பூண்டு நீர்

 அற்புத நன்மைகள் தரும் பூண்டு நீர்


பூண்டு மிகுந்த மருத்துவம் குணம் கொண்ட ஒரு இயற்கை கிருமிநாசினி. அதில் கல்சியம்,மெக்னிசியம், பொட்டாசியம், இரும்பு போன்ற பல கனிமச்சத்துக்ககள் நிறைந்துள்ளன.


அது மட்டுமன்றி உள் வீக்கங்களை (anti-inflammatory) குறைக்கும் கனிமங்களையும் கொண்டுள்ளதோடு இயற்கை கிருமி கொல்லியாகவும் (antibiotic) உள்ளது.


நாம் தினமும் பூண்டு நீரை அருந்தி வரும் பொழுது என்னென்ன நன்மைகள் உடலுக்கு உண்டாகும் என்பதை கவனியுங்கள்.


உடல் எடை குறையும்.

இன்சுலின் அளவை மருந்தின்றி கட்டுக்குள் வைத்திருக்கும்.

கெட்ட கொழுப்பை கரைக்கும்.

இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும்.

உயர் இரத்த அழுத்தம் இருப்போருக்கு இரத்தத்தை மென்மையாக்கி கொடுக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம் சீராகும்.

கிட்னியில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்.

சிறுநீரக தொற்றுக்களை குணப்படுத்தும்.

எலும்புகளில் உள்ள வீக்கத்தை சரி செய்து மூட்டு வலிகளை குணமாக்கும்.

புற்றுநோய்க் களங்களை அழிக்கும்

அதீத உடல் களைப்பால் தோன்றும் சோர்வு மற்றும் மயக்கத்தை போக்கி உடலை சுறுசுறுப்பாக்கும்.

தோலில் உள்ள சுருக்கங்களை போக்கும் collagen கட்டுமானத்தை உருவாக்கும்.

ஆஸ்துமா, சளி தொல்லை, இருமல், சைனஸ் பிரச்சினைகளை குணமாக்கும்.

அதில் இருக்கும் sulfur சத்து கண் பார்வைக்கு மிகுந்த நன்மையை செய்யும்.

வயதானவர்களுக்கு தோன்றும் கண்புரைக்கு சிறந்த நிவாரணி.


*** பூண்டு நீர் தயாரிப்பது மிக சுலபம். ஒரு கிளாஸ் நீரை கொதிக்க வைத்து அதில் 4 அல்லது 5 பல் பூண்டை போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் மூடி வைத்து ஆறியதும் குடித்து விடலாம். ***


அல்லது இருவேளை உணவுக்கு பின் ஒரு பச்சை பூண்டை பொடியாக நறுக்கி சூடான நீரில் இட்டு அப்படியே குடித்து விடலாம்.


ஒன்றின் பலனை பெற வேண்டுமென்றால் அதனை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும். அதன் பொழுதே மேற்கூறிய அனைத்து மாற்றங்களும் நிகழும்.


ஆகவே தொடர்ச்சியாக பூண்டு நீரை வெறும் வயிற்றிலோ அல்லது இரவு உறங்கும் முன்னரோ குடித்து முழுப்பலனையும் பெறுங்கள்.


வாழ்க நலமுடன்!


Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி