மதுமேகம. தீர

 *சர்க்கரை நோய் எனும் மதுமேகத்திற்கு அனுபவ மருந்து*



*தேவையான பொருட்கள்* 


கடுகு ரோகினி - 50 கிராம்

வெந்தையம் - 50 கிராம்

கருவேப்பிலை - 50 கிராம்

நெல்லி முள்ளி - 50 கிராம்

கீழா நெல்லி - 100 கிராம்

சுக்கு - 50 கிராம்

மிளகு - 50 கிராம்

பெருங்காயம் – 50 கிராம் 

சிறுசெருப்படை – 50 கிராம் 

சீந்தில் சர்க்கரை – 500 கிராம் 


*செய்முறை*

அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து காயவைத்து பொடித்து, சலித்து ஒன்று கலந்து பத்திர படுத்தி புட்டியில் அடைத்துக்கொள்ளவும்.


*அளவு :* 1 கிராம் முதல் 2 கிராம் வரை 


*அனுபானம்* : வெண்ணீரி, சீராக தண்ணீர், திரிபலா கசாயம் 

தினமும் 2 வேளை    


அதே போல உடலில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் எளிமையாக மடக்கி நீடுகின்ற மாதரி யோகா பயிற்சி மேற்கொள்ளுவது சிறப்பு. அடி வயிற்றில் அழுத்தம் தருவது போன்ற பயிற்சி மேற்கொள்ளுவது சிறப்பு. சூரிய நமஸ்காரம் ஒன்றிலே இவை பெரும்பாலும் அடங்கும்.


    

நவீன மருத்துவத்தில் கணையம் இன்சுலின் சுரப்பதில் உள்ள சிக்காளை சுகர் என்கிறார்கள். 


ஆனால் நமது சித்தர்கள் மதுமேகதிற்கு  

*”பித்தம் தன்னிலை திரிந்து* 

*கீழ் நோக்குங்கால் மேல் நோக்கி பரவுங்கால் மதுமேகம்”*


நமது மருத்துவத்தில் பித்தம் என்றால் கல்லீரலை தான் பார்ப்போம். பித்தம் தன்னிலையில் இருந்து திரிந்து பித்தம் மாறுப்பாட்டில் வரும் பிரச்சனை. கீழ் நோக்கி செயல்படும் அபானன் மேல் நோக்கி உதானனாகவும், வியானனாகவும் செயல் படுவதால் வரும் பிரச்சனை.


மேலுள்ள மருந்தோடு சிலாசத்து, அன்னபவளம், படிகாரம் சேர்த்துக் கொடுக்கலாம்.    


மேலும் மதுமேகம் நோயின் தன்மை, உடல் கூறு, போன்றவற்றை ஆராய்ந்து இதனுடம் மேலும் மருந்துகளை கூட்டி கொடுப்பது வைத்தியரின் கடமை. 



பெரும்பாலும் மதுமேகம் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். கூடவே  மலமிளக்கி சேர்த்து கொடுக்க வேண்டும்.


வாழ்வியல் முறை மற்றும் உணவு பழக்கம் மாற்றினால் மேலுள்ள மருந்துகளை சேர்த்து எடுத்து நல்ல முன்னேற்றத்தை காணலாம். 

இந்த மருத்துவ முறையை சொல்லிக் கொடுத்தவர் குருநாதர் பஞ்சபட்சி நாராயணன் ஐயா 


நன்றி,


மேலும் பயணிப்போம் . . . 


J.லோகேஷ் குமார்,

வேலூர்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி