வயிற்றுப்போக்கு குணமாக சூரணம்

 💢 #நிற்காமல்_போகும்_பேதிக்கு……


💢 #நம்ம_வீட்டிலே_மருந்து_பொடி #தயாரிக்கும்_முறை…❗❗❓❓


💊சின்ன சின்ன குறைபாடுகள் நேரும் போது வீட்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் அடங்கிய பொருளை கொண்டே கைவைத்தியம் செய்து கொள்ளலாம்.


வயிற்றுப்போக்கு என்பது எல்லோருக்கும் எப்போதாவது உண்டாக கூடிய சாதாரண பிரச்சனைதான். பெரும்பாலும் இவை தானாகவே சரியாக கூடும். குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றூம் வயதானவர்கள் தவிர மற்றவர்கள் வயிற்றுப்போக்கு காலங்களில் கை வைத்தியம் மூலம் சரிசெய்ய பார்க்கலாம்.


அந்த காலத்தில் வளரும் பிள்ளைகள் முதல் வயதானவர்கள் எல்லோருக்கும் எப்போது வயிற்றூப்போக்கு வந்தாலும் வீட்டில் ரெடிமேடாக இந்த வயிற்றூப்போக்கு சூரணத்தை வைத்திருப்பார்கள். ஆறுமாதங்கள் வரை கெடாமல் இருக்கும் இந்த பொடி உடலுக்கு பாதுகாப்பானது என்பதால் இந்த பொடி சாப்பிட்ட பிறகும் தொடர்ந்து பேதி ஆனால் மட்டுமே மருத்துவரை அணுகலாம்.


பெரும்பாலும் இந்த பொடியை கொண்டே சீதபேதி வரை குணப்படுத்தலாம் என்பதால் பெருமளவு இவை சரி செய்து விடக்கூடியதே. இந்த பொடியை எப்படி தயாரிப்பது பார்க்கலாம்.


​💊#தேவையானவை❓


👉மாதுளம் பழத்தின் தோல் - துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து எடுத்தது - 50 கி 


👉மாம்பருப்பு - மாங்கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பை காயவைத்து எடுத்தது - 2 எண்ணம்


👉சுண்டை வற்றல் - சுண்டைக்காயை மோரில் ஊறவைத்து வெயிலில் உலர்த்தி நன்றாக காயவைத்தது 

25 கி 


👉நெல்லி வற்றல் - நெல்லியை கொட்டை நீக்கி வெயிலில் உலர்த்தி எடுப்பது, நெல்லி முள்ளி என்றும் சொல்வதுண்டு நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் - 25 கி தேக்கரண்டி


👉வெந்தயம், ஓமம், சீரகம் - 25 கி 


மேல் கொடுத்திருக்கும் அனைத்து பொருள்களையும் சேர்த்து வாணலியில் இலேசாக வறுத்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். முதலில் மாதுளம் தோல், மாம்பருப்பு இரண்டையும் பொடித்து பிறகு மற்ற பொருள்களை சேர்க்க வேண்டும்.


அனைத்தையும் சேர்த்து நைஸாக பொடிக்கவும். இதை சலித்து மீண்டும் மீண்டும் அரைத்து சலித்து வைக்கவும். இதை கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து வேண்டும் போது பயன்படுத்தலாம்.


💢 ​#எப்படி_எவ்வளவு_பயன்படுத்த #வேண்டும்❓


💊வயிற்றுப்போக்கு இருக்கும் காலங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் முதல் அனைவரும் இதை சாப்பிடலாம். ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அவை பாதியாக சுண்டும் வரை காய்ச்சி அதில் கால் டம்ளர் நீரை ஆறவிடவும்.


💊இளஞ்சூடாக இருக்கும் போது அதில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கால் டீஸ்பூன் அளவு கலந்து கொடுக்க வேண்டும். 


💊6 வயதுக்கு மேற்பட்டு 12

வயதுக்குட்பட்டவர்களுக்கு அரை டீஸ்பூன் அளவு கலந்து கொடுக்க வேண்டும்.


💊இளவயதினர், நடுத்தர வயதினர் சிறிய அளவு டீஸ்பூனில் 1 ஸ்பூன் அளவு கலந்து குடிக்க வேண்டும். நீரை சுருக்கி மோரை பெருக்கி என்று சொல்வார்கள் அது இந்த வைத்தியத்துக்கு பொருந்தும். நீரை கொதிக்க வைத்து சுண்ட வைத்து குடித்தால் அவையே மருந்தாக மாறும்.


🈯 ​#எப்போது_சாப்பிடவேண்டும்❓


வயிற்றுப்போக்கு உண்டான உடனேயே இதை எடுத்துகொள்ளலாம். 6 மணி நேரத்துக்கு ஒரு முறை குடிக்க வேண்டும். முதல் இரண்டாம் முறையில் உடனடியாக பலன் தெரியும். குறிப்பிட்ட இடைவெளியில் இதை சாப்பிடும் போது அதிக கடினமான உணவு வகைகளை எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.


அப்போதுதான் பொடி வேலை செய்யும். திரவ ஆகாரங்களாக நீர் மோர், வெதுவெதுப்பான நீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துகொள்ளலாம். வயிற்றுப்போக்கு உண்டாகும் போது பால் பால் சார்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும். என்னுடைய பாட்டி வறட்டு காபியில் ( வெறும் டிகாக்‌ஷனில் சிறிது கருப்பட்டி சேர்ந்து) இந்த பொடியை கலந்து கொடுப்பார்.


பசி எடுத்தாலும் உணவு கிடையாது. நீர் ஆகாரம் மட்டும் தான். 8 மணி நேரத்துக்கு பிறகு அதிக புளிப்பில்லாத ரசம் குழைத்த சாதம் அல்லது மோர் சாதம் தருவார். ஆனால் அதிசயத்தக்க வகையில் வயிற்றுப்போக்கும் நிற்கும். கூடவே வயிற்றுப்போக்கால் ஏற்பட்ட உடல் அசதியும் நீங்கும். சமயங்களில் காய்ச்சல் வந்தாலும் பட்டென்று நிற்கும். அவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டிருக்க கூடிய இந்த பொடி எப்போதும் வீட்டில் இருக்கும்.


💊​#பொடியின்_மருத்துவ #குணங்கள்❓


⭐#மாதுளை 


சீதபேதிக்கு அருமருந்தாகும். இந்த பொடி இல்லாதவர்கள் மாதுளை பிஞ்சை அரைத்து நீர்மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். பேதி குணமாகும்.


⭐#மாம்பருப்பு 


வயிற்று கோளாறுகளை குணப்படுத்தக்கூடியது. மாம்பருப்பை காய்வைத்த்து மாதவிலக்கு பிரச்சனைக்கு பயன்படுத்துவார்கள். மலம் தண்ணீர் போன்று போவதை கட்டுப்படுத்த மாம்பருப்பு உதவும்.


⭐#சுண்டைக்காய் 


வயிற்று கோளாறுகளை சரிசெய்யக்கூடியது. நெல்லி முள்ளி குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவும். வைட்டமின் சி இருப்பதால் தொற்று சரிசெய்யும்.


⭐#வெந்தயம் 


வயிற்றுப்போக்கால் உண்டாகும் வயிறு வலியை குறைக்க செய்யும். ஓமம், சீரகம் உடலுக்கு வலு கொடுப்பதோடு செரிமானமண்டலத்தை சீராக்க செய்யும். ஓமம் வாயுத்தொல்லை இருந்தால் அதை குணப்படுத்த உதவும். வயிறு வலியை போக்கும்.


🔴#குறிப்பு❗❓


சீதபேதி இருந்தாலும் இந்த பொடியை முதல் இரண்டு முறை உரிய இடைவேளையில் எடுக்கும் போதே பலன் நன்றாக உணர முடியும். அதே நேரம் வயிற்றுப்போக்கு ஒரு நாளில் குறையவும் செய்யும். மாறாக தொடர்ந்து வயிற்றுப்போக்கு நீடித்தால் காலதாமதம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி