மூளை நோய்கள்

 #மனிதனுக்கு_மூளையில்_ஏற்படும்

#நோய்கள்………


#பற்றி_தெரிந்து_கொள்ளுங்கள்…❓❗


மனிதனின் நினைவுகள், எண்ணங்கள், உணர்வுகள் என அனைத்திற்கும் மூல காரணம் மூளைதான். 


பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் மூளையில் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் 1000 கோடி நியூட்ரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. 


இந்த செல்களை பாதிக்கும் நோய்கள் பல உள்ளது ஆனால் சில முக்கிய நோய்கள் பற்றி இங்கு காண்போம்…❗


#மூளை_நரம்பு_மண்டலம் 

#கீழ்வருமாறு_பிரிக்கப்பட்டுள்ளது…❓


⃣ தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு❓


இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் சூட்டினை சீராய் வைத்தல் 

இவற்றிற்குப் பொறுப்பாகின்றது. 


⃣ மோட்டார் நரம்பு பிரிவு❓


அசைவுகளையும், செயல்களையும் 

மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க 

வைக்கின்றது. 


⃣ சென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு❓


தோல், தசைகளிலிருந்து தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச்செல்வது. இது அங்கு ஆராயப்பட்டு வலி, எரிச்சல், இதம் போன்ற 

உணர்ச்சிகளை மனிதன் உணரச் செய்கின்றது. நரம்பு மண்டலமே அனைத்திற்கும் காரணமாவதால் நரம்பு வலியும் அல்லது நரம்பு பாதிப்பும் மனிதனின் வாழ்வினை 

வெகுவாக பாதித்து விடுகின்றது. 


⭐ #நரம்பு_வலியின்_அறிகுறி_என்ன…❓


நரம்பு பாதிக்கப்படும் பொழுது பலவித 

அறிகுறிகள் தெரியும். பாதிப்பு மூளையிலா, தண்டுவடத்திலா அல்லது 

பரவியுள்ள புற நரம்புகளிலா என்பதனைப் பொறுத்து அறிகுறிகள் இருக்கும். 


♦தன்னிச்சை இயக்க நரம்பு பாதிக்கப்படும் பொழுது... ❓


 * நெஞ்சு வலியினை உணர முடியாது.


* அதிக வியர்வை அல்லது குறைந்த வியர்வை இருக்கும். 


 * வறண்ட கண், வாய் காணப்படும். 


 * மலச்சிக்கல் ஏற்படும். 


 * சிறுநீரகபை சரிவர இயங்காது.

 

 * உடல் உறவில் பிரச்சனை இருக்கும். 


♦மோட்டார் நரம்பு இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் பொழுது.❓


 * உடல் சோர்வு ஏற்படும். 


 * தசை தேய்மானம் காணப்படும். 


 * தசை துடிப்பு இருக்கும். 


 * பக்கவாதம் ஏற்படும். 


♦சென்சரி அதாவது உணர்ச்சி நரம்பு பாதிப்பு ஏற்படும் பொழுது..❓


 * வலி இருக்கும். 


 * மதமதப்பு இருக்கும். 


 * குறுகுறுப்பு, குத்தல் இருக்கும். 


 * எரிச்சல் இருக்கும். 


 * குளிர், சூடு தாங்காமை இருக்கும். சிலருக்கு இரண்டு மூன்று தொந்தரவுகள் 

கூட அறிகுறிகளாகத் தெரியலாம். 


🔴 #மூளை_தொடர்பான_நோய்கள்…❗❓


⃣ #பெருமூளை_வாதம் 

(Cerebral palsy) 


குழந்தையாக இருக்கும்போதே 

மூளை  பாதிப்படைவதால் 

ஏற்படும் பலவகை உடலியக்கக் குறைபாடுகளை குறிக்கின்றது. இந்த குறைபாடு பெருமூளை 

பாதிப்படைவதால் ஏற்படுவதால் 

பெருமூளை வாதம் அல்லது 

பெருமூளை முடக்கு நோய் 

எனப்படுகிறது. 


பாதிப்படைந்தவரால்…… 


👉பொதுவாக நிற்கவோ நடக்கவோ இயலாது. 


சிலருக்கு பகுதியான முடக்கு வாதமும் ஏற்படுவதுண்டு. 


தவிரவும் இவர்களுக்கு படிப்பது தடங்கல்கள் அல்லது 

மனவளர்ச்சிக் குறை போன்ற சிக்கல்களும் எழலாம். 


பலவகையான பெருமூளை வாத நோய் உள்ளன. மிகவும் பரவலான வகையாக இருப்பது வலிப்பு பெருமூளை வாதமாகும். 


⃣ #மூளை_வாதம்


மூளையில் ஏற்படும் வாதத்தை மூளைவாதம் என்பர். இது ஒரு நோயல்ல. மூளையில் ஏற்படும் ஓர் ஊனம் என்று கூறலாம். இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் என்பது தவறான கருத்து. இந்நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 75 விழுக்காடு மனவளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள். மனவளர்ச்சிக் குறை தவிர பேச்சு மற்றும் கேட்டலில் குறைபாடு, உணர்வுகளில் ஏற்படும் குறைபாடு, பார்வைக் கோளாறு, வலிப்பு, புலனுணர்வு மாறுபாடுகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் அதிகமாகவோ இக்குழந்தைகளுக்கு ஏற்படலாம்.


⃣ #மூளையழற்சி

(Encephalitis)


மூளையழற்சி  என்பது மூளையில் ஏற்படும் ஒரு கடிய அழற்சி நோய் ஆகும். இந்த தொற்றுநோய்க்கான 

நோய்க்காரணிகள் தீநுண்மம், 

பாக்டீரியா போன்றனவாகும். 

தலைவலி, காய்ச்சல், குழப்பம், சோர்வு, களைப்பு போன்றன இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். பின்னர் நோய் தீவிர நிலையை அடையும்போது 

வலிப்பு, தசைவலிப்பு, நடுக்கம், உளமாயம், நினைவாற்றல் பிரச்சனைகள் என்பன தோன்றும்.


⃣ #மூளைத்_திசு_நலிவு 

(Cerebral atrophy) 


மூளைத் திசு நலிவு (Cerebral atrophy) மூளையை பாதிக்கக்கூடிய நோய்களில் உள்ள ஓர் பொதுவான குணமாகும். திசுக்களின் இழப்பே திசு நலிவு எனப்படுகிறது. இந்நோயில் மூளையிலுள்ள நரம்பணுக்களின் இழப்பும் அவற்றிற்கிடையேயான தொடர்புகளும் பாதிக்கப்படுகின்றன. இது முழுப்பகுதியையும் தாக்கி மூளையின் அளவு சுருங்கியிருக்கலாம்; அல்லது ஓர் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்கி அப்பகுதி கட்டுப்படுத்தும் மூளையின் செயற்திறனை மட்டும் குறைக்கலாம். முன்மூளையின் இரு அரைக்கோளங்கும் பாதிப்படைந்தால் தன்னிச்சையான செயல்களை ஆற்றும் திறனும் தன்னுணர்வுள்ள எண்ணங்களும் குறைபடலாம்.


❓அறிகுறிகள்……❓


மூளைத்திசு நலிவு நோய் ஏற்படுத்தும் தொடர்புடைய நோய்கள் முதுமை மறதி, வலிப்புத்தாக்கம் மற்றும் மொழியாற்றலைக் குறைக்கும் அபேசியா எனப்படும் பேச்சுக்குறை நோய்கள். முதுமை மறதியில் ஞாபக சக்தி குறைவதுடன், சமூக,பணியிட செயல்பாடுகளைக் குறைக்குமளவிலான அறிவுத்திறன் குன்றல் மிகுதியாகக் காணலாம். நினைவுகள்,ஒருமுகப்படுத்தல், நுண்கருத்து, கற்கும் திறன், காட்சி-இடைவெளி உணர்வுகள், திட்டமிடல்,ஒருங்கிணைத்தல் மற்றும் வரிசைப்படுத்துதல் போன்ற தலைமைப்பண்புகள் போன்றவையும் குறைபடலாம்.


வலிப்புத்தாக்கம் பல்வகைகளில் வெளிப்படுகின்றன;ஒருமுகமை இல்லாதிருத்தல், வினோதமான திரும்ப திரும்ப செய்யும் அசைவுகள், தன்னுணர்வில்லாதிருத்தல் மற்றும் தசை வலிப்புகள் இவற்றில் சில வெளிப்பாடுகளாகும்.


அபேசியா என்று மொழியை புரிந்து கொள்ளும் மற்றும் பேசக்கூடிய திறனை பாதிக்கின்ற நோய்கள் குறிப்பிடப்படுகின்றன. உள்வாங்கு அபேசியாவில் புரிதல் குறைபடுகிறது. வெளியீட்டு அபேசியாவின் குணங்களாக சொற்களின் வழமையில்லாத பயன்பாடு, பகுதியான சொற்றொடர்கள், இணைக்கப்படாத வரிகள், முடிக்காத வரிகள் என்பன அடங்கும்.


⃣ #மூளைக்_காய்ச்சல்


மூளைச்சவ்வுக் காய்ச்சல் அல்லது மூளைக் காய்ச்சல் (Brain fever) என்பது மூளையைச் சுற்றி உள்ள மூளைச் சவ்வுகளின் வீக்கமாகும். பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற நோய்க்காரணிகளினால் இந்நோய் ஏற்படுகிறது. தலைவலி, ஒளி விரும்பாமை, எரிச்சல், கழுத்துப் பகுதியில் தசை இறுக்கம், காய்ச்சல் மற்றும் பிற நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.


🔯 மூளைக்காய்ச்சல் பொதுவாக இரு வகைப்படும். அவை❓


⭕ 1, என்செபாலைட்டிஸ் (Encephalitis)


⭕ 2, மேனிஞ்சைட்டிஸ் (Meningitis) ஆகும்.


வைரஸ் கிருமிகளால் மூளையும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய் விடுகின்றன. இதுதான் மூளைக் காய்ச்சல் எனப்படுகிறது. இதனால், உயிருக்கே ஆபத்து நேரலாம்.நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சரியான சிகிச்சை அளித்தால் பாதிப்பில் இருந்து மீளலாம். இந்த மூளைக்காய்ச்சல் நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் ஏற்படுகிறது. மூளைக்காய்ச்சல் நோயால் கை கால்கள் செயல் இழந்துபோதல், வலிப்பு, கண் பாதிப்பு, காது கேளாமே போன்ற நிரந்தரப் பாதிப்புகள் ஏற்படலாம்.மூளைக் காய்ச்சல் நோய் ஒருவருக்கு உடனடியாகவும் வரலாம். மெதுவாகவும் வரலாம்.


⭐மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்


தாவாட்டி அம்மை, மணல்வாரி அம்மை, ரூபெல்லா, சைட்டோ மெகாலோ வைரஸ், எப்ஸ்டீன் வைரஸ், பாக்ஸ் வைரஸ், ஈக்குன் வைரஸ், ரேபிஸ் வைரஸ், டெங்கு வைரஸ் போன்றவை மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்.நோயின் தீவிரத்தை தீர்மானிப்பவை.நோய்க் கிருமிகளின் வீரியம், நோயாளியின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புத் திறன், மூளையில் உள்ள நீரின் அழுத்தம் ஆகியவைதான் மூளைக்காய்ச்சல் நோயின் தீவிரத்தை தீர்மானிக்கின்றன.


❓வகைகள்❓


மூளைக்காய்ச்சல் மூன்று வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


அறிகுறிகள் இல்லாமலும் நோயின் தாக்கம் குறைவாகவும் இருத்தல்.


மூளையின் பாதுகாப்பான் ஜவ்வைத் தாக்குவது.


மூளையில் பாதுகாப்பான ஜவ்வையும், மூளையையும் மிகத் தீவிரமாகத் தாக்கி நரம்பு மண்டலத்தை செயல் இழக்க வைப்பது.


❓அறிகுறிகள்❓


அதிகமான காய்ச்சல்


தலைவலி


வாந்தி


மூளை நிலைகுலைதல்


நினைவிழத்தல்


வலிப்பு


இதயம் மற்றும் சுவாச உறுப்புகள் செயலிழத்தல்


அதிக ஆழ்ந்த மூச்சு


கண் தசை நார்கள் செயல் இழப்பு


கை, கால்கள் முடங்கிப் போதல்.


⃣ #மூளை_சிதைவு_நோய்


'★ஸ்பைனோசெரிபெலார் அடாக்சியா'★ என்ற அபூர்வ வகை நரம்புத் தளர்ச்சி நோய் உள்ளது. மூளை செல்களைப் படிப்படியாக சேதப்படுத்தி மரணத்தை தரக்கூடிய இந்த கொடிய நோய் பரம்பரையாக ஏற்படக்கூடியது.


👉உடல் இயக்கத்தில் தடுமாற்றம், 


👉பேச்சு குளறுதல், 


👉தெளிவற்ற பார்வை, 


👉உணவை விழுங்குவதில் சிரமம் 


போன்ற அறிகுறிகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும்.


சிறுபிள்ளைப் பருவம் முடியும் போது அல்லது வாலிபப் பருவத் தொடக்கத்திலேயே இந்த நோயின் அறிகுறிகள் தொடங்கிவிடும். படிப்படியாக நிலைமை மோசமாகி இறுதியில் மரணத்தில் கொண்டு விட்டு விடும்.  


★"ஸ்பைனோசெரிபெலார் அடாக்சியா★ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும் சிரமங்கள் கொடுமையானது. 


மது அருந்தியவர்கள் அதன் போதையை அனுபவிக்க முடியாமல் தலைக்கிறுக்கு பிடித்து ஆடும்நிலைதான் கிட்டத்தட்ட இந்த நோயாளிகளுக்கு ஏற்படும்.


👉அவர்களால் சுயமாக சாப்பிட முடியாது. 


👉துணிமணிகளைத் துவைக்க இயலாது. 


👉ஒருகட்டத்தில் வீல்சேர்களில் அமர்ந்தபடி வாழ்க்கையைக் கழிக்க நேரிடும்.


★ஸ்பைனோசெரிபெலார் அடாக்சியா★ என்பது ஹன்டிங்டன் நோய் போன்ற மூளை சிதைவு நோய் வகைகளைச் சேர்ந்தது. 


படிப்படியாக தொடங்கி மூளையை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் இந்த வகை நோய்


⃣ #அல்ஸிமர்ஸ்_நோய்


⭐அல்ஸிமர்ஸ் நோய்


இந்நோய் மூளையில் ஏற்படும் குறைபாட்டினால் ஏற்படுகிறது. இந்நோயினை ஆலாய்ஸ் அல்ஸ்மீர் என்பவர் முதன்முதலில் விளக்கினார். எனவே அவரின் பெயர் இந்நோய்க்கு சூட்டப்பட்டது.


❓அறிகுறிகள்


இது வேகமாய் வளரக்கூடிய மற்றும் மரணத்தை தோற்றுவிக்கும் ஒரு மூளைநோய்.


அல்ஸிமர்ஸ், மூளை செல்களை அழிக்கிறது. இதனால் ஒருவரின் வேலை மற்றும் சமூக வாழ்வினை மோசமாக பாதிக்கினற வகையில், நினைவாற்றல், சிந்தித்தல் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றில் கோளாருகள் ஏற்படுகின்றன


அல்ஸிமர்ஸ் நாளடைவில் மோசமடைந்து மரணத்தை ஏற்படித்தும்


அனுதின வாழ்வில் இடையூறு விளைவிக்கும் நினைவாற்றல் இழப்பு (டிமென்ஷியா) மற்றும் அறிவாற்றல் திறன் குறைபாடுகள்


❓அல்ஸிமர்ஸ் நோயின் 

10 எச்சரிக்கையான அறிகுறிகள்❓


⭕ஞாபகம் இழப்பு : 


சமீபத்தில் கற்றவைகளை மறந்துபோதல் என்பது அறிவாற்றல் இழப்பின் (டிமன்ஷியா) பொதுவான ஆரம்ப அறிகுறியாகும். ஒரு நபர் அடிக்கடி மறந்து போக ஆரம்பித்தல் அல்லது கற்றவற்றை நினைவுக்கு கொண்டுவர முடியாத நிலையாகும்


⭕தெரிந்தவற்றை சரிவர செய்ய முடியாதநிலை : 


அறிவாற்றல் இழப்பு உள்ள நபர்கள் தினந்தோறும் செய்யும் செயல்களை கூட திட்டமிட்டு செய்தலை கடினமாக உணர்கின்றனர். சமைத்தல், தொலைபேசியை சரியாக வைத்தல் அல்லது விளையாடுதல் போன்றவற்றில் கைகொள்ள வேண்டிய படிகளை மறக்கின்றனர்.


⭕மொழிப் பிரச்சினை : 


அல்ஸிமர்ஸ் நோயுடன் உள்ள நபர்கள், சாதாரண சிறிய வார்த்தைகளை மறந்து விடுவர். சம்மபந்தம் இல்லாத பிற வார்த்தைகளை உபயோகிப்பர். அவர்களின் பேச்சு மற்றும் எழுதது என்னவென்று அறிவது கடினம். உதாரணம். அவர்களால் பல்துலக்கும் பிரஷை கண்டெடுக்க இயலாத போது, "பிரஷ்" என்று கேட்பதற்கு பதிலாக, "என் வாய்க்கான பொருள் எங்கே" என்று கேட்பர்.


⭕காலம் மற்றும் இடம் போன்றவற்றை பற்றின திசையமைவு அறிவு இல்லாமை : 


அல்ஸிமர்ஸ் நோயுடன் உள்ள நபர்கள், தங்கள் வசிக்கும் இடத்தை கூட அறிய முடியாதவர்களாய் இருப்பார்கள். எங்கே இருக்கின்றார்கள், எப்படி அவ்விடத்திற்கு வந்தார்கள் என்பதை மறந்து விடுவர், மற்றும் அங்கிருந்து எப்படி வீட்டிற்கு செல்வது என்பது கூட அவர்களுக்கு தெரியாது.


⭕குறைந்த முடிவு எடுக்கும் திறன் : 


அல்ஸிமர்ஸ் நோயுடன் உள்ள நபர்களின் ஆடை அணியும் தன்மை வித்தியாசப்படலாம். உஷ்ணம் நிறைந்த நாட்களில் ஒன்றின் மேல் ஒன்றாய் பல உடைகளை அணிந்து கொள்வர். அல்லது, குளிர் நாட்களில் குறைந்த உடைகளை அணிந்து கொள்வர். அவர்களின் நிதானிக்கும் திறன் குறைவாகவே இருக்கும். உ.ம். தெரியாத நபருக்கு அதிக பணத்தை கொடுப்பது போன்றவை.


⭕தெளிவாக யோசிப்பதில் பிரச்சினை : 


அல்ஸிமர்ஸ் நோய் கண்ட சிலரில், சிக்கலான மனக்கடைமைய செய்வது கடினமாக இருக்கலாம். உ.ம். எண்கள் யாவை மற்றும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது போன்றவற்றை மறத்தல்


⭕பொருட்களை மாற்றிவைத்தல் : 


அல்ஸிமர்ஸ் நோயுள்ள ஒரு நபர் பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல் வேறு இடத்தில் வைப்பர். உ.ம். இரும்பை எடுத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தல்.


⭕மனநிலை மற்றும் நடக்கையில் மாற்றங்கள் : 


அல்ஸிமர்ஸ் நோய் கண்ட சிலரில் மனநிலை விரைவாக மாறுபடும். உ.ம். அமைதியாக இருப்பர் பின் அழுவர், எரிச்சலடைவர் ஆனால் எந்தவித காரணங்களும் இருக்காது.


⭕ஆளுமையில் மாற்றங்கள் : 


அல்ஸிமர்ஸ் நோய் கண்ட ஒரு நபரின் ஆளுமை நாடகத்தைப்போல மாறும். அவர்கள் மனக்குழப்பமடையலாம், சந்தேகமடையலாம், பயப்படலாம் அல்லது ஒரு குடும்ப நபரை சார்ந்திருக்கலாம்.


⭕தன்முயற்சித்திறன் இழப்பு : 


அல்ஸிமர்ஸ் நோய் கண்ட நபர் எந்தவித செயலும் செய்யாமல் காணப்படலாம். உ.ம். தொலைக்காட்சி பெட்டியின் முன் பல மணிநேரங்கள் அமர்ந்திருத்தல், இயல்பைவிட அதிக நேரம் தூங்குதல் அல்லது இயல்பான வேலைகளை செய்யாமல் இருத்தல்.


⃣ #மூளை_செயலிழப்பு

(ஸ்ட்ரோக்)


மனித மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களில் (தமனி) ஏற்படுகின்ற அடைப்பினால்தான் ஸ்ட்ரோக் ஏற்படுகின்றன. மூளையின் பகுதிகள் பாதிக்கப்படுவதுடன் மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயல்களும்/பாகங்களும் கட்டுப்பாட்டை இழக்கின்றன. உதாரணமாக, ஒரு கை/கால் செயல்படாமை அல்லது பேச இயலாமை. இந்த பாதிப்பு தற்காலிகமானதாகவோ, நிரந்தரமாகவோ, பகுதி அளவு பாதிப்பாகவோ அல்லது முழுமையான அளவிலோ இருக்கலாம். அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெற்றால், மூளைக்கு முறையாக ரத்தம் செலுத்த வழிவகை செய்யப்பட்டு, பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமென்று மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளார்கள்.


❓எனக்கு ஸ்ட்ரோக் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது❓


💔திடீரென்று முகத்தின் ஒரு பகுதி , உடலின் ஒரு புறத்தில் உள்ள கை/கால்களில் மட்டும் ஏற்படும் குறைபாடு (வலுவின்மை) அல்லது உணர்ச்சியற்ற நிலை.


💔திடீரென்று ஏற்படும் பார்வை மங்கல் அல்லது குறைபாடு, குறிப்பாக ஒரு கண்ணில் மட்டும் ஏற்படுதல்.


💔பேச முடியாமை, பேசுவதில் தடுமாற்றம் அல்லது பிறர் சொல்லுவதைப் புரிந்து கொள்வதில் சிரமம்.


💔காரணமின்றி பயங்கரமாக வரும் திடீர் தலைவலி


💔காரணமின்றி கிறு கிறுவென வருதல், தடுமாற்றமான நடை அல்லது கீழே விழுதல், குறிப்பாக மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து வருதல்.


ஸ்ட்ரோக் வருவதைச் சுட்டிக்காட்டும் மற்றொரு அபாய அறிகுறிதான் சிறு அளவிலான தாற்காலிகத் தாக்குதல் [ட்ரான்ஸியென்ட் இஸ்செமிக் அட்டாக்- டி ஐ ஏ]. டி ஐ ஏ என்பது 'சிறு அளவிலான தாக்குதல்'ஆகும். 


மாரடைப்பு வருவதற்கான ஒத்த அறிகுறிகளுடன் வந்தாலும், சில நிமிடங்களுக்கு மட்டுமே இது நீடிக்கும். ஆனாலும் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது. டி ஐ ஏ தாக்குதல் வந்துவிட்டால் அது பிற்காலத்தில் மாரடைப்பு ஏற்பட கட்டாயம் வழி வகுக்கும். உங்களுக்கு டி ஐ ஏ இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் ,உடனடியாக மருத்துவரை அணுகவும்.


❗ஸ்ட்ரோக் வருவதற்கான காரணிகள்:❓


⭐அத்திரோஸ்க்ளிரோசிஸ் (ரத்த நாளங்கள் சுருங்குதல்)


⭐கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய்


⭐உயர் ரத்த அழுத்தம்


⭐அதிக அளவிலான கொலஸ்ட்ரால்


⭐புகை பிடித்தல்


ஏற்கனவே ஏற்பட்ட சிறு அளவிலான தாற்காலிகத் தாக்குதல்[Transient Ischemic Attack]


💔 இதய நோய்கள் 💔


கரோடிட் ஆர்ட்டெரி நோய் (உங்கள் மூளைக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம்)


❓ஸ்ட்ரோக் வராமல் தடுப்பது எப்படி❓


உங்கள் குடும்ப மருத்துவரிடம் இதற்கான காரணிகளையும் (காரணிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன) பாதிப்பைக் குறைப்பதற்கான வழிகளையும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ஸ்ட்ரோக் வராமல் தடுக்க சில ஆலோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன.


உயர் ரத்த அழுத்தம் இருந்தால்,உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி அதைக் கட்டுப்படுத்துங்கள்


ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதற்காக அதிக கொழுப்பும் கொலஸ்ட்ராலும் உடைய உணவு வகைகளைத் தவிர்த்தல் & உப்பு (சோடியம்) குறைவான உணவுகளை உண்ணுதல்.


நீரிழிவு நோய் இருந்தால்,சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்தல்


மது அருந்தும் பழக்கத்தை முடிந்த அளவு குறைத்து அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.


புகை பிடிக்காதீர். புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால், புகைப்பிடிக்க ஆரம்பிக்காதீர்.


ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்காமல் இருக்க மருத்துவ பரிசோதனைகளைத் தொடர்ந்து முறையாக அவ்வப்போது செய்து கொள்ளுதல் மிக அவசியம். ஆஸ்ப்ரின் மருந்தைக் குறைந்த அளவு டோஸில் உட்கொள்ளுதல் மாரடைப்பினால் வரும் பாதிப்பினைக் குறைக்குமா என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தைத் தடுக்க காரணமான கட்டிகள் (அடைப்புகள்) உருவாதலைத் தடுக்க ஆஸ்ப்ரின் மருந்து உதவி செய்யும்.


⃣ #டிமென்ஷியா


'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு என்று எல்லாமே பாதிக்கப்படும்.


இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் அனைத்து தேவைகளுக்கும் மற்றவரின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு

தள்ளப்படுவார்.


⭐'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் என்றால் என்ன❓

இது யாரை பாதிக்கும்❓


'டிமென்ஷியா' என்பது மூளை பாதிப்படைவதால் ஏற்படும் நோய். அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மறதி நோயின் மிகப் பொது வடிவமான அல்சைமர் நோய் தாக்குதல் காரணனமாக, 'டிமென்ஷியா' அதிகமாக வருகிறது.


அது தவிர, மூளைக்கு ரத்த ஓட்டம் சரியாக இல்லாத போது, ஏற்படும் மறதி நோயை 'வாஸ்குலர் டிமென்ஷியா' என்று சொல்லுவார்கள்.


பார்கின்சன் நோய் தாக்குதல் போன்ற காரணங்களாலும் டிமென்ஷியா ஏற்படும்.


பொதுவாக 60 அல்லது 65 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


மிகச் சிலருக்கு மட்டுமே 40 அல்லது 45 வயதில் இந்த நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. அது மிகவும் அரிது.


அதனால், 60 அல்லது 65 வயதை கடந்தவர்கள் வழக்கத்தை விட நினைவிழப்பு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


⃣⃣ #பார்கின்சன்


பார்கின்சன் நோய் உடம்பில் மற்றும் மூளை உள்ள செல்களை பாதிக்கும் ஒரு தீவிரமான குறைபாடு கொண்ட நோய்.

மூளையின் மைய நரம்பு மண்டலத்தை இந்நோய் தாக்குவதாலே இவ்வாறு ஏற்படுகிறது. 


மனித உடலின் மிக முக்கியமான இரண்டு பகுதிகள்’ என மூளையையும் இதயத்தையும் சொல்லலாம். 


உயிர் இயக்கத்துக்கு இதயம் எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு உடலின் இயக்கத்துக்கு மூளை அவசியம். 

அப்படிப்பட்ட மூளை செயல்பாட்டுக்கு உதவுவது நரம்பு மண்டலங்கள். 


பார்க்கின்சன் என்பது மூளை நரம்பு மண்டலம் சிதைவால் ஏற்படும் நோய். 

மூளையில் உள்ள டோபமைன் எனும் ரசாயனக் குறைபாட்டால் ஏற்படுகிறது. 


👉நரம்பு செயலிழந்தால் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில்……


1, ‘அல்சைமர்’ (Alzheimer's disease) எனப்படும் ஞாபக மறதி முதல் இடத்திலும், 


2, ‘பார்கின்சன்’ (Parkinson) இரண்டாவது இடத்திலும் உள்ளன. 


அல்சைமர் பாதிப்பு, பலராலும் அறியப்பட்ட ஒன்று! 


❓அது என்ன பார்கின்சன் பாதிப்பு❓


நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் டோபமைன் (Dopamine) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்புதான் பார்கின்சன்.


நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பாதிப்பான இது, தசை இயக்கத்தை பாதிக்கக்கூடியது. மூட்டுகள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்துவிடும். நிலைமை கடினமாகும்போது, நிற்பது, நடப்பது,


பொருள்களைக் கையாள்வது, உடலை பேலன்ஸ் செய்வது... என அன்றாடச் செயல்கள் பலவும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையை முழுமையாக குணப்படுத்த 

முடியும்.


இது ஒரு நோய். இது மைய நரம்பு மண்டலத்தை முழுவதுமாக சிதைக்கக்கூடிய நோய் ஆகும். இதன் அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் சரிவர தெரிவதில்லை. 


போக போக இதன் வீரியம் அதிகமாகும். இதில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இயக்கத்திறன், பேச்சு சரிவர இருப்பதில்லை.


இதன் முக்கியமான அறிகுறி “Tremors” அதாவது நடுக்கம். இந்த நடுக்கம் முதலில் கையில் ஏற்படும். 


நடுக்கம் ஏற்படும் கை ஓய்வு நிலையில் உள்ளபோது மட்டுமே நடுக்கம் இருக்கும். 


பாதிப்படைந்த கையால் வேலை செய்யும்போது நடுக்கம் ஏற்படாது நடுக்கம் ஏற்பட்டால் கூட ஓய்வு நிலையில் ஏற்படும் நடுக்கத்தைவிட குறைவாகவே இருக்கும். 


மனசோர்வு, கோவம் ஏற்படும்போது நடுக்கம் அதிகமாகும். 


தசைநார் வலிப்பாக நோய். இந்நோய் பாதிக்கப்பட்ட 30% பேர்களுக்கு அந்நோய் தொடங்கும் கட்டத்தில் தசைநார் வலிப்பு ஏற்படுவதில்லை. 


"பார்கின்சன் பாதிப்பு ஏற்படுவதற்கு, வயது முதிர்வு, மரபுக்குறைபாடு, குடும்பச்சூழல் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதுதான் காரணம் எனக் குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. 


பெரும்பாலும் 50 முதல் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, இப்போது சிறு வயதினறுக்கும் பார்கின்சன் எளிதில் ஏற்படுகிறது. பாதிக்கப்படுபவர்களில் ஆண்கள்தான் அதிகமிருக்கிறார்கள். 


பார்கின்சன் தசை இயக்கத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். இந்த பாதிப்புக்கு ஆளானவர்களால் தொடர்ந்து பேசவோ, எழுதவோ, ஒரு பொருளைச் சரியாகப் பிடிக்கவோ முடியாது. 


கை நடுக்கம், சுருக்கமாகப் பேசுவது, முறையற்ற கையழுத்து நடை, கவனச்சிதறல் இவர்களுக்கு இருக்கும்.”


❓அறிகுறிகள் என்ன❓


🔴 உடல் இயக்கம் தொடர்பான 

பிரச்னைகள் - 


கை, விரல் நடுக்கங்கள், உடலியக்கம் மாற்றம், மிக மெதுவாகச் செயல்களைச் செய்தல், கூன் விழுவது போன்ற உணர்வு, நடப்பதில் சிக்கல் போன்றவை.


🔴 ஆற்றல் பிரச்னைகள் - 


உடலில் திடீரென எந்தச் செயல்களையும் சரியாகச் செய்ய முடியாமல் சக்தி குறைந்துபோவது.


🔴 தகவல் பரிமாற்றம் தொடர்பான பிரச்னைகள் - 


பேசுவது, எழுதுவதில் பிரச்னை. பேசும்போது கோர்வையாக வார்த்தை வராமல் தடுமாறுவது. எழுதும்போது எழுத்து வழக்கம்போல் இல்லாமல், கிறுக்கலாக விழுவது.


🔴 தூக்கப் பிரச்னைகள் - 


அரைத் தூக்கத்தில் விழித்துக்கொள்ளுதல், தூக்கமின்மை போன்றவை. 


🔴பார்வைப் பிரச்னைகள் - 


எதிரில் இருக்கும் பிம்பங்களைப் பார்க்கும்போது, படிக்கும்போது சரியாகப் புலனாகாமல் இருத்தல். இவையெல்லாம், பொதுவான சில அறிகுறிகள். சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடு


* பேச்சுத்திறன் மெதுவாக குறையும். 


* பேசுவதைப் புரிந்து கொள்ளுவதிலும் சிரமம் ஏற்படும். 


* துரிதமாகச் செயல்படும் நிலை குறையும். 


* முக பாவனைகள் குறையும். 


* பல் தேய்ப்பதில், நடப்பதில், பேசுவதில் சிரமம் ஏற்படும். 


* தசைகளில் இறுக்கம் ஏற்படும். 


* நிமிர்ந்து நிற்க இயலாத நிலை உண்டாகும். 


* நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ, நிற்கும்போதோ, திடீரென்று விழுவதற்கு வாய்ப்பு உண்டு. 


* பொதுவாகக் கால், கை, தாடை, முகம் போன்றவற்றில் நடுக்கம்.


* செயல்பாடுகளில் வேகம் குறைந்த உணர்வு.


* கை, கால்கள், முதுகுப் பகுதியில் இறுக்கம். 


* ஒரு செயல்பாட்டை நேர்த்தியாக செய்வதில் சிரமம் இருக்கும். 


* களைப்பு, 


* மனச் சோர்வு, 


* மலச்சிக்கல்,  


* சொற்களை உச்சரித்தல் போன்றனவும் கடினமாகும்.


* நடுங்கிய பேச்சு


* பேச்சுக்குளறல்


* உணர்ச்சியின்மை


* பதற்றம்


* முகர்தல் உணர்வுக் குறைவு அல்லது இழப்பு


* வலி, நரம்பு நோய், தசை, மூட்டுகள் மற்றும் தசைநாண்கள், நெருக்கடியை ஏற்படுத்துதல்.


* குற்றுநிலை குறைந்த இரத்த அழுத்தம்.


* எண்ணெய்ப் பசையுள்ள சருமம் மற்றும் 


*சிவந்த தோல் அழற்சி


*சிறுநீரக அடங்காமை  இரவில் சிறுநீர் மிகைப்பு (இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தல்)


* மாறிய பாலுணர்வுச் செயல்பாடு,

   பாலியல் விழிப்புணர்ச்சி

   வலுக்குறை.


* அதிகப்படியாக வியர்த்தல்


*இமைத்தல் விகிதம் குறைந்துவிடல்.


*கண் பகுதிகளில் அழற்சி


* கண்ணீர் திரையில் மாற்றம்


* காட்சிக்குரிய மாயத்தோற்றங்கள்.


* கண் குவிதல் குறைதல்


* இமைச் சுருக்கம்.

 

* விழியசைவில் மாற்றங்கள் 


* இமைகளைத் திறப்பதற்குச் சிரமமாக இருத்தல்.


மூளையின் மைய நரம்பு மண்டலத்தை இந்நோய் தாக்குவதாலே இவ்வாறு ஏற்படுகிறது. 


இது பொதுவாக மூளையின் டோபோமினர்ஜிக் நரம்பணுக்களில் உற்பத்தியாகும் டோபாமைனின் பற்றாக்குறையான உருவாக்கம் மற்றும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது.


பார்கின்சன் நோய் உடம்பில் மற்றும் மூளை உள்ள செல்களை பாதிக்கூம் ஒரு தீவிரமான குறைபாடு கொண்ட நோய். 


இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான உடற்பயிற்சி தேவை. நாட்கள் செல்ல செல்ல இதன் அறிகுறிகள் மிக மோசமாக மாறும். அதாவது……… 


நம் தோற்றத்தில் கூட மாறுபாடுகள் ஏற்படும். 


மூட்டு விறைப்பு ஏற்பட்டு நடை மற்றும் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். 


மங்கிய தோற்றம் உண்டாகும். 


பதற்றம் அதிகமாக இருக்கும். 


தற்போது  parkinson’s dieseas நோயை குணப்படுத்த ஆங்கில மருந்து முறைகள் இல்லை. 


இது ஒரு உயிக்கொல்லி நோய் அல்ல. காலத்தால் ஏற்பட்டு தீவிரமடைய கூடிய ஒரு வகையான நோய். ஆனால் இது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் குறைவுதான். 


⃣⃣ #மூளை_சுருங்குதல்


⭐மூளை சுருங்குதல் எப்படி நடக்கிறது?


வயதாவதை அறிய சிலபல அறிகுறிகள் இருப்பதுபோல் மூளை சுருங்குதலும் மூப்பின் அறிகுறியே. நாம் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம் மூளையின் எடை ஆண்டுதோறும் 0.5 சதவீதம் குறைகிறது.


சாதாரணமாக வரும் வயது மூப்பினால் மூளையின் எடை 10 வருடத்தில் 1.5 சதவீதம் வரை குறைவதாக கண்டுள்ளனர். இந்த எடை குறைதல் ஒருவர் வாலிப வயதுக்கு வந்தது முதல் ஆரம்பித்து 60 வயதுக்குமேல் முக்கியமாக தெரிய ஆரம்பிக்கிறது. இதற்கு மூல காரணம் நம் மூளையின் செல்கள் இயற்கையாகவே வயது ஆக ஆக குறைவதால் ஏற்படுவதாகும்.


மூளை சுருங்குதல் இயற்கை எனக் கூறினாலும் வயதாவது மட்டுமே ஒரே காரணம் இல்லை. தூக்கமின்மை, பதட்டப்படுதல் போன்றவை மூளையின் கொள்ளளவை குறைக்கின்றது. ஆரோக்கியமுடன் கூடிய வயதானவர்களில் குறைவான தூக்கமுள்ளவருடன் நல்ல தூக்கம் உள்ளவரை ஒப்பிடும்போது குறைவான தூக்கமுள்ளவரின் மூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகமே.


ஒவ்வொரு மணி நேர தூக்கமின்மையும் ஒருவரது உடல் சுருக்கத்துடன் அவரது அறிவாற்றல் திறனில் 0.67 சதவீதம் அளவு குறைக்கின்றது.


வைட்டமின் பி-12 குறைபாடு கணிசமாக அறிவு செயல் நலிவை ஏற்படுத்தும். ஒரு ஆராய்ச்சியின்படி ஆரோக்கியமான நபர்களில், ஆனால் சாதாரண அளவு வைட்டமின் பி-12 கொண்டவர் களின் மூளை அளவு, ஆரோக்கியத்துடன் அதிக அளவு வைட்டமின் பி-12 கொண்டவர்களின் மூளையின் அளவை விட குறைவாக இருப்பது.


இந்த வகையான செயல் நலிவு கொண்ட மூளை உருவாவதை நம்மால் தடுக்க முடியும், மீட்டெடுக்கவும் முடியும். எப்படி எனில் நம் உடலின் வைட்டமின் பி-12 அளவை மீட்டெடுப்பதன் மூலம்.


மூளையின் ‘ஹிப்போகாம்பஸ்’ 

(Hippocampus) தன் அளவில் இருந்து குறைவதால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுவது என்பதை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். மூளையின் இப்பகுதி தான் நாம் கற்பதற்கும் நினைவு நிற்பதற்கும் மிகவும் பயன்படுகிறது. அதிக வருடங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிலர் குறைந்த வயதிலேயே இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவ்வகை மூளைத் திசுக்கள் குறைபாடு அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கிறது.


மேற்கூறிய நோய் கொண்டவர் களுக்கு மூளை செயல் நலிவு இருப்பின் நோய்களின் தாக்கம் வருவதுடன் உடலுக்கு பலத்த சேதத்தையும் தரும்.


நீரிழிவு நோயும் மூளையின் செயல் நலிவுக்கு மற்றொரு காரணமாக உள்ளது.

மேலும் அதிக காலம் நீரிழிவு நோய் இருந்தவர்களுக்கு அதிக சுருக்கமும் ஏற்படும்.


மூளையிலுள்ள தசைக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கிரே மேட்டர் (Grey matter) தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இவ்வகை கிரே மேட்டர் தான் நமக்கு பார்வை, கேட்கும் திறன், பேசுதல், ஞாபக சக்தி மற்றும் உணர்வு களுக்கு மூல காரணமாக இருக்கிறது.


மூளையின் செயல் நலிவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியாத சில காரணங்கள் உள்ளன. இது தவிர நம்முடைய வாழ்க்கை முறைகளாலும் மூளை பாதிக்கப்படுகின்றது.


🔯 ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதும் மிக அவசியம். மனசோர்வு இல்லாமல், ஆரோக்கியமான உணவு அருந்துதல் இதை மேற்கொண்டால் ஒரு நோயும் நம்மை அணுகாமல் வாழலாம்!…

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி