வாழ்க்கை

 அன்பர்களே!

தமிழ் வார்த்தைகளின் நூதன பொருள்.


( எம்முடைய புரிதல்)


வாழ்க்கை - வாழ் + கை.


கை என்பது கைவல்லியம் எனப்பொருள்படும்.


கை- க்+ ஐ


ஐ என்ற ஒரு சொல் வார்த்தைக்கு " இறைவன்" என்று பொருள்.


வல்லியம் என்பது வல்ல+ இயம்


இறைவனின் இயக்கத்தை நம்முள்ளே நடத்துவது என்பது கைவல்லியம் என்பதாகும்.


கைவல்லியம் சமாதி அடையும் பாதை.


எனவே கைவல்லியம் பெற வாழ் என்பதை " வாழ்க்கை" என்று அமைந்ததாக புரிதல்.


தற்போது நாம் வாழ்வது மனித வாழ்வு அது மனதின் வாழ்வு.


மனம் என்னவெல்லாம் சொல்கிறதோ அப்படி வாழ்ந்து வருகிறோம்.


மனம் என்ன சொல்லும். படித்ததை, கேட்டதை, பார்த்ததை நம்முடைய பதிவாக கொண்டு அதன்படி நம்மை இயங்கச்சொல்லும்.


நாம் பார்த்ததும், கண்டதும், கேட்டதும் உண்மையா? என்றால் இல்லை.


அவரவர் மன எண்ணங்களுக்கேற்றவாறு வாழும் வாழ்வு மரணத்தை நோக்கித்தானே அவர்களை அழைத்துச் செல்கிறது.


ஆக வாழ்ந்திருக்க எண்ணம் கொண்டால் வாழ்ந்தவர்களை, இன்னும் வாழ்ந்திருப்பவர்கள் கூறியதையல்லவா கேட்க வேண்டும்.


வாழ்ந்தவர் , வாழ்ந்திருப்பவர் யார்?


சித்தன் முருகன், அகத்தியன், வியாசன், பதஞ்சலி, காளங்கி, போகன், வள்ளுவன் , இராமானுசன் போன்ற எண்ணற்ற பதியை எண்ணும் பதிஎண் சித்தபுருசர்களின் வாழ்க்கையை பார்த்து , கேட்டு , கண்டுணர்ந்து அதனுடன் அறிவியல் அறிவை இணைத்து எந்த அளவிற்கு எளிமையாகவும், அன்பாகவும், இனிமையாகவும், உள்மெய்யாகவும் வாழ்வதே " வாழ்க்கை"


ஆம் கைவல்லியமாகிய சமாதிநிலையை எய்த வாழ்வீர்.


நம்மிலிருந்து ஓவ்வொரு நாளும் வெளியே சென்று விரையமாகும் 7200 மூச்சுகளை உள்ளே செல்லும் 14600 உடன் சேர்க்கும் வாசியோகம் கற்று வாழ்வீர் வாழ்க்கையை...


8 அங்குல சுவாசம் வெளியே...

8 அங்குல சுவாசம் உள்ளே...

இந்த இரு 8 ஐயும் ஒன்றிணைத்தலே " பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்தல்"


எல்லாம் வல்ல இறைகருணையும், ஐ என்ற கடவுளின் தயவும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!


இறைஉணர்வோன் சங்கர்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி