Fibroid

 🇨🇭#கர்ப்பப்பையில்_கட்டி…❗


🇨🇭#ஆபத்தை_அறியாத_பெண்கள்❓❗


காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது.


இன்றைய கால கட்டத்தில்

ஏராளமான பெண்களுக்கு ஏற்படக்கூடிய முக்கிய பிரச்னை ஃபைப்ராய்டு என்ற கர்ப்பை கட்டி.  


#தமிழில்_நார்_திசுகட்டி என்பதுண்டு. இந்த கட்டி ஏற்படுத்தும் பாதிப்பால் கர்ப்ப பையை அகற்ற நேர்வதும் சகஜம். 


70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். பலருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல் நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட. 


☀ கர்ப்பப்பை கட்டி எதனால்    ஏற்படுகிறது❓


☀ காரணங்கள் என்ன❓


☀ புற்றுநோயாக மாறுமா❓


✳ எதனால் வருகிறது…❓

 

★ நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் சம நிலையில்லாமை,


★ நோய் எதிர்ப்பு சக்தி

அளவுக்கு அதிகமா வேலை செய்தால் அலர்ஜி, (தோல் & தூசி)

ஆஸ்துமா,கட்டிகள்,

இரத்தம் புற்று நோய் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்.


★ நோய் எதிர்ப்பு சக்தி

குறைவாக வேலை செய்தால் தொற்று நோய் மற்றும் புற்று நோய் வரும்.


👉மற்றும்……


☀ஈஸ்ட்ரோஜன், 


☀புரஜெஸ்ட்ரோன் 


ஆகிய ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் கட்டி வளரும் வாய்ப்புகள் உள்ளன. 


சிலருக்கு,மரபணு,

ஹார்மோன்,  குறைபாடுகள் காரணமாகவும் கட்டிகள் வளரலாம். எனினும், கர்ப்பப்பை கட்டிக்கான முழுமையான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 


சுற்றுப்புறச் சூழல் தாக்கம் காரணமாக கர்ப்பப்பை கட்டிகள் ஏற்படலாம்.


பரம்பரையால் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே, இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


சாதாரணமாக 20-40 வயது வரை உள்ள பெண்களுக்குத்தான் இந்தக் கட்டிகள் அதிகமாக வருகின்றன. மெனோபாஸ் அடைந்துவிட்டால், கர்ப்பப்பை கட்டி வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.


🈵 அறிகுறிகள் என்னென்ன❓👇👇👇👇


👉மாதவிலக்கு சமயத்தில் அதிக வலி, அதிக ரத்தப்போக்கு இருக்கும். 


👉ரத்தப்போக்கு மூன்று நாட்களுக்கு பதில் ஏழு நாட்கள் வரைகூட இருக்கலாம்.


👉எந்தத் தொந்தரவும் இல்லாமலே குழந்தைப்பேறு தடைப்படலாம்.


👉பெரிய கட்டியாக இருப்பின் பக்கத்து உறுப்பில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால் சில தொந்தரவுகள் ஏற்படலாம்.


👉அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, 


👉மலச்சிக்கல் ஏற்படும். 


👉கீழ் முதுகு, கால் வலி ஏற்படலாம்.


👉மாதவிடாய் நாட்களுக்கு இடையில் உதிரப்போக்கு ஏற்படுதல், 


👉இடுப்பு பகுதியில் அதிக வலி அல்லது அழுத்தம், 


👉வயிற்று வலி அல்லது வீக்கம், 


போன்றவை ஃபைப்ராய்டின் அறிகுறிகள். கட்டியின் தன்மை, அது உருவாகியுள்ள இடம் ஆகியவற்றை பொருத்து இந்த அறிகுறிகள் மாறுபடலாம். உடனடியாக மருத்துவர்களை அணுகி, ‘எம் ,ஆர், ஐ  ஸ்கேன்’ (MRI Scan) பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


மூன்று வகைக் கட்டிகளில், எந்த வகைக் கட்டி  எனக் கண்டறிந்த பின், கர்ப்பப்பையில் எந்த இடத்தில், எவ்வளவு பெரிதாக இருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம் இந்தக் கட்டிகள் எந்த அளவுக்குத் தொந்தரவு தரும் எனத் தீர்மானிக்க முடியும். 


பொதுவாக, கர்ப்பப்பையில் கட்டி என்றாலே அது புற்றுநோய் கட்டியாக இருக்குமோ என்ற பயம் பெண்களிடம் பரவலாக உள்ளது. அத்தகைய பயம் தேவையில்லை. கர்ப்பப்பை கட்டிகள், புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.


💢 ஃபைப்ராய்ட் என்பது என்ன❓ 

ஏன் ஏற்படுகிறது❓


பெண்களின் உடலில் ஹார்மோன் சுரப்பிகள் செயல்படும் முறையில் வித்தியாசம் நிகழும்போது கர்ப்ப பையில் தனி இழைகள் உருவாகி அவை ஒருங்கிணைந்து கட்டியாக மாறுகிறது. திசுக்களால் ஆன அந்த கட்டியை ஃபைப்ராய்ட் என்கிறார்கள். 30 முதல் 40 வயது வரையிலான பெண்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது.


ஃபைப்ராய்டு (Fibroid) என்பது, கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய தசைக்கட்டி. இது புற்றுநோய்க் கட்டி இல்லை. பொதுவாக, இது குழந்தைப்பேறுக்குத் தயாராக உள்ள காலகட்டத்தில் ஏற்படும். இந்தக் கட்டி கர்ப்பப்பையின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். இந்தக் கட்டிகளை அது தோன்றும் இடத்தைப் பொருத்து மூன்று விதமாகப் பிரிக்க முடியும். 


🔴சப்செரோசல்ஃ பைப்ராய்ட்ஸ் 

(Subserosal fibroids)


கர்ப்பப்பையின் வெளிப்புறச் சுவரில் வரக்கூடிய கட்டி.  55 சதவிகிதக் கட்டிகள் கர்ப்பப்பையின் வெளிப்பகுதியில்தான் வருகின்றன. 


🔴இன்ட்ராமியூரல்ஃ பைப்ராய்ட்ஸ் 

(Intramural fibroids)


இது, கர்ப்பப்பையின் வெளி மற்றும் உள் சுவருக்கு இடைப்பட்ட தசைப்பகுதியில் ஏற்படக்கூடியது. 40 சதவிகிதக் கர்ப்பப்பைக் கட்டிகள் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன.


🔴சப்மியுகோசல் ஃபைப்ராய்ட்ஸ் 

(Submucosal fibroids)


இது, கர்ப்பப்பையின் உள் சுவர் பகுதி. இந்தப் பகுதியில் கட்டிகள் வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. 5 சதவிகித கர்ப்பப்பை கட்டிகள் இங்கு ஏற்படுகின்றன. கர்ப்பப்பை உள் சுவரில் கட்டி ஏற்பட்டால், அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை ஏற்படலாம்.


♦யாருக்குக் கட்டிகள் வரலாம்❓


குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு ஃபைப்ராய்டு கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோல, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொண்ட பெண்களுக்குக் கட்டிகள் வரலாம்.  இவர்களுக்கு, ‘ஹார்மோன் மாறுதல்’ அதிகமாக இருக்கும் என்பதால், கட்டிகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.


♦குழந்தைப்பேற்றைப் பாதிக்கும் கட்டிகள் எவை❓


குழந்தைப்பேறு இல்லை என்று சிகிச்சைக்கு வரும் பெண்களில் 5-10 சதவிகிதம் பேருக்கு குழந்தையின்மைக்குக் காரணமாக இருப்பது இந்தக் கர்ப்பப்பை கட்டிகள்தான். ஸ்கேன் பரிசோதனை செய்யும்போதுதான் இது வெளிப்படும்.


பொதுவாக, குழந்தைபேற்றைப் பாதிப்பது உள் சுவரில் ஏற்படும் சப்மியுகோசல் வகை கட்டிகள்தான். மேலும், இன்ட்ராமியூரல் கட்டிகள் பெரிதாக இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் பாதிப்பு ஏற்படும். மற்ற கட்டிகள் குழந்தைப்பேற்றைப் பாதிக்காது. 


♦தடுக்கும் முறைகள் உண்டா❓


நம் முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வேண்டும். மற்றும் சம நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.


🇨🇭💀இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கேன்சராக மாற வாய்ப்பு இருக்கிறதா❓


நூற்றில் ஒருவருக்கு அப்படி மாற வாய்ப்பு உண்டு.


💢 ஃபைப்ராய்டுகள் எந்த சைசில் இருக்கும்❓


எலுமிச்சை அளவுக்கு சிறியதாகவோ பந்து போல பெரிதாகவோ எந்த அளவிலும் இருக்கலாம். 15 வாரங்கள் ஆன கரு என்ன சைசில் இருக்குமோ அது போல ஃபைப்ராய்டுகள் உருவாவது அரிதல்ல. 


💢 கட்டி பெரிதாக ஆக ஆபாத்து தானே❓


அப்படி சொல்ல முடியாது. சைசுக்கும் பாதிப்புக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் பெரிதாக இருக்கும்போது வலி அதிகம் உணரப்படும். இப்போது ஃபைப்ராய்டுக்கு என்றே தனியான சிகிச்சை முறைகள் வந்து விட்டன. எனவே உயிருக்கு பயப்படும் நிலை இல்லை. அறிகுறிகள் தென்பட்ட்தும் டாக்டரை அணுகினால் வலியும் வேதனையும் குறையும்.


💢இதற்கென உள்ள சிகிச்சை முறைகள் என்ன❓


மருந்துகளால் குணப்படுத்துவது சாத்தியம். கட்டியின் தன்மை, அது இருக்கும் இடம் பார்த்து முடிவு செய்யப்படும்.


💢பல நோய்களுக்கு அறுவை சிகிச்சைதான் சரியான தீர்வு என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வதாக சொல்லப்படுகிறது. ஃபைப்ராய்ட் விஷயத்திலும் சுலபமான தீர்வு அதுதான் என்கிறார்கள் இது சரியா❓


தவறு. ஆனால் பல பெண்கள் அவ்வாறு நினைப்பது உண்மைதான். அதனால்தான் ஃபைப்ராய்ட் பாதித்த பெண்களில் 76 சதவீதம் பேர் ஆபரேஷன் செய்து கொள்கின்றனர். உண்மையில் இது அனாவசியமானது. கட்டி சிறிதாக இருந்தால் மருந்து மூலமே கரைத்து விட முடியும். பெரிதாக இருந்தாலும் பிரச்னைகள் இருந்தாலும்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு மருத்துவ மதிப்பீடுக்கு பொருத்தமான சிகிச்சையை தேர்வு செய்ய வேண்டும். 


💢முக்கியமான உறுப்புகள் முற்றிலுமாக நீக்கப்படுவதால் உடலுக்கு பாதிப்பு நேராதா❓


ஃபைப்ராய்ட் பரவுவதால் நேரும் பாதிப்புடன் ஒப்பிடும்போது இதை ஏற்கத்தான் வேண்டும். கட்டாய மெனோபாஸ் முதலான சில பின்விளைவுகள் மகிழ்ச்சி தராதுதான். ஒட்டுமொத்த உடல் நலனை கருத்தில் கொண்டு இதை பொறுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் சிகிச்சைகள் இருக்கின்றன. 


💢 கட்டி வராமல் தடுக்க ஏதாவது வழிகள் உண்டா❓


ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் கோளாறுகளே இதற்கு அடிப்படி காரணம். எனவே, ஹார்மோன் சமநிலையை பராமரிக்க வேண்டும். அதற்கு தவறாத நடை பயிற்சி, உடல் பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவை உதவும்.


💢 நடுத்தர வயது பெண்கள் உஷார்❗


திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அல்லது ஒரு குழந்தை மட்டும் உள்ள பெண்களில் 60 சதவீதம் பேருக்கும்,❗


மாதவிலக்கு நின்ற பெண்களில் 60 சதவீதம் பேருக்கும் கர்ப்பப்பையில் கட்டிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.❗❓


30 முதல் 40 வயது வரையுள்ள பெண்களில் 30 சதவீதம் பேருக்கும், 


40 முதல் 50 வயது வரையுள்ள பெண்களில் 60 சதவீதம் பேருக்கும் கர்ப்பப்பையில் கட்டிகள் உருவாகலாம் என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.


⭕👉30 வயது ஆகி விட்டதா❓❗


இதுவரை இருந்த வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்யுங்கள். 


சில கட்டுப்பாடுகளை புகுத்துங்கள். 


தினமும் வாக்கிங் அவசியம். 


வாரம் ஓரிரு முறையாவது எக்சர்சைஸ் அவசியம். 


ஒவ்வொரு உடலும் தனித்தனமை கொண்ட்து. உங்கள் உடலுக்கு ஏற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள். 


வருடம் ஒரு தடவை முழு மருத்துவ பரிசோதனை செய்யுங்கள். 


டாக்டர் சொல்வதை தவறாமல் பின்பற்றுங்கள்.


🔴#குறிப்பு❓


கண்டுகொள்ளப்படாத

கர்ப்பப்பை கட்டிகள் அகற்றப்படாவிட்டால் ‘#சார்கோமா கேன்சர்’ (Sarcoma Cancer) ஆக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


   👉 999 437 9988 ☎ 81 4849 6869 👈


#மேலப்பாளையம்_திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி