குழந்தைகளின் வயிற்றுப்போக்கு

 🇨🇭#குழந்தைகளின்_வயிற்று

#போக்கிற்கான_காரணங்களும்❓


🇨🇭#அதற்கான_வீட்டு_வைத்திய #முறைகளும்❓


.

✴ குழந்தைகள் - மனிதகுலத்திற்கான #கடவுளின்_பரிசு, உங்களால் வாழ்க்கைக்கு அர்த்தமளிக்க வந்தவர்கள். அவர்கள் உங்கள் கண்கள் மற்றும் உங்களால் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த வந்தவர்கள். இந்த கருத்தின் படி, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனைகளை மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு, கவனத்துடன் கையாள வேண்டும். இது வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான பிரச்சனைகள் உட்பட எல்லா பிரச்சனைகளுக்கும் பொருந்துகிறது. 


👉 இப்போது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பற்றி பார்க்கலாம். 


⭕ வயிற்றுப்போக்கு என்றால் என்ன❓


வயிற்றுபோக்கு என்பது உங்கள் குழந்தை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக மலம் கழிப்பது, இயல்பை விட நீர் சார்ந்த தன்மை மலத்தில் அதிகமாக காணப்படும்.


⭕ குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதற்கான மற்ற 

அறிகுறிகள் ❓


வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் பல இருந்தாலும், நீங்கள் உங்கள் குழந்தையின் #மலத்தை கவனிக்க வேண்டும். அது இயல்பை விட நீர் சார்ந்த தன்மை அதிகமாகவோ, வெளிர் நிறத்தில் காணப்படும். மேலும் உணவு பழக்கங்களில் மாற்றம் (குறைந்து சாப்பிடுவது), #வாந்தி மற்றும் #நீர்ப்போக்கு போன்றவையும் ஏற்படும்.


#நீர்ப்போக்கை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், அது மிக மோசமான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். 


.

🉐 #அறிகுறிகள்❓


👉 வயிற்றுப்போக்கு

ஏற்பட்டிருப்பதற்கான சில அறிகுறிகள்❓


▶ 1. உலர்ந்த உதடுகள்


▶ 2. வாய் உலர்ந்து காணப்படுவது


▶ 3. கண்ணீர் இல்லாமல் அழுதல்


▶ 4. சோம்பல் அல்லது ஆற்றல் இல்லாமை


▶ 5. சோர்வடைந்த கண்கள்


▶ 6. எரிச்சல்


.

⭕ #காரணங்கள்❓


👉 குழந்தைகளில் வயிற்று போக்குக்கான காரணங்கள்❓


♦வைரஸ்கள், 


♦பாக்டீரியாக்கள், 


♦ஒட்டுண்ணிகள், 


♦உணவு வகைகள் மற்றும் மருந்துகள் 


♦முதன் முதலாக பல் முளைக்கும் போது 


♦குழந்தை திட உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது


♦உணவு சரியாக செரிக்கவில்லை எனில், 


♦தொற்று, வைரஸ் பாதிப்புகள், போன்றவற்றால், 


♦உள் உறுப்புகளில் உண்டாகும் பாதிப்புகளால், 


♦தொடர்ந்து அதிகப்படியான மருந்துகள் கொடுத்தால்,


♦சுத்தமில்லாத சூழலால், உணவால்,


♦வற்புறுத்தி, அளவுக்கதிகமான உணவளிப்பது.


உள்ளிட்ட பல காரணிகள் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணமாக உள்ளன.


குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ரோட்டாவைரஸ். பொதுவாக குழந்தைகள் தொடும் பொம்மைகள் மற்றும் இதர பொருட்கள், மேலும் மலவாய் வழியாகவும் இது பரவுகிறது. வைரல் தொற்று பொதுவாக இரைப்பைக் குடல் அழற்சிக்கு வழிவகுக்கிறது, இது வாந்தியுடன் சேர்ந்து இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். குழந்தைகளுக்காக வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு ரோட்டாவைரஸ் மட்டும் காரணம் அல்ல. இது பல்வேறு வைரஸ்கள் (அடினோவைரஸ், கால்சி வைரஸ், ஆஸ்ட்ரோவைரஸ் மற்றும் இன்ஃப்ளூபென்ஸா), பாக்டீரியா (சால்மோனெல்லா, ஷிகெல்லா, ஸ்டாலிஹோகோகாக்கஸ், காம்பிலோபாக்டெர் அல்லது ஈ.கோலை) மற்றும் ஒட்டுண்ணிகள் (ஜியார்டியாஸிஸ்) ஆகியவற்றினாலும் ஏற்படலாம்.


பாக்டீரியா தொற்றுக்கள் மலத்தில் இரத்தம், வயிற்றுப் பிண்டங்கள் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.


வயிற்றுப்போக்கு மற்றொரு காரணம் உங்கள் குழந்தை எடுத்துக்கொள்ளும் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளாகவும் (antibiotics) இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள்(antibiotics) குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிப்பதால் பாக்டீரியா, ஒட்டுண்ணி அல்லது வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தை ஒரு குறிப்பிட்ட வகை உணவுக்கு ஒவ்வாமை இருந்தால் உணவு பழக்கம் கூட வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.


.

🔯 #சிகிச்சை_முறைகள் ❓


➡பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வயிற்றுப்போக்கு மிக லேசானதாக இருக்கும். அப்போது இதற்கு பெரிதாக மருத்துவ கவனிப்பு தேவையில்லை. அவர்களுக்கு நீர்ப்போக்கு போவதை தவிர்க்க, அதிக அளவில் தண்ணீர் குடிக்கும் படி செய்ய வேண்டும். மேலும் சர்க்கரை பொருட்களை தவிர்க்கவும், சர்க்கரை குடலின் உள்ளே தண்ணீரை ஈர்ப்பதால், அது நிலைமையை மோசமடைய செய்கிறது.


➡கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளை பொறுத்தவரை, தயிரை அவர்கள் உணவில் சேர்த்து கொடுக்கலாம். தயிரில் இருக்கும் நல்ல பாக்டிரியாக்கள் வயிற்றுப்போக்கை சரி செய்ய உதவும். மேலும் கடுமையான நீர்ப்போக்குடன் கூடிய வயிற்றுபோக்கு ஏற்பட்டால், எலக்ட்ரோலைட் தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். நீர்ப்போக்கு மற்றும் வயிற்றுபோக்கு அதிகமாக இருக்கும் போது, உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்வது சிறந்தது.


➡குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கு பெரும் காரணம் உடல் வறட்சி தான். அதிலும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை என்றால், அடிக்கடி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இல்லை சற்று பெரிய குழந்தை என்றால், அவர்களது உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது ஜூஸ் போன்ற நீர்மத்தை கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் உடலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம்.


➡குழந்தைக்கு வயிற்றுப் போக்கு இருந்தால், அப்போது அவர்களது உடலில் இருந்து உப்பு மற்றும் நீர்ச்சத்தானது வெளியேறிவிடும். எனவே அவர்களது உடலில் இருந்து வெளியேறிய உப்புச்சத்தை மீண்டும் பெற வைப்பதற்கு, தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிக்க கொடுக்க வேண்டும். ஒரு வேளை அவர்கள் குடிக்க மறுத்தால், வற்புறுத்தியாவது கொடுக்க வேண்டும்.


➡குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு இருந்தால், அப்போது அவர்களுக்கு செர்லாக் போன்ற உணவுப் பொருட்களை கொடுக்க கூடாது. அதற்கு பதிலாக வீட்டில் சமைத்த உணவுகளான சாதம், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.


➡சிலசமயங்களில் பற்கள் முளைப்பதால் ஏற்படும் வலியின் காரணமாகவும், வயிற்றுப் போக்கு ஏற்படலாம். எனவே இந்த நேரத்தில் அவர்களது ஈறுகளுக்கு மசாஜ் செய்யும் வகையில், அவர்கள் கடிப்பதற்கு ஏற்றவாறான பொம்மைகளை கொடுக்க வேண்டும். இல்லையெனில் விரல்களை வைத்துக் கூட, குழந்தைகளின் ஈறுகளை மசாஜ் செய்யலாம்.


➡குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கோ அல்லது வயிற்று வலியோ ஏற்பட்டால், உடனே கிரேப் வாட்டர் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் உலகத்திற்கே தெரிந்த ஒன்று தான். அதிலம கிரேப் வாட்டர் கொடுத்தால், குழந்தைகளின் வயிற்று வலி நீங்குவதோடு, வயிற்றில் இருக்கும் வாயுவும் வெளியேறிவிடும்.


.

⏩ #தவிர்க்கும்_முறைகள் ❓


குழந்தைகளில் வயிற்றுப்போக்கு சமாளிக்க சிறந்த வழி அதை தடுப்பதே. சில எளிய விஷயங்களை நினைவில் வைத்து கொண்டாலே இதைச் செய்யலாம்.


- எப்போதும் உங்கள் குழந்தையின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கவும் மற்றும் குழந்தையுடன் ஒன்றி இருக்கும் பொருட்கள், குழந்தையின் பெற்றோர் என அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும்.


- உங்கள் குழந்தையை கவனித்து கொள்ளும் போது, உங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஊட்டும் உணவு நன்கு கழுவி, நன்றாக வேக வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.


- உங்கள் குழந்தை வாயில் வைக்கும் பொருட்கள், பொம்மைகள், கைகள் மற்றும் அவர்கள் வையில் வைக்கும் அளவில் கிடைக்கும் பொருட்கள் என அனைத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.


- உங்கள் குழந்தைக்கு சீரான உணவு கொடுப்பதுடன், நீர் சத்தும் உடலில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.


.

💊#உணவுகளும்_வைத்தியங்களும்❓


🔯 அரிசிக் கஞ்சி - 


எளிதில் செரிமானமாகும் உணவு மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ஆற்றலை அளிக்க வல்லது.


🔯 வாழைப்பழம் - 


பொட்டாசியம் நிறைந்த இந்தப்பழம், உடலில் குறைந்த தண்ணீர் சத்தினை ஈடுகட்ட உதவும். 


🔯 தாய்ப்பால் - 


தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அளித்து, நோய்த்தொற்றுகளை அளிக்க வல்லது.


🔯 தயிர் - 


தயிரில் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அளிக்கலாம் இளநீர் கூட அளிக்கலாம்.


🔯 மாதுளை பழச்சாறு - 


இது குழந்தைகளுக்கு உடனடி ஆற்றல் அளிக்க ஏற்றது.


🔯 ஆப்பிள் - 


ஆப்பிளை கூழாக்கி அளிப்பது, குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கால் ஏற்பட்ட அசதியை விரட்ட உதவும்.


🔯 புதினாச்சாறு - 


இது குழந்தைகளின் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவும்; இதை தேன் சேர்த்து அளிக்கலாம்.


🔯 எலுமிச்சை சாறு - 


இதில் தேன் சேர்த்து அளிப்பது, குழந்தைகளின் சோர்வை போக்க உதவும்.


🔯 ஸ்டார்ச் - 


ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை அளிப்பது குழந்தைகளின் செரிமானத்திற்கு உதவும்.


🔯 உருளைக் கிழங்கு - 


இது அதிகம் ஸ்டார்ச் நிறைந்த உணவாகும்; குழந்தைகளுக்கு அளிக்க ஏற்றது.


🔯 தேன் - 


1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் அளிக்கலாம், இது அவர்களுக்கு பலமளிக்கும்.


🔯 வசம்பு


வசம்பை நெருப்பில் வாட்டிக் கொள்ளவும்.அதன் சாம்பல் பொடியைச் சேகரித்து எடுத்து வைக்கவும்.இந்த வசம்பு பொடியைத் தேனில் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது வயிற்று போக்கு குணமடையும்.


🈯 #0_6_மாத_குழந்தைகள்…🈯


இந்த மாதத்துக்குள் உள்ள குழந்தைகளுக்கு, தாய்ப்பால்தான் மருந்து. வயிற்றுப்போக்கின் போது தாய்ப்பாலை அதிக அளவில், நீண்ட நேரம், அதிக முறை கொடுக்கலாம். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே கொடுக்கலாம். குழந்தைக்கு புட்டிப்பால் தருபவர்கள் தண்ணீர், ஸ்பூன், பாத்திரம், பாட்டில், நிப்பிள் போன்றவற்றை சுத்தமாகப் பராமரியுங்கள். குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பதால், தாய்ப்பால் கொடுப்பது மிக மிக முக்கியம். வயிற்றுப்போக்கு தொடர்ந்தால் உடனடியாக, அருகில் உள்ள குழந்தை நல மருத்துவரை அணுகுங்கள்.


🔯 #6_8_மாத_குழந்தைகள் 🔯


⭕ தாய்ப்பால்


தாய்ப்பால் அதிக அளவில் கொடுக்கலாம். அதிக முறை கொடுக்கலாம்.


⭕ ORS - மருத்துவரின் அறிவுரை இருந்தால் மட்டும்


மருத்துவர் பரிந்துரைத்தால் இந்த ஓ.ஆர்.எஸ் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


🔴 ஓ.ஆர்.எஸ் [ ORS ] கரைசல்

வீட்டிலேயே தயாரிக்கும் முறை குறித்து தெரிந்துகொண்டால் அவசரத்துக்கு

எப்படி தயாரிப்பது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.


👉தேவையானவை❓


சுத்தமான தண்ணீர் - 1 லி


சர்க்கரை - 6 டீஸ்பூன்


உப்பு - அரை டீஸ்பூன் அளவு,


கவனம் கொடுக்கப்பட்ட அளவை காட்டிலும் குழந்தைகள் குடிக்க வேண்டும் என்று சர்க்கரை அதிகம் சேர்த்தால் வயிற்றுப்போக்கு அதிகரிக்க கூடும். 


உப்பை கூடுதலாக சேர்த்தால் உடலுக்கு கேடுதரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உப்பின் அளவு குறைந்தும் சர்க்கரையின் அளவு அதிகரித்தும் காணப்பட வேண்டும். 


கொடுக்கப்பட்ட அளவை காட்டிலும் தண்ணீர் அதிகம் சேர்ப்பது கெடுதல் தராது. குறிப்பாக இந்த கரைசல் குழந்தைகளுக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது.


ஒரல் ரீஹைட்ரேஷன் என்றழைக்கப்படும் ஓ.ஆர் எஸ் தெரபி என்று அழைக்கப்படுகிறது. 


குழந்தைகளுக்கு உப்பும் சர்க்கரையும் சேர்த்து தரும் இந்த கலவையானது வயிற்றுப்போக்கை குறைக்கும். உடலில் நீர் இழப்பை தடுக்கும். 10 கிலோ வரை எடை இருக்கும் குழந்தைக்கு 100 மில்லி அளவு வரை இந்த கரைசலை கொடுக்கலாம். 


⭕ இளநீர்


ஒரு நாளைக்கு 2-3 முறை, அரை டம்ளர் - முக்கால் டம்ளர் வரை ஒவ்வொரு வேளையிலும் கொடுக்கலாம். இழந்த நீர்ச்சத்துகளைத் திரும்பப் பெற உதவும்.


இளநீரில் சிறிதளவு சீரகத்தூள் கலந்து கொடுக்கலாம்.


⭕ கேரட் ஜூஸ்


சுத்தமான இளஞ்சூடான நீர் சேர்த்து கேரட் ஜூஸ் தயாரிக்கவும். எந்த இனிப்பும் தேவையில்லை. ஒரு நாளைக்கு இரண்டு வேளை, அரை - முக்கால் டம்ளர் அளவு கேரட் ஜூஸ் கொடுக்கலாம்.


⭕ வாழைப்பழ கூழ்


வாழைப்பழ கூழை குழந்தைக்கு கொடுக்க, எனர்ஜியும் ஸ்டாமினாவும் கிடைக்கும்.


⭕ ஆப்பிள் கூழ்


ஆப்பிளை வேக வைத்து, தோலை நீக்கி விட்டு, சதைப் பகுதியை கூழாக்கி கொடுக்கலாம்.


⭕ மாதுளை ஜூஸ்


சுத்தமான இளஞ்சூடான நீர் சேர்த்து மாதுளை ஜூஸ் தயாரிக்கவும். இரண்டு வேளை குழந்தைகளுக்கு அரை - ஒரு டம்ளர் அளவு கொடுக்கலாம். 


⭕ விளாம் பொடி


விளாம் பொடியை தேனில் குழைத்து குழந்தைகளுக்குச் சாப்பிட உகந்தது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குணமடைய உதவும்.


.

🈺#8_12_மாத_குழந்தைகள் 🈺


⭕ அரிசி கஞ்சி


பொடித்து வைத்த அரிசியை வெந்நீரில் போட்டு கஞ்சி காய்ச்சி கொடுப்பது நல்லது.


⭕ பருப்பு தண்ணீர்


வேகவைத்த துவரப்பருப்பு அல்லது பாசிப்பருப்பு தண்ணீருடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சீரகத் தூள் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.


⭕ எலுமிச்சை ஜூஸ்


இளஞ்சூடான தண்ணீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து, அதில் புதினா ஜூஸ் கொஞ்சம் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.


⭕ இஞ்சி சாறு


ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூள், இவற்றை அரை டம்ளர் இளஞ்சூடான வெந்நீரில் கலந்து குழந்தைக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுக்கலாம்.


⭕ ரசம்


மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்த ரசம் சாதத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. துளசி சேர்த்து ரசம் வைத்தாலும் நல்லது.


 

🈳#11_மாதம்_முதல்_பெரியவர்கள் 

#வரை………🈳


🉐 வயிற்றுப்போக்கை நிறுத்தும் பொடி


➡ தேவையானவை❓


பொட்டுக்கடலை - 1 கப் உலர்ந்த 


கறிவேப்பிலை - அரை கப் உப்பு - சிறிதளவு


➡செய்முறை❓


உப்பைத் தவிர அனைத்தையும் ஒன்றாக அரைத்துப் பொடி தயாரித்து வைத்துக் கொள்ளவும். சாதத்தில் இந்தப் பொடி போட்டு, சிறிது உப்பு, உருக்கிய நெய் சேர்த்து சாப்பிட வேண்டும்.


⭕ கொய்யா இலை கஷாயம்


கொதிக்கின்ற 2 டம்ளர் நீரில், நன்கு கழுவிய கொய்யா இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு கொய்யா இலை கஷாயம் மிகவும் நல்லது.


⭕ துளசி கஷாயம்


2 டம்ளர் கொதிக்கும் நீரில், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி துளசி இலைகளைக் கிள்ளி போடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். இளஞ்சூடாக ஆறிய பிறகு, வடிகட்டி குடிக்கலாம். இனிப்புக்கு, பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். 


⭕ சகசா


வீட்டுச் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் ஒரு பொருள் தான் கசகசா.இந்த கசகசாவைப் பொடியாக அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்று போக்கு குணமடையும். கசகசா வயிற்றுக்குக் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


⭕ சீரகம்


ஒரு கப் அளவு சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

இதனைப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை என்ற கணக்கில் கால் கப் மோரில் கலந்து பருகவேண்டும். இப்படிச் செய்வதால் வயிற்று போக்கு நிவர்த்தி அடையும்.


⭕ வேப்பம் இலை


நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வசம்பை வாங்கிக் கொள்ளவும். இதை நெருப்பில் வாட்டி நன்கு சுடவும். வேப்பம் இலையைப் பறித்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் மோரில் கலந்து பருகி வர, வயிற்று போக்கு குணமடையும்.


⭕ அவரை இலை


அவரை இலை சாற்றைத் தயிருடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்று போக்கு குணமடையும்.


⭕ மிளகு


மிளகு கிருமிகளை அழக்கும் குணம் கொண்டது.மிளகை பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதனை மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று போக்கு கட்டுப்படும்.


❌ #தவிர்க்க_வேண்டியவை❓


இந்த மாதிரியான சமயத்தில், எடுத்த உடனேயே மாத்திரைகள், மருந்துகள், ஆண்டிபயாட்டிக்குகள் போன்றவற்றை அளிப்பது நல்லதல்ல இந்த முறையை தவிர்த்தல் நல்லது.


👉 இந்த முறைகளை கையாண்டு உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாக வைத்து கொள்வதன் மூலமாக நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். மாதம் பத்து சுமந்து பெற்ற மழலை செல்வத்தை, உடல்நல குறைவின்றி காப்போமாக❗


🔴 #முக்கிய_குறிப்பு


இத்தகைய செயல்களையெல்லாம் குழந்தைகளுக்கு #மூன்று_நாட்கள் வயிற்றுப் போக்கு இருக்கும் போது செய்ய வேண்டும். இதனால் அவை குணமாகிவிடும். 


#ஒருவேளை………


மூன்று நாட்களுக்கும் மேல், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை நீராக மலமானது வெளியேறினால், உடனே குழந்தைகளை #மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி