தவறான வாழ்வியலால் வயிறே நோயின் பீடமாகிறது

 🇨🇭#உங்கள்_நோய்_எதுவாக 

#இருந்தாலும்……❗❗❗


🇨🇭#குணமாவது_உங்கள்_கையில்தான் #இருக்கிறது.❗❓❓❓


🔰 ''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், #நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.


🈵 ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,


🈯 இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,


🈸 மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,


🈳 நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’


இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால்,நகர வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’


நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.


🔰 #வயிறே_நோய்களின் #வரவேற்பறை……❗


சர்க்கரை நோயா❓ குணமாக்க முடியாது❗ கட்டுப்படுத்தலாம்… 

ஆனால் சாகும் வரை மருத்துவம் பார்க்க வேண்டும்…


இரத்த அழுத்தமா❓ குணமாக்க முடியாது❗ கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதற்குத் தினந்தோறும் மருந்துகளை நிறுத்ததாமல் சாப்பிட வேண்டும்.


ஆஸ்துமாவா❓ குணமாக்க முடியாது❗ அதன் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்க முடியும். ஆனால் இறுதி மூச்சு நிற்கும் வரை மருந்துகளின் துணையோடுதான்…..


மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி, புற்று நோய், என்று எந்த நோய் வந்தாலும் குணமாதல் என்பது இன்று பொய்யாகிப் போனது. 


⭕👉 அலோபதி மருத்துவமோ, 


🈚👉 ஹோமியோபதி மருத்துவமோ, 


🈸👉 சித்த மருத்துவமோ 


🈷👉 ஆயுர்வேத மருத்துவமோ


எதுவாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்கும் பரிதாப நிலைக்கு வந்துவிட்டோம்.


இந்த நிலைக்குக் காரணம் மருத்துவ முறைகள்தான் என்று குறை கூறும் முன்னர் முதலில் உங்களை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள். நோய் வருவதற்கும், நோய் உடலில் தங்கி நாட்பட்ட நோயாக மாறுவதற்கும், பின்னர் அதுவே கொடுநோயாக மாறுவதற்கும் காரணம் நீங்கள்தான். உங்களை நீங்கள் சரி செய்யாமல் எந்த வைத்தியம் பார்த்தாலும் நோய் குணமாகாது.


என்றைக்குப் பசியை உணராமல் கடிகாரத்தில் மணி பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தீர்களோ, அன்றைக்கே நீங்கள் சர்க்கரை நோயாளி ஆகிவிட்டீர்கள். பசி என்ற உணர்வே எச்சிலைச் சுரக்க வைக்கும், எச்சில் சுரந்தால்தான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கும், ஜீரணம் நன்றாக நடைபெறும். கணையமும் நன்கு வேலை செய்யும். கணையம் நன்கு வேலை செய்தால்தான் இன்சுலின் சுரக்கும். இன்சுலின் சுரந்தால்தான் உடலானது சக்தியை நன்கு பயன்படுத்த முடியும்.


இன்சுலின் சுரக்கவில்லை என்றால் சக்தியானது உடலால் உபயோகப்படுத்த முடியாமல் கழிவுகளாகத் தேங்கும். இந்தக் கழிவுகள் உடலில் எங்கெல்லாம் தேக்கம் கொள்கிறதோ அங்கெல்லாம் நோயாக மாற்றம் அடையும். அதையே நீங்கள் வெவ்வேறு பெயர் வைத்து விதவிதமான நோய்களாக அழைக்கிறீர்கள். பெயர் எப்படி வைத்துக்கொண்டால் என்ன? நோய் என்பது ஒன்றுதான். கழிவுகளின் தேக்கத்தால் சக்தி பரிமாற்றத்தில் ஏற்படும் குறைபாடே நோயாகும்.


.

⭕👉#உதாரணத்திற்கு………


#நுரையீரலில் கழிவுகளின் தேக்கமே……… 


▶சளியாக, 


▶இருமலாக, 


▶ஆஸ்துமாவாக 


மாற்றம் அடைகிறது. 


.

🉐 #கணையம்_இன்சுலினைச் சுரக்காததால் தேங்கும் கழிவுகளே……… 

தினம்தோறும் நீங்கள் அனுபவிக்கும்.…… 


👉கண் பார்வை பிரச்சினை, 


👉காது கேட்பதில் பிரச்சினை, 


👉தலைவலி, 


👉உடல்வலி, 


👉மூட்டுவலி, 


👉அரிப்பு, 


👉கை கால் மரத்துப் போதல், 


👉கை கால் விரல்களில் எரிச்சல், 


👉தோல் நோய்கள், 


👉படபடப்பு, 


👉தலைசுற்றல், 


👉அதிகமான தாகம், 


👉அதிகமான பசி, 


👉மயக்கம் 


என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

உடலில் தேங்கும் கழிவுகளை உடலை விட்டு நீக்கினால் நோயானது தானே குணமாகிவிடும். அதை விடுத்து எந்த வைத்தியம் பார்த்தாலும் நோயின் வெளிப்பாடுகளை (நோயை அல்ல) வேண்டுமானால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும், ஆனால் அதற்கும் ஆயுள்வரை மருத்துவம் என்ற கதைதான். இதிலிருந்து மீள்வதற்கு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுங்கள். அனைத்து நோய்க்கும் மூல காரணம் வயிறுதான். அதைச் சரி செய்யுங்கள். வயிறு நன்றாக இருந்தால் உடலில் கெட்ட சக்திகள் (கழிவுகள்) தேங்காது. கழிவுகள் தேங்கவில்லை என்றால் என்றும் ஆரோக்கியம் தானே.


❌ வயிறு நன்றாக இருக்க வேண்டுமானால் கடிகாரத்தைப் பார்த்து, காலை 8 மணி, மதியம் 1 மணி, இரவு 8 மணி என்று சாப்பிடுவதை நிறுத்துங்கள்.❗


💢 பசி இருக்கிறதா❓இல்லையா❓

என்று பாருங்கள். 


⭕ பசி இருந்தால் மட்டுமே உணவு உண்ணவேண்டும். 


🉐 தாகத்தை உணர்ந்து தண்ணீர் அருந்துங்கள். 


♓ அதே போல் தூக்கம், குறிப்பாக இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்.


இரசாயனங்களின் உதவியோடு விளைந்தவை, வேதியியல் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டவை, செயற்கை உணவுகள் என்று எதுவாக இருந்தாலும் உணவின் இயற்கைத் தன்மைக்கு வேட்டு வைக்கும் விஷயத்தை விலக்கி நீங்கள் உண்ணும் உணவில் முடிந்த அளவு இயற்கைத் தன்மை உள்ளது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். இரசாயனங்கள் உடலுக்கு என்றைக்குமே தீமைதான் செய்யுமே ஒழிய நன்மை செய்யாது. அது எந்த ரூபத்தில் இருந்தாலும் சரி.


உடலானது நாம் உட்கொள்ளும் 

(காற்று, உணவு, நீர்) போன்றவற்றிலிருந்து இயற்கையான சக்தியை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இயற்கைக்கு மாறாக உள்ளவற்றைக் கழிவாகவே ஒதுக்கித் தள்ளும். இந்தக் கழிவுகள் பின்னர் ஒன்று சேர்ந்து வெளியேற முடியாமல் நோயாக மாறும்.


❗உங்கள் நோய் எதுவாக இருந்தாலும் குணமாவது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தாகம், பசி (இரசாயனங்கள் இல்லாத உணவு), தூக்கம், அறிந்து நடந்தால் போதும். நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை. 


⭕ #அப்படியெல்லாம்……… 


என்னால் இருக்க முடியாது கண்ணில் கண்டதை எல்லாம் சாப்பிடுவேன் என்றால் வயிறுதான் நோய்களின் வரவேற்பறையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.


🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭


 💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊


   ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி