எளிய மருத்துவ குறிப்புகள்

 எளிய மருத்துவம் 

நிறைய மகத்துவம்


  கர்ப்பிணி  பெண்கள் தர்பூசணி பழத்தை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வர பிறக்கின்ற குழந்தை நல்ல நிறத்துடன் அழகாகப் பிறக்கும் மேலும் மூளைக்குப் பலமும் கல்லீரலுக்கு வலிமையும் உண்டாகும்


 முருங்கை பூவை பறித்து மைபோல அரைத்து இதில் ஒரு எலுமிச்சங்காய் அளவு எடுத்து கால் லிட்டர் பசும்பாலில் கரைத்து இதனோடு கால் லிட்டர் தேங்காய் பாலும் சேர்த்து இதை கெட்டியான பதம் வரும் வரை சுண்டக்காய்ச்சி இதில் ஒரு எலுமிச்சை  அளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் விந்து உற்பத்தி அதிகரிக்கும்


  பதினைந்து தூதுவளைப் பூவை பறித்து பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவு வேளையில் பருகி வர ஆஸ்துமா தொந்தரவு விலகும்


    வெள்ளைப்பூண்டை பஞ்சு போல தட்டி இதை மூக்கருகே வைத்து உறிஞ்ச ஆஸ்துமாவால் ஏற்படும் கஷ்ட சுவாசம் நீங்கும்


   வாரத்திற்கு இரண்டு நாட்கள் சுண்டைக்காய் வற்றலை  எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிட்டு வர வரட்டு இருமல் சுரம் வயிற்றுப் புழு மற்றும் ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாச தொந்தரவு போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்


  உணவு சாப்பிட்ட பின்னால் தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர இளமை நீடிக்கும் 


நெல்லிக்காய் கிடைக்காவிட்டால் 


  நூறு கிராம் நெல்லிக்காய் பொடியுடன் ஐம்பது கிராம் கடுக்காய் பொடியை கலந்து கொண்டு தினம் இரு வேளை மூன்று கிராம் வீதம் எடுத்து சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர இளமையும் அழகும் நீடிப்பதடன் நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்


  வாழைப் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டாக செய்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வர தாது பலம் அதிகரிக்கும் ரத்த மூலம் குணமாகும் சர்க்கரை நோய் பாதிப்பு விலகும்


 கொத்தமல்லி கீரையோடு சம அளவு சின்ன வெங்காயத்தை சேர்த்து இதை நெய்யில் வதக்கி சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர ரத்த உற்பத்தி அதிகரிக்கும் அழகான உடல் அமைப்பு உண்டாகும்


   வெள்ளரிப்பிஞ்சை பச்சையாக சாப்பிட்டு வந்தாலும் அல்லது பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு நோய் குறைந்துவிடும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்


  முற்றின இஞ்சியை இடித்து சாறு பிழிந்து இதனோடு எலுமிச்சை சாறும் தேனும் சம பாகமாக கலந்து சாப்பிட்டு இதில் பதினைந்து மில்லி அளவு எடுத்து காலை வேளையில் பருகி வர தலைசுற்றல் நிற்கும் ரத்த அழுத்தம் குறையும் வாந்தி நெஞ்சுவலி சளி மற்றும் குமட்டல் மயக்கம் போன்ற நோய்கள் நீங்கும்


   கோதுமையை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து இதில் தேன் ஊற்றிப் பிசைந்து ஒரு பெரிய எலுமிச்சை  அளவு  எடுத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர இடுப்பு வலி கை கால் வலி உடல் அசதி நீங்கும் மற்றும் மூட்டு வலி குறையும்


  பேரீச்சம் பழத்துடன் சம அளவாக தேங்காய் துருவலை சேர்த்து இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும் மெலிந்த உடல் தேறும் போகத்தில் ஏற்படும் களைப்பு நீங்கும் ரத்த விருத்தி உண்டாகும் மூட்டு வலியும் குணமாகும்


  வாரத்திற்கு இரண்டு நாட்கள் தூதுவளைக் கீரையை சமைத்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள் நீங்கும் மூளை நரம்புகள் பலம் பெறும் உடலில் உள்ள சப்த தாதுக்களுக்கும் வலிமை உண்டாகும்


                   சித்தர்களின் சீடன் 

          பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி