விந்து கெட்டிப்பட

 ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..!


1. வில்வ பழ சதையை கற்கண்டு கூட்டி தினமும் காலையில் உண்டு வர விந்துவை அதிகபடுத்தும். வில்வப் பழம் பல நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை கொண்டு வந்து ஓட்டை நீக்கி விட்டு உள்ளிருக்கும் காய்ந்த சதையை மட்டு எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் கற்கண்டு தூளையும் நன்றாக சேர்த்து புட்டியில் பத்திரபடுத்தி கொள்ளவும். இதை தினமும் உபயோகித்து வரலாம்.


2. அஸ்வகந்தா பொடியை (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) தினமும் பாலில் தேன் அல்லது கற்கண்டு கலந்து அருந்தி வர விந்து உற்பத்தி அதிகமாகும். நாடி நரம்புகள் பலப்படும்.


3. தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது வலுப்பெறும்.


4. அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து எண்ணிக்கை கூடும்.


5. ஓரிதழ் தாமரை பௌடர் ஒரு ஸ்பூன் வீதம் இரண்டு நேரம் பசும் பாலில் கற்கண்டு  அல்லது தேன் சேர்த்து சாப்பிட விந்து உற்பத்தி அதிமாகும். அதுமட்டும் அல்லாமல் ஆண்மைசக்தி அதிகப்படும்.


6. நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி என்ற வித்தை 100 கிராம் அளவில் வாங்கி வந்து தூய்மை செய்து தினமும் ஒரு ஸ்பூன் அல்லது 2 இரண்டு ஸ்பூன் உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகி விந்து இறுகி வெண்ணெய் போலாகும். இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யகூடாது , சவ்வு போலாகிவிடும்.

.

7. நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.


8. பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.


9. அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.


10. நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.


11. ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.


12. தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.


13. சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.


14. துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.


15. முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.


16. வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.


17. நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

.

சேர்க்க வேண்டியவை:

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.

.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி