பூண்டு தேன்

 🇨🇭#தேனில்_ஊறிய_பூண்டு…❗


🇨🇭#வெறும்_வயிற்றில்_தினமும் #சாப்பிடுங்கள்❗❗❗❓❓


இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். பழங்காலம் தொட்டே தேனை நாம் பயன்படுத்தி வருகிறோம். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும்.


தேனை பொதுவாக ‘வயிற்றின் நண்பன்’ என்று கூறுவார்கள். இதனை பூண்டுடன் சேர்த்து சாப்பிடும் போது இன்னும் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றது. 


அந்தவகையில் தினமும் காலையில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்ப்போம். 


💊#எப்படி_எடுத்து_கொள்ளலாம்❓


தேவையான அளவு பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும். குறைந்தது………


👉#ஒரு_நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும்.


💊 #தினமும்………


காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. 


ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறு முறை இதை அரை ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம். 


⭐ #நன்மைகள்❓


பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும்.


 பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.


 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அந்த என்சைம்கள் நம் உடலுக்குள்ளும் சென்று கொழுப்பை கரைத்திடும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாரளமாக இதனைச் சாப்பிடலாம்.


 இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.


அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க பெரிதும் உதவுகிறது.


அலர்ஜியால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளைக் கூட பூண்டு எளிதாக தீர்க்கிறது.


உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.


சிலருக்கு உடல் வறட்சியாலோ அதிக சூட்டினாலோ இருமல் வரும். அவர்கள் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைத்திடும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி