல்லதொரு சுதந்திர எண்ணங்களோடு வாழுங்கள்...


உங்களை எவரும் ஒன்றும் செய்துவிட முடியாது...


ஒரு நொடிப்பொழுதில் கயவர்கள் கொல்லப்படுவர்.


" வினை விதைத்தவன் வினையறுப்பான், திணை விதைத்தவன் திணையறுப்பான்" 


அன்பின் வழியை மீறிச்செல்லும் அத்துணை கொடியவர்களுக்கும் பிரபஞ்சம் நோயை கொடுத்து நோயால் கொள்ளும்... இது சத்தியம்...


அழிவை எண்ணுபவர்கள் அழிவது உறுதி...


ஆனால் அவர்கள் தவறான பரப்புரைகள் மூலம் உங்களுடைய மனங்களை சிதைக்க முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடம் கொடுக்காதீர்.


உங்கள் வாழ்வு உங்கள் எண்ணங்களையும், செயல்களையும், பழக்க, வழக்கங்களை நெறிப்படுத்துவதின் மூலம் சிறக்கும்...


இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!


நித்திய ஆனந்த வாழ்வு பெற வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!


நீங்கள் ஒவ்வொரு உயிரிலும் ஈசன் நீக்கமற கலந்துள்ளான் என்பதை மறவாதீர்.


நீச மனத்தால் மனித மாண்பை இழக்காதீர்...


இறைஉணர்வோன் சங்கர்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி