தாமரை தண்டு பொரியல்

 #தாமரைக்கிழங்கு_வறுவலும்

#மருத்துவ_பயன்களும்.


#சத்துக்கள்:

இதில் கொழுப்பு,சர்க்கரை எதுவுமில்லை.100 கிராம் தண்டில் கார்போஹைட்ரேட் 16 கிராம்,ப்ரோட்டீன் 2 கிராம் இருக்கு.விட்டமின் C 54% ,விட்டமின் B6 13% இருக்கு.

#மருத்துவப்பயன்கள்

தாமரை கிழங்கில் அதிக அளவில் இருக்கும் 

வைட்டமின்கள் பி மற்றும் சி சத்து தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

வைட்டமின் சி உடலின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி சருமத்தின் உறுதியை அதிகரிக்கிறது. தாமரை வேர் மற்றும் கிழங்கில் அதிகப்படியாக இருக்கும் பொட்டாசியம் அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சி சிறுநீரின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

கிழங்கில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள திரவங்களுக்கு  இடையில் சமநிலையை ஏற்படுத்துகிறது மற்றும் அதிகப்படியான சோடியம் இரத்த ஓட்டத்தை பாதிக்காமல் தடுக்கிறது. இரத்த நாளங்களை தளர்த்தி சுருக்கம் மற்றும் விறைப்பை தடுக்கிறது. மேலும் கிழங்கில் இருக்கும் இரும்பு சத்து மென்மையான இரத்த ஓட்டத்திற்கு  உதவுகிறது.தாமரை வேர் தண்டுகளை சாப்பிடுவதால் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பத்தை குறைக்கலாம்.

பெண்கள் தாமரை வேர் தண்டின் கணுக்களை சாப்பிடுவதால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை கட்டுப்படுத்துகின்றது.

சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும், ரத்த வாந்தி நிறுத்துவதற்கு தாமரை வேர்தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம். கிழங்கில் உள்ள போலேட் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய நரம்புக் குழாய் குறைபாடுகள் உள்ளிட்ட ஆபத்தான பிறப்புக் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. 

தாமரை வேர் பொடி அழற்சியை போக்க உதவுகிறது. தும்மல், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச அழற்சியை போக்க உதவுகிறது. 

இதன் வேர்தண்டு சற்று கசப்பு மற்றும் இனிப்பின் கூட்டுச்சுவையுடன் இருப்பதால் பச்சையாகவும் தின்னலாம் சமைக்கும் போது உப்பின் சுவை கிழங்கில் ஏறாது, இதனை வேகவைத்து சூப்புகளில் சேர்த்தும் குடிக்கலாம்.

தாமரைக் கிழங்கு துண்டுகளுடன் வெள்ளைப் பூண்டு இஞ்சி மிளகாய் ஆகியவற்றைக் கலந்து எண்ணெய்யில் பொரித்தும், வறுவலாகவும் சாப்பிடலாம்.

வறுவல் செய்ய

#தேவையானவை:

தாமரைத்தண்டு நல்லது கிழங்கு - 1 பெரியது

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்

கார்ன்மாவு - 1 டீஸ்பூன்

கடலைமாவு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிது

#செய்முறை:

*கிழங்கின் தோல்சீவி மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்துப் பொருட்களும் சேர்த்து பினைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். பின் தவாவில் எண்ணெய்விட்டு வறுத்து பரிமாறவும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி