மரம் வளர்ப்போம்

 பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்,

பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்,

பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்,

பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்.

எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும் நல் மரங்களை நடுகின்றாரோ அவரிடம்


தேவதைகளும் முனிவர்களும் கந்தர்வர்களும்

மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்.


'மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்கிறான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.


ஒரு *அரச மரம்* நட்டால் ஒரு ஆண்டு சொர்க்கலோக பதவி கிட்டும் என்று *விருஷ ஆயுர் வேதத்தில்* குறிப்பிடப் பட்டிருக்கிறது.

பல ஆண்டு கால சொர்க்கலோக வாசத்துக்கு பல அரச மரங்கள் நட வேண்டும். அதிக அளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரச மரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்ற சொல்லி இருப்பதில் மருத்துவ காரணங்கள் உள்ளன.

அரச மரத்தின் அதிக பிராண வாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது, அதனால் புத்தி தெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது. 

புத்தருக்கு ஞானம் அளித்த *போதி மரம் என்பது ஒரு அரச மரமே* என்றும், அதன் காரணமாகவே அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில் நீதி வழங்கி னார்கள்.


*ஆல மரம்* வாக்கின் அடையாளம் என்றும், அதன் காரணமாகவே வணிகர் ஜாதியினரான *பனியாக்கள்* அதன் அடியில் கூடி தங்கள் வணிகத்தை நடத்தினார்கள் என்றும், அதன் காரணமாகவே 

அது ஆங்கிலத்தில் *பான்யன் ட்ரீ* என்று அழைக்கப் பட்டிருக்கிறது. ஆல மரம் மேகங்களை ஈர்த்து அதிக மழையை தருவிக்கக் கூடியவை, அதன் காரணமாக ஆல மரங்கள் நிறைய வளர்க்கப்பட வேண்டியவை.

சாஸ்திர முறைப்படி இரண்டு ஆல மரங்களை நடுபவர்களுக்கு கைலாயத்தில் ஒரு இடமும் கூடவே கந்தர்வ கன்னியரும் கிடைப்பார்கள் என்றும் *விருஷ ஆயுர்வேதம்* நூல் சொல்கிறது.

மேகங்களை இழுக்கும் சக்தியுள்ள இன்னொரு மரமாக *இலுப்பை மரத்தையும்* அது ஆலையில்லா ஊருக்குச் சர்க்கரையானது. 

தமிழ் நாட்டில் அருகி வரும் இந்த இலுப்பை மரம் அவசரமாக மிக அதிக அளவில் மீண்டும் வளர்க்கப் பட வேண்டியதன் அவசியம் இலுப்பை மரத்தின் மகிமைகளைப் படிக்கும் பொழுது புரிகிறது. 


அரசு ஆண் மலடை நீக்கும் வல்லமை உடையதினாலும் வேம்பு பெண் மலடை நீக்கும் வன்மையுள்ளது என்பதினாலும் அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்யும் ஃபெர்டிலிடி

ரைட்ஸ் உருவானது.


நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு வேப்ப மரப் பட்டையின் கஷாயம் அருந்த வேண்டும்.


நெட்டிலிங்க மரங்களே தமிழ் நாட்டில் *அசோக மரங்களாக* கருதப்படுகின்றன. உண்மையான அசோக மரங்கள் இலங்கையில் இருந்து தருவிக்கப் பட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப் பட வேண்டும்.


*இப்படி மரங்கள் குறித்தான எண்ணற்ற செய்திகள் ஒவ்வொரு மரத்தின் மீதும் பெரும் மரியாதையையும் பிரமிப்பையும் அளிக்கின்றன.* தமிழ் நாட்டில் மழை அதிகமாக பெய்த இடம் *திருவாலங்காடு.* திருவாலங்காட்டின் தல விருட்சம் ஆல மரம் என்பதும், ஆல மரங்கள் நிறைந்த இடத்தில் அதிக மழை பெய்தது இயற்கைதான் போலிருக்கிறது. நாம் சாதாரணமாக எதிர் கொள்ளும் வேப்ப மரத்தின் பயன் பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. *புங்கை மரத்தை* அதிகம் வளர்ப்பதினால் தமிழ்நாட்டின் பயோ எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடையலாம். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை சமாளிக்க புங்கை மரத்தை அதிக அளவில் வளர்த்து புங்கை எண்ணெய் தயாரிப்பது ஒரு மாற்றாக அமையும் அதே நேரத்தில், மழையையும் பெற்றுத்தரும் போன்ற தகவல் தமிழ்நாடு அரசு அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்று.


*ஒரு அரசு, ஒரு வேம்பு, ஒரு ஆல், பத்து புளி, முக்கூட்டாக வில்வம், விளா, நெல்லி* அருகருகே நட்டுக் கூடவே *ஐந்து மாமரங்களையும்* நடுவோர் நரகத்துக்குப் போக மாட்டார்கள் என்று விருஷ ஆயுர்வேதம் சுட்டுகிறதாம். 

அந்தக் காலத்தில் இவை போன்ற *சுலோகங்கள் மூலமாகவே சூழலியலைப் போற்றி வளர்த்து இருக்கிறார்கள்* என்று இந்த நூலைப் படிக்கும் பொழுது தெரிகிறது. *சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நாம் வாழும் சூழலே* என்பதையும் நம் வாரிசுகளின் நன்மைக்காகவே இந்த பூமியை நாம் விட்டுச் செல்கிறோம் என்ற உண்மையையும் அவை உணர்த்துகின்றன. மரம் வளர்ப்பதினால் சொர்க்கத்தையும் நம் வாரிசுகளை மரமில்லாத நீரில்லாத மாசடைந்த நரகங்களில் இருந்தும் காக்கிறோம். *தில்லை யம்பலமான சிதம்பரத்தின் தல விருட்சம் தில்லை* என்னும் மரம். இன்று அம்பலத்தில் நடராஜர் மட்டுமே ஆடுகிறார், ஆனால் தில்லை மரங்கள் மட்டும் அம்பேல் ஆகிவிட்டது. மறைந்து விட்டது. *தில்லை மரம் ஒரு பாலுணர்வு ஊக்கி* மரம் என்றும் அவற்றை *அலையாற்றி மரங்களாக கடற்கரைகளில் வளர்த்தால் அவை சுனாமி தடுப்பாகவும் எரிசக்தி அளிக்கும் வளங்களாகவும் அமையும்* என்கிறார். *செஞ்சந்தன மரம்* அணுக்கதிர் வீச்சைத் தடுக்க வல்லது. கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகளில் ஒரு பாதுகாப்பிற்காக செஞ்சந்தன மரத்தை அதிகம் நடலாம். 

நாம் அதிகம் அறிந்திராத கண்டிராத மரங்களான *மருதம், சேராங்கொட்டை, செம்மந்தாரை, தான்றி மரம், வெப்பாலை, வன்னி, வாதநாராயணம், கடம்பு, புன்னை, நொச்சி, வேள்வேல், தழுதாழை, ஆனைப்புளி, பதிமுகம், மகோகனி, சிறுநாகப்பூ, தோத்தாங் கொட்டை, எட்டி, இயல்வாகை* ஆகிய அரிய வகை மரங்களின் 

மருத்துவ, சுற்றுச் சூழல் முக்கியத் துவங்களை அறிந்த நாம் அவற்றை  அதிக அளவில் வளர்த்து மீட்டெடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது.


சில மரங்களை பொறுத்து

அதன் தன்மையை சுருக்கமாக அறியலாம்.


*நெல்லி* - இந்தியாவின் எதிர்காலம்,


*மருதம்* - இதய நோய் நீக்கி,


*வெப்பாலை* -பல நோய் நிவாரணி,


*முருங்கை* - தாது புஷ்டி மரம்,


*வேள்வேல்* - மேக நிவாரணி,


*கொய்யா* - ஏழைகளின் ஆப்பிள்,


*கருங்காலி* - கருப்பு வைரம்


*தொகுப்பு: வாழ்வு தரும் மரங்கள்*

 

இப்படி நமக்கு வாழ்வு

தரும் மரங்களைப் படித்து, அறிந்து கொள்வதோடு நின்று விடாமல் *நம் பாரம்பரிய மரங்களை* வளர்த்து பாதுகாப்பதும் நம் ஒவ்வொருவர் கடமையுமாகும்.


*இனி ஒரு விதி செய்வோம். அதில் எங்கும் மரம் வளர்ப்போம்.*

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி