சுண்டக்காய் குழம்பு பல் பாதுகாப்பு

 💫 பற்கள் பலமடைய 

சுண்டைக்காய் குழம்பு


பச்சை சுண்டைக்காய் - 1 கப், 


கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், 


உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், 


காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8, 


தனியா - 1 டீஸ்பூன், 


வெந்தயம் - 1 டீஸ்பூன், 


பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, 


நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், 


மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, 


தாளிக்க கடுகு - சிறிது, 


பூண்டு - 15 பற்கள், 


புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு, 


உப்பு - தேவையான அளவு, 


கறிவேப்பிலை - ஒரு கொத்து.


செய்முறை:


பச்சை சுண்டைக் காயை சுத்தம் செய்து காம்பைக் கிள்ளி வைக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்து வைக்கவும். 


கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், பூண்டு பற்கள் போட்டு வறுத்துக் கொள்ளவும்.


 ஆறியதும் நைசாக (தேவைப்பட்டால்) தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.


 கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் தாளித்து, பச்சைச் சுண்டைக்காய்களைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலாக் கலவை ஊற்றி கலக்கவும்.


 சுண்டைக்காயோடு மசாலா நன்கு கலந்து வந்ததும் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும்.


 கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கவும். 


எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலுவையும் உறுதியையும் அளிக்கவல்லது. 


பற்களின் மேலுள்ள எனாமலைப் பாதுக்காக்க வல்லது. 


உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்தது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி