Posts

Showing posts from August, 2022

தவறான வாழ்வியலால் வயிறே நோயின் பீடமாகிறது

 🇨🇭#உங்கள்_நோய்_எதுவாக  #இருந்தாலும்……❗❗❗ 🇨🇭#குணமாவது_உங்கள்_கையில்தான் #இருக்கிறது.❗❓❓❓ 🔰 ''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், #நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். 🈵 ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், 🈯 இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், 🈸 மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், 🈳 நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’ இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால்,நகர வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’ நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. 🔰 #வயிறே_நோய்களின் #வரவேற்பறை……❗ சர்க்கரை நோயா❓ குணமாக்க முடியாது❗ கட்டுப்படுத்தலாம்…  ஆனால் சாகும் வரை மருத்துவம் பார்க்க வேண்டும்… இரத்த அழுத்தமா❓ குணமாக்க முடியாது❗ கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதற்குத் தினந்தோறும் மருந்துகளை நிறுத்ததாமல் சாப்பிட ...

மூளை பாதுகாப்பு

 🉐#மூளைக்கு…❗ 🉐 #தீங்கு_விளைவிக்கும்  #செயல்கள்…❓❗  👉 மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும்.  மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான…… ▶ மூச்சுவிடுதல், ▶ செரிமானம்,  ▶ இதயத்துடிப்பு,  ▶ கொட்டாவி, போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன.  🔰#காலை_உணவு🔰 காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 🈶#அதிகமாகச்_சாப்பிடுவது🈶 மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது. 🈚#புகை_பிடித்தல்🈚 புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது 🈸#சர்க்கரை_சாப்பிடுதல்🈸 நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதை...

பசு மஞ்சள் பயன்

 🔯#பசு_மஞ்சள்_இன்ஃப்ளமேஷன்  #எனப்படு……❗❓ 🔯#உள்_காயத்துக்கு_அருமருந்து❗❓ 👉 பல தாவரங்களுக்கு anti inflammatory அதாவது உள் காயத்தை குறைக்கும் தன்மை உள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று மஞ்சள். மஞ்சலிலுள்ள cucurmin எனும் மூல பொருளுக்கு, பல விதங்களில் anti inflammatory தன்மை உள்ளதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  ▶ இரத்த குழாய் சம்பந்தப்பட்ட உள்காயம்,  ▶ ஆட்டோ இம்மியூன் நோய்கள்,  ▶ osteoarthritis எனும் மூட்டு வலி  போன்ற பல நோய்களுக்கு மஞ்சள் தீர்வளிக்கும் என்று ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன. இது மட்டுமில்லாமல் பல anti oxidant தன்மைகளும் உள்ளன. இரத்த குழாய் அடைப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்த வல்லது எனவும் ஆராய்ச்சிகள் உள்ளன. “Indian saffron”, என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மஞ்சளானது மூவாயிரம் வருடங்களாக இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.  ⏩ பசுமஞ்சள் ⏩ விரலி மஞ்சள் ⏩ கஸ்தூரி மஞ்சள்  [ காய வைத்தால் கஸ்தூரி மஞ்சள். ] என்பவை மஞ்சளின் வெரைட்டிகளில் சில. பச்சையாக, பசுமையாக பறித்தவுடன் கானப்படும் மஞ்சளை பசு மஞ்சள் என்கிறோம்.  மஞ்சள் இன்ஃ...

இஞ்சியின் பயன்கள்

 நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில.  இஞ்சியை கறிக்கு டீக்கு மட்டுமே யூஸ் பண்றோம். ஆனால் பாருங்க இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி செலவு மிச்சம் என்று!!!!! நோய்களை  நீக்குவதில்  இஞ்சி – சமையலறை மருத்துவர்! 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். 4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். 6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். 7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். 8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். 9. இஞ்சி சாறோடு, தேன்...

வறுத்த பூண்டின் பயன்

 வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள். பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம். பூண்டுபற்க்கள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். பூண்டுபற்களை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும். 2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்ற...

மருத்துவ குறிப்புகள்

 இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் பயனுள்ள தகவல். 1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 4. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 5. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 6. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும். 7. வேனல் கட்டி தொல்லைய...

தாமரை தண்டு பொரியல்

 #தாமரைக்கிழங்கு_வறுவலும் #மருத்துவ_பயன்களும். #சத்துக்கள்: இதில் கொழுப்பு,சர்க்கரை எதுவுமில்லை.100 கிராம் தண்டில் கார்போஹைட்ரேட் 16 கிராம்,ப்ரோட்டீன் 2 கிராம் இருக்கு.விட்டமின் C 54% ,விட்டமின் B6 13% இருக்கு. #மருத்துவப்பயன்கள் தாமரை கிழங்கில் அதிக அளவில் இருக்கும்  வைட்டமின்கள் பி மற்றும் சி சத்து தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. வைட்டமின் சி உடலின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி சருமத்தின் உறுதியை அதிகரிக்கிறது. தாமரை வேர் மற்றும் கிழங்கில் அதிகப்படியாக இருக்கும் பொட்டாசியம் அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சி சிறுநீரின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கிழங்கில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள திரவங்களுக்கு  இடையில் சமநிலையை ஏற்படுத்துகிறது மற்றும் அதிகப்படியான சோடியம் இரத்த ஓட்டத்தை பாதிக்காமல் தடுக்கிறது. இரத்த நாளங்களை தளர்த்தி சுருக்கம் மற்றும் விறைப்பை தடுக்கிறது. மேலும் கிழங்கில் இருக்கும் இரும்பு சத்து மென்மையான இரத்த ஓட்டத்திற்கு  உதவுகிறது.தாமரை வேர் தண்டுகளை சாப்பிடுவதால் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பத்தை குறைக்கலாம். பெண்கள் தாமரை வேர் தண்டி...

உடல் பருமன்

 🇨🇭#உயிரைப்_பறிக்கும்_நோய்…❗❗❓ ❗❗❗🔰#உடல்_பருமன்……🔰❗❓    ✳👉 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் பாதிக்கும் முக்கிய பிரச்னை உடல்பருமன். பல நோய்களுக்கு மூல காரணம் உடல் பருமன். என்னென்னவோ வழிகளில் உடல் எடையை சரிசெய்ய பலரும் முயன்றுகொண்டிருக்கிறார்கள். உடல்பருமனை சரிசெய்வது கொஞ்சம் கடினமான காரியம்தான். கொஞ்சம் முயற்சித்தால்  நாம் சரி செய்ய முடியும். இங்கு உடல் எடை குறைப்பிற்கான காரணங்களை பார்க்கலாம்.  🈶#ஒபிசிட்டி🈶 ⏩ நம் உடல் எடை, சராசரி எடையைவிட 20 சதவிகிதம் அதிகரிக்கும் அந்த நிலையையே `ஒபிசிட்டி’ என்கிறோம். அதாவது, திசுக்களில் அதிகப்படியாகக் கொழுப்புக்கள் சேரும் நிலை. ➡ உலக அளவில் 12 பேரில் இருவர் ஒபிசிட்டி பிரச்னையால் பாதிக்கப்படுகிறார். சராசரியாக 2.8 மில்லியன் மக்கள் (28 லட்சம் பேர்) ஒபிசிட்டி காரணமாக நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள். ⏩ இதன் இறப்பு விகிதம் அதிகரித்திருப்பதால் கணக்கில் கொண்டு இது ஒரு நோயாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ⏩ நம் உடலுக்குத் தேவையான கலோரிகளைவிட நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவு அதிகமாவதால்...

கருப்பட்டி களி

 கிராமங்களில் பூப்பெய்திய பெண்களுக்கும் பிள்ளைபெற்றெடுத்த தாய்மார்களுக்கும் கொடுக்கக்கூடிய #நிகரற்ற_கைமருந்து. *பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனை அட்டு, பானாட்டு" போன்ற சிறப்பு பெயர்களை பெற்ற #பனங்கருப்பட்டி_களி" #தேவையானவை ஓமம் - 50கிராம், சுக்கு - 50 கிராம், மிளகு 25 கிராம் சுத்தமான தேன் 1/2 லிட்டர், பனங்கருப்பட்டி 1/2 கிலோ, காய்ச்சிய பால் 200மிலி. ஓமம், சுக்கு ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து நீரில் ஊறவைத்து சக்கை நீக்கி மிளகுடன் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும், கருப்பட்டியை பாகு பதத்தில் காய்சி அரைத்த விழுதுடன் சேர்த்து நன்கு கிளறவும், வெந்ததும் அதனுடன் சுண்டைக் காட்சியை பால் சேர்த்து ஓரிரு முறை மீண்டும் கிளரவும், இறக்கி வைத்து தேன் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி பத்திரப்படுத்தவும். இதனை பூப்பெய்திய பெண்களுக்கும், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீண்டும் பெறுகிறார். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடலும் புதுப்பொலிவுடன் பளபளப்பாக கட்டுக்கோப்புடன் இருக்கும். இடுப்பு வலி, குறுக்கு வலி போன்ற பிரச்சினைகளுக்கு ...

சுண்டக்காய் குழம்பு பல் பாதுகாப்பு

 💫 பற்கள் பலமடைய  சுண்டைக்காய் குழம்பு பச்சை சுண்டைக்காய் - 1 கப்,  கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,  உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8,  தனியா - 1 டீஸ்பூன்,  வெந்தயம் - 1 டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,  நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்,  மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,  தாளிக்க கடுகு - சிறிது,  பூண்டு - 15 பற்கள்,  புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு,  உப்பு - தேவையான அளவு,  கறிவேப்பிலை - ஒரு கொத்து. செய்முறை: பச்சை சுண்டைக் காயை சுத்தம் செய்து காம்பைக் கிள்ளி வைக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.  கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், பூண்டு பற்கள் போட்டு வறுத்துக் கொள்ளவும்.  ஆறியதும் நைசாக (தேவைப்பட்டால்) தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.  கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் தாளித்து, பச்சைச் சுண்டைக்காய்களைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலாக் கலவை ஊற்றி...

விந்து கெட்டிப்பட

 ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..! 1. வில்வ பழ சதையை கற்கண்டு கூட்டி தினமும் காலையில் உண்டு வர விந்துவை அதிகபடுத்தும். வில்வப் பழம் பல நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை கொண்டு வந்து ஓட்டை நீக்கி விட்டு உள்ளிருக்கும் காய்ந்த சதையை மட்டு எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் கற்கண்டு தூளையும் நன்றாக சேர்த்து புட்டியில் பத்திரபடுத்தி கொள்ளவும். இதை தினமும் உபயோகித்து வரலாம். 2. அஸ்வகந்தா பொடியை (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) தினமும் பாலில் தேன் அல்லது கற்கண்டு கலந்து அருந்தி வர விந்து உற்பத்தி அதிகமாகும். நாடி நரம்புகள் பலப்படும். 3. தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது வலுப்பெறும். 4. அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து எண்ணிக்கை கூடும். 5. ஓரிதழ் தாமரை பௌடர் ஒரு ஸ்பூன் வீதம் இரண்டு நேரம் பசும் பாலில் கற்கண்டு  அல்லது தேன் சேர்த்து சாப்பிட விந்து உற்பத்தி அதிமாகும். அதுமட்டும் அல்லாமல் ஆண்மைசக்தி அதிகப்படும். 6. நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி என்ற வித்தை 100 கிராம் அளவில் வ...

நீரிழிவு கட்டுப்பட

 *☂சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பயனுள்ள பத்து :* 1. வெந்தயம் : (Fenugreek) ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கி, பித்தத்தை முறிக்கும். இரவில் ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் நீருடன் சேர்த்து குடிக்கலாம். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, ஆறிய பின்னர் அந்தக நீரை குடிக்கலாம். முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். 2. நெல்லிக்காய் : (Amla/Indian Gooseberry)  ரத்தத்தில் கலக்கும் இன்சுலினை, சிறந்த முறையில் கிரகிக்க நெல்லிக்காய் உதவுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை, அதைவிட நான்கு மடங்கு நீருடன் சேர்த்து அருந்தலாம் ; ஆனால், வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. 3. பட்டை : (Cinnamon)  டைப் 2 சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. இன்சுலின் உடலில் சீராகச் சுரக்க உதவும். சர்க்கரையின் அளவைக் குறைக்கும். ஒரு டீஸ்பூன் பொடியைத் தண்ணீரில் கலந்து, இ...

கொள்ளு உருண்டை குழம்பு

 🇨🇭#கொள்ளு_உருண்டைக்  #கார_குழம்பு❗❓❓❓ 💊 பெண்களின் வெள்ளைப் போக்கைக் கட்டுப் படுத்துவதுடன்,  💊மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும்.  💊பிரசவ அழுக்கை வெளியேற்றும். 🔰#தேவையானவை❓ கொள்ளு – 200 கிராம் கா. மிளகாய் – 6 க. உளுந்து – 4 டீஸ்பூன் து. பருப்பு – 4 டீஸ்பூன் புளி – நெல்லிக்காய் அளவு சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப 🔰#செய்முறை❓🔰 கொள்ளு, க.உளுந்து, து.பருப்பு சேர்த்து ஊற வைத்து, உப்பு, கா.மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.  அரைத்த விழுதை வாணலியில் சூடான எண்ணையுடன் போட்டு கிளறி எடுக்கவும்.  அதை சிறு சிறு உருண்டையாக உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும்.  கொதித்து பச்சை வாசனை போனதும் சாம்பார் பவுடர், உருண்டைகள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.  5 நிமிடம் கொதித்ததும் இறக்கி சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும்.

பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலி தீர

 🉐#பெண்களின்…❗❗ 🉐#எந்தெந்த_காரணங்களுக்காக❓ 🉐 #இடுப்பு_வலி_ஏற்படலாம்❓❓ ✳ பெண்களில் இடுப்பு வலி இல்லாதவர்களைக் காண்பது அரிது. இனப்பெருக்க வயதில் தொடங்கி மெனோபாஸ் வயது வரை அனைத்து வயதினருக்கும் இடுப்பு வலி இருப்பதை அறிகிறோம். எல்லாருடைய இடுப்பு வலிக்கும் காரணங்கள் வேறு வேறு. காரணங்களுக்கேற்ப சிகிச்சைகளும் வேறுபடும்.எந்தெந்த காரணங்களுக்காக இடுப்பு வலி ஏற்படலாம்...  💢 எப்படிப்பட்ட வலிக்கு மருத்துவ ஆலோசனை அவசியம்❓ தொப்புளுக்குக் கீழேயும் தொடைகளுக்குச் சற்று மேலேயும் உள்ள பகுதியில் ஏற்படுகிற வலியே Pelvic pain என்கிற இடுப்பு வலியாக அறியப்படுகிறது.இந்த வலிக்குக் காரணங்கள் பல. காரணத்தைப் பொறுத்தே அதன் தீவிரம் அமையும். வலதுபக்கம் அடிவயிற்றில் கடுமையான வலி, வாந்தி, காய்ச்சல் போன்றவை இருந்தால் அது அப்பென்டிசைட்டிஸ் எனப்படுகிற குடல்வால் அழற்சி பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஆரம்பநிலையாக இருந்தால் மருந்து, மாத்திரைகளில் குணப்படுத்திவிடலாம். முற்றிய நிலையில் இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும். குடல்வால் வெடித்துவிட்டால் அதன் தொற்றானது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி வேறு பிரச்னைகளுக...

விந்து வீரியமாக

 🌿உயிரணுக்கள் நன்றாக ஊர்ந்து செல்லும் தன்மை பெற பேரிச்சம்பழம் 500 கிராம் வென்பூசணி சாறு 500 மில்லி  சாராபருப்பு 35 கிராம்  அக்ரூட் பருப்பு 35 கிராம்  பாதாம் பருப்பு 35 கிராம்  பிஸ்தா பருப்பு 35 கிராம்  கசகசா 35 கிராம்  கருவேலம் பிசின் 35 கிராம்  பாதாம் பிசின் 35 கிராம்  முருங்கை பிசின் 35 கிராம்  ஆவாரம் பிசின் 35 கிராம்   மேற்படி சரக்குகளை சூரணம் செய்து வைத்துகொண்டு  பூசணிச் சாற்றில் 400 கிராம் கருப்பட்டி சேர்த்து அதோடு 500 மில்லி பசும்பால் சேர்த்து கலந்து சிறுதீயிட்டு எரிக்கவும்  பாகுபதத்தில்  முன்பு சூரணம் செய்து வைத்துள்ள சரக்குகளை கலந்து கிண்டி இரக்கவும்  லேகியம் ஆறிய பின் 350 மில்லி நெய் உருக்கி லேகியத்தில் சேர்த்து கிளறி பத்திரப்படுத்தி வைத்துகொண்டு இதிலிருந்து காலை மாலை இருவேளை 3 கிராம் அளவு சாப்பிட்டு பால் அருந்திவர ஆண்மை வீரியம் பெறும் தாம்பத்திய நேரம் நீடிக்கும் உடல் உஷ்ணம் குறையும் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும் உயிரணுக்கள் நன்றாக ஊர்ந்து போகும் தன்மையை உருவாக்கும். ஆண்மை குறைவு, குழந்தையின்மை,...

விந்தணு குறைபாடு நீங்க

 விந்தணு குறைபாடுகளுக்கான தீர்வு அரசவிதை – 50 கிராம் அதிமதுரம் – 50 கிராம் ஓரிதழ் தாமரை – 50 கிராம் துத்தி – 50 கிராம் அம்மான் பச்சரிசி – 50 கிராம்      ஆகியவற்றை எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஜந்து கிராம் அளவு பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் விந்தணுக்கள் அபரிமிதமாய்ப் பெருகும்.      விந்தில் உயிரணுக்கள் குறைவாகக் காணப்பட்டால், அரச விதையைத் தூள் செய்து பாலில் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வந்தால், விந்தில் உயிரணுக்கள் உண்டாகும். ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். ஏனெனில் அந்த பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட்  என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கடலைப்பருப்பு 100 கிராம் வாங்கி நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். 100 கிராம் சர்க்கரையை 100 கிராம் பசும்பாலில் கலந்து அடுப்பிலேற்றி எரிக்கவும். பாகுபதம்...

வயிற்றுப்போக்கு குணமாக சூரணம்

 💢 #நிற்காமல்_போகும்_பேதிக்கு…… 💢 #நம்ம_வீட்டிலே_மருந்து_பொடி #தயாரிக்கும்_முறை…❗❗❓❓ 💊சின்ன சின்ன குறைபாடுகள் நேரும் போது வீட்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் அடங்கிய பொருளை கொண்டே கைவைத்தியம் செய்து கொள்ளலாம். வயிற்றுப்போக்கு என்பது எல்லோருக்கும் எப்போதாவது உண்டாக கூடிய சாதாரண பிரச்சனைதான். பெரும்பாலும் இவை தானாகவே சரியாக கூடும். குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றூம் வயதானவர்கள் தவிர மற்றவர்கள் வயிற்றுப்போக்கு காலங்களில் கை வைத்தியம் மூலம் சரிசெய்ய பார்க்கலாம். அந்த காலத்தில் வளரும் பிள்ளைகள் முதல் வயதானவர்கள் எல்லோருக்கும் எப்போது வயிற்றூப்போக்கு வந்தாலும் வீட்டில் ரெடிமேடாக இந்த வயிற்றூப்போக்கு சூரணத்தை வைத்திருப்பார்கள். ஆறுமாதங்கள் வரை கெடாமல் இருக்கும் இந்த பொடி உடலுக்கு பாதுகாப்பானது என்பதால் இந்த பொடி சாப்பிட்ட பிறகும் தொடர்ந்து பேதி ஆனால் மட்டுமே மருத்துவரை அணுகலாம். பெரும்பாலும் இந்த பொடியை கொண்டே சீதபேதி வரை குணப்படுத்தலாம் என்பதால் பெருமளவு இவை சரி செய்து விடக்கூடியதே. இந்த பொடியை எப்படி தயாரிப்பது பார்க்கலாம். ​💊#தேவையானவை❓ 👉மாதுளம் பழத்தின் தோல் - துண்டுகளாக நறுக்கி வ...

மாதவிலக்கு ஒழுங்காக

 மாதவிலக்கு பிரச்சனைகள் தீர சில இயற்கை வைத்தியங்கள்..!! 100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதவிலக்கு பிரச்னைகள் நீங்கும். புதினாக் கீரையை வெயிலில் உலர்த்தி உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்றுவேலை அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலக்கணக்குபடி சரியான நாட்களில் வெளியேறும். 20கிராம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து, 4 வேளைக்கு காலை, மாலை என பாலுடன் கலந்து குடித்து வர மாதவிலக்கு சிக்கல் மறையும். சிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால், இவர்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும். சிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மாதவிலக்கு க...

குழந்தைகளின் வயிற்றுப்போக்கு

 🇨🇭#குழந்தைகளின்_வயிற்று #போக்கிற்கான_காரணங்களும்❓ 🇨🇭#அதற்கான_வீட்டு_வைத்திய #முறைகளும்❓ . ✴ குழந்தைகள் - மனிதகுலத்திற்கான #கடவுளின்_பரிசு, உங்களால் வாழ்க்கைக்கு அர்த்தமளிக்க வந்தவர்கள். அவர்கள் உங்கள் கண்கள் மற்றும் உங்களால் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த வந்தவர்கள். இந்த கருத்தின் படி, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனைகளை மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு, கவனத்துடன் கையாள வேண்டும். இது வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான பிரச்சனைகள் உட்பட எல்லா பிரச்சனைகளுக்கும் பொருந்துகிறது.  👉 இப்போது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பற்றி பார்க்கலாம்.  ⭕ வயிற்றுப்போக்கு என்றால் என்ன❓ வயிற்றுபோக்கு என்பது உங்கள் குழந்தை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக மலம் கழிப்பது, இயல்பை விட நீர் சார்ந்த தன்மை மலத்தில் அதிகமாக காணப்படும். ⭕ குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதற்கான மற்ற  அறிகுறிகள் ❓ வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் பல இருந்தாலும், நீங்கள் உங்கள் குழந்தையின் #மலத்தை கவனிக்க வேண்டும். அது இயல்பை விட நீர் சார்ந்த தன்மை அதிகமாகவோ, வெளிர் நிறத்தில் காணப்ப...