ஒல்லியான தேகம் குண்டாக உணவுகள்

 🇨🇭#ரொம்ப_ஒல்லியா_இருக்கோமேன்னு 

#வருத்தமா…❓❓❓


உடல் ஒல்லியாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் சரியான உணவை தேர்ந்தெடுக்காததே. 


♦டயட் தவிர்த்து உடலில் ஏதாவது பிரச்சனைகள்…❓❗❗


👉தைராய்டு நோயின் அறிகுறி, 


👉வயிற்றில் பூச்சி, 


👉கல்லீரல் பாதிப்புகள், 


👉சர்க்கரை நோய், 


என பலவும் காரணங்கள் இருக்கலாம்.

அதற்காக துரித உணவுகளையோ, ரெடிமேட் நொறுக்குத் தீனிகளையோ தேடதீர்கள். இவை மோசமானவை.


உடல் எடை குறைக்கவும் , அதிகரிக்கவும் உதவும் உணவுகள் உண்டு. உணவின் மூலமாகவே பல நோய்களையும் குணப்படுத்தலாம். 


அப்படித்தான் இந்த மெலிந்த் உடல் பிரச்சனையையும் போக்கிடலாம். ஒல்லிப்பிச்சான் உடலை போஷாக்காய் மாற்ற உதவும் உணவுகளை இந்த கட்டுரையில் காணலாம்.


உங்கள் எடை எவ்வளவோ,அதே கிராம் அளவு புரதம்/புரோட்டீன் தினமும் உண்ண வேண்டும். உதாரணமாக, 45kg என்றால் 45 கிராம் புரதம் உண்ணவும்.. முட்டை, சோயா, கொண்டைகடலை, பருப்பு, பாசிபயறு, பொட்டுக்கடலை போன்றவை உதவும்.. 


தினமும் போதுமான நீர்சத்து கண்டிப்பாக தேவை.. ஜூஸ், சூப் கணக்கில் கொள்ளாமல் சுத்தமான குடிநீர் அருந்த வேண்டும்.. 20kgக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் அருந்துவது மிகவும் அவசியம்.நீங்கள் 40kg என்றால், முதல் 20kgக்கு 1 லிட்டர், அடுத்த 20kgக்கு 1 லிட்டர் என 2 லிட்டர் அவசியம்.. உறங்க செல்ல ஒரு மணிநேரம் முன்புவரை இந்த அளவு நீர் உடலுக்கு தேவை.


ஒரு நாளைக்கு இரண்டு செவ்வாழை பழங்களும்,ஒரு நேந்திரம் பழமும் கண்டிப்பாக உண்ணவும்..


உலர் பழங்களும் கொட்டைகளும் எடைகூட ரொம்ப உதவும்.. அதிக அளவு எடுக்க முடியாதவர்கள்,4,5 பாதாம் பருப்பும்,4,5 முந்திரி மட்டுமாவது உண்ணவும்.


இரண்டு மணி நேர இடைவெளியில் உண்ணவும். உண்பது calorie அதிகம் கொண்டவையாக இருந்தால் சிறப்பு.. நீர்சத்து காய், பழங்களை விட மாவுச்சத்து மிகுந்தவையாக உண்ணவும். சுரைக்காய்,தர்பூசணி போன்றவையைவிட ஆப்பிள், உருளை, சர்க்கரைவள்ளி, மரவள்ளி, போன்றவை அதிகம் உண்ணவும். 


பருப்பு-நெய் சாதம், முருங்கைக்கீரை பொறியல், அப்பளம், 1 டம்ளர் கெட்டிதயிர்-- வாரத்தில் இரண்டு நாட்கள் மதிய உணவாக உண்ணவும்.


மாலை சிற்றுண்டி மிக அவசியம். வடை, அடை,சுண்டல், பிரெட்-பட்டர், பொட்டுக்கடலை உருண்டை, எள்ளுருண்டை- ஏழு நாட்களுக்கு ஏழு என மாற்றி மாற்றி உண்ணவும்.


உளுந்துவடை, உளுந்தங்கஞ்சி, சோயா பருப்பு சுண்டல், பாசிப்பருப்பு பாயாசம்(வெல்லம் போட்டது)-தினமும் இவற்றில் ஒன்று உங்கள் உணவில் இருக்க வேண்டும்.. 


மிதமான பணி,அல்லது மிதமான உடற்பயிற்சி கண்டிப்பாக தேவை. 


வெண்ணெய்யுடன் கற்கண்டு கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். தோன்றும் போதெல்லாம் ஒரு ஸ்பூன் சாப்பிடவும்.


வேர்க்கடலை, கடலைமிட்டாய், தேங்காய்மிட்டாய் அடிக்கடி சாப்பிடவும். 


நாள் ஒன்றுக்கு பால், கெட்டித்தயிர், தேங்காய்ப்பால் மூன்றும் அவசியம். 


இரவில் இரண்டு பேரிட்சை, ஒரு டம்ளர் பால் அவசியம்.


இரவில் பத்து உலர்திராட்சை நீரில் ஊற வைத்து காலையில் அந்த நீரை அருந்தி,பழங்களை சாப்பிடவும்.


கேழ்வரகு/ராகி கஞ்சி எடையைக் கூட்டும்


பரோட்டா, செயற்கை குளிர்பானங்கள் மூலம் ஏற்றும் எடை முதலில் தொப்பையுடன்தான் ஏற்றும். அவற்றை தவிர்க்கவும். 


சப்பாத்தி சாப்பிட்டால், அத்துடன் ஒரு ஸ்பூன் நெய், உருளைகிழங்குடன் உண்ணவும். உண்ணும் உணவில் நல்ல கொழுப்பை முடிந்த மட்டும் சேர்த்து உண்ணவும். 


முட்டை, ஈரல் போன்றவை மிக உதவும்,ஆனால் நாட்டு மருந்தில் அசைவம் பரிந்துரைப்பதை தவிர்க்க கூறியதால் நான் அவற்றை சேர்க்கவில்லை. 


காய்களை பருப்புடன் கூட்டாக உண்ணவும். கீரைகளை கடைந்து அரிசி சாதத்துடன் உண்டு, ரசம், தயிருடன் மதிய உணவு உண்ணலாம்.. 


💊#அத்திப்பழம் 💊


அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து மறு நாள் சாப்பிடவேண்டும். தினமும் இப்படி 2 ஊற வைத்த அத்திப் பழங்களை சாப்பிட்டால் 20 நாட்களில் வித்தியாசத்தைக் 

காணலாம்.


💊#உளுந்து💊


ஒல்லியாக இருப்பவர்கள் உளுந்தை நிறைய உடலுக்கு சேர்த்துக் கொண்டால் மிக எளிதாக உடல் குண்டாகும். உளுந்து வடை, உளுந்து இட்லி, உளுந்து துவையல் என சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் போஷாக்கு பெறுவீர்கள்.


💊#வெந்தயம்💊


வெந்தயத்தை வேக வைத்து அதனுடன் வெல்லம் மற்றும் 1 ஸ்பூன் நெய் கலந்து ஒரு உருண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே உடல் பூரிப்பு உண்டாகும்


💊#உலர்திராட்சை💊


தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். சாதரண திராட்சையை விட 8 மடங்கு அதிகமாக குளுகோஸ் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்


💊#கொண்டைக்கடலை💊


தினமும் ஊற வைத்த கொண்டைக் கடலையை சாப்பிட்டு வர வேண்டும். 10- முதல் 15 வரை கொண்டைக் கடலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும். இவை புரதம் 

அதிகம் உள்ளது. உஇவை சதைப் பிடிப்பை உடலுக்கு அளிப்பவை.


💊#எள்ளு💊


எள்ளு ஒல்லியாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இது உட்ல எடையை அதிகரிக்கச் செய்யும். எள்ளுப் பொடி, எள்ளு சட்னி என எள்ளிய தொடர்ந்து உண்வைல் சேர்த்துக் கொள்ளுங்கள்.


💊#வாழைப்_பழ_மில்க்ஷேக்💊


வாழைப் பழத்தை பாலில் கலந்து மில்க் ஷேக் செய்து தினமும் குடியுங்கள். உடல் எடையை அதிகரிக்கும் பண்பு வாழைப்பழத்தில் உள்ளது. 

தினமும் ஒரு வாழைப் பழ 

மில்க் ஷேக் நல்ல வாளிப்பை தரும்.


💊#மத்தியானம்_தூக்கம்💊


மத்தியானம் ஒரு 20 நிமிடங்கள் தூங்கினால் உடல் எடை கணிசமாக கூடும். இது நிருபீக்கப்பட்ட உண்மை. அதிகம் தூங்கக் கூடாது. பின்னர் இரவில் தூக்கமில்லாமல் 

அவஸ்தைப் பட நேரிடும்.


💊#பீநட்பட்டர்_மற்றும்_பிரட்💊


பீனட் பட்டரை பிரட்டில் தடவி சாப்பிட்ட வேண்டும். தினமும் இப்படி இரண்டு ஸ்லைஸ் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


💊#பாதாம்_பால்💊


பாதாம் பாலில் அதிக புரதம் இருப்பதால் போஷாக்கை உடலுக்கு அளிக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்டச் செய்யும். தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.


💊#பாஸ்தா💊


பாஸ்தா செய்வதற்கு எளிதானது. அதனுடன் காய்கறிகளும் சேர்த்து சமைக்கும்போது அனைத்து ஊட்டச் சத்தும் நமக்கு அளிக்கிறது. ஆகவே வாரம் 2 நாட்கள் பாஸ்தா 

சாப்பிடுங்கள்.


💊#தயிர்💊


தயிர் அல்லது யோகர்ட்டை அதிகம் சாப்பிடுங்கள். லஸ்ஸியாக சாப்பிட்டால் கூடுதல் சிறப்பு. உடல் எடை கணிசமாக கூடும். தயிரில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.


💊#கடலை_எண்ணெய்💊


சமையலுக்கு கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். சில வாரங்களிலேயே உடல் எடை கூடியிருப்பதையும் சருமம் மினுமினுப்பதையும் காண்பீர்கள்.


💊#2_மணி_நேரத்திற்கு_ஒரு💊

#தடவை__பால் )


காலை முதல் இரவு வரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இதற்கு பால் வைத்தியம் என்று பெயர். அப்படி தொடர்ந்து குடிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும்.


💊#சோயா💊


சோயா உடல் எடையை அதிகரிக்கும். சோயா மாவில் செய்யப்பட்ட நொருக்குத் தீனிகள், சோயா கலந்த சப்பாத்தி, சோயா எண்ணெய் அல்லது சோயா பால் போன்றவற்றை 

தொடர்ந்து சாப்பிடுங்கள்.


குறிப்பாக பெண்குழந்தை

களுக்கு சோயா மிகவும் நல்லது. வயது வராத பெண் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிடுவதால் ஈஸ்ட்ரோஜன் அதிகம் 

சுரக்கவைக்கும்.


💊#நீர்ச்சத்து_காய்கள்💊


பூசணிக்காய், சுரைக்காய், ஆகியவற்றை தவறாமல் வாரம் 3 முறை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் கூட்டு, இனிப்பு வகைகள் செய்து சாப்பிட்டாலும் நல்ல பலன்களிய 

தரும்.


💊#நல்ல_கொழுப்புள்ள_பழம்💊


அவகாடோவில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் தீங்கை விளைவிக்காது. உடல் பருமனையும் அதிகரிக்கச் செய்யும். 


பெரும்பாலும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு

சத்துப் பற்றாக்குறை அதிகம் இருக்கும். அவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால், தேவையன ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், உயர் ரக விட்டமின்கள் என பல சத்துக்கள் உள்ளது.


#இவற்றையெல்லாம்…… பயன்படுத்தியும் உடல் எடை கூடாமல் ஒல்லியாகிக் கொண்டே போனால் உடனடியாக மருத்துவரை நடுதல் நல்லது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி