அன்பே சிவம்

 #குருவாகி_வந்த_திரு.


#யான் சிவமெனும் 

கண்ணாடியில் உயிர் சக்தி 

எனும் உள்ளீடற்ற தன்மையின் 

ஊடே மனமெனும் 

பாத -இரசம் பூசிய 

மெய் பொருளே யான். 


#நீ என்னிடம் காண்பது 

உன் முக பாவங்களே .

என் மன இரச குருவின் 

ஊடே உன் நிலையை 

நீ உணர்கிறாய். உள்ளீடற்ற பிரதிபளிப்பில் நீ உன்னை 

மட்டுமே உணரமுடியும் .

தனித்து எனக்கென்று 

ஒரு முக பாவமும் இல்லை .

நீ என்னை அறிய அதன் 

அதன் காரமாகவே உள்ளீடற்று 

இருப்பதால் அணைத்திலும் 

சிவமான சக்தி கொண்டு இயங்குகிறேன் யான்.


#குருவாகிய என்னை 

அறிந்தே நீ திருவை

உணர முடியும் 

(மனமெனும் குருவே 

திருவாக வந்தது.)

அழுவதும் சிரிப்பதும்  

யான் அல்ல அது என்னில் 

தோன்றும் உன் முக பாவமே.


#உன் மனமெனும் இரசம் 

கரைந்து பாத பர வெளியாக 

இல்லாமல் இருக்குமே யானால் ஊள்ளீடட்ற உயிர் சக்தியின் 

சிவமாகிய யான் நீயே என்று

உணர்வாய்.


#அகம் பிரமாஸ்மி 

தத்துவமசி

யான் உணர்ந்ததும் 

உணர்த்தியதும்

என் நிலையும் இதுவே.

சிவானந்தமே ஜீவ சுகம் 

சிவாயநம.


#ஆத்மஅடியேனின்

#ஆத்மநமஸ்காரம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி