விளாம்பழ பயன்

 விளாம்பழம்...


யார் யாருக்கெல்லாம் நரம்பு தளர்ச்சி பித்தம்,கால்சியம் குறைபாடு,குறிப்பாக மாதவிடாய் குறைபாடுகள் தலைமுடியில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வறண்ட கூந்தல்,முகத்தில் ஏற்படும் வறட்சி உள்ளவர்கள் அனைவரும் எடுத்து கொள்ள வேண்டிய பழம் "விளாம்பழம்".


பித்தம் சம்மந்தமான உடல் சூட்டினால் ஏற்படும் குறைபாட்டை நீக்க விளாம்பழம் மிகச்சிறந்த ஒன்று ஒரு பழத்தை ஒருவர் மட்டுமே சாப்பிடவேண்டும்.


 ஏனென்றால் இவற்றில் உள்ள ஏதோ ஒரே ஒரு விதைக்கு மட்டுமே இந்த பண்பு உண்டு என்பதால் ஒரு பழத்தை ஒருவரே சாப்பிட வேண்டும் என்கிற சொல்லாடல் உண்டு. 


இதை அறிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.


இதன் சதைகளை எடுத்து பனைவெல்லம் சேர்ந்து பனியில் வைத்து காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சியும் குணமாகும் இதன் மூலம் உடல் வலிமை பெரும் பழங்களில் விளாம்பழம் முதன்மையானது.....


பல் எலும்பு சதைகள் போன்ற உடல் நல குறைபாடுகள் உடையவர்களுக்கு வெளாம்பழம் மிகச்சிறந்த பழம் இவற்றில் கால்சியம் விட்டமின் பி12 அதிகம்.


 மேலும் மாதவிடாய் கோளாறுகள் அதிஉதிரபோக்கு வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதன் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் இருக்கும்.


 ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது மட்டுமல்லாமல் பாம்புகடியின் வீரியத்தை குறைக்க வல்லது இது அகத்தியர் குணபாடத்தில் கனிகளிலேயே முதன்மையானது விளாம்பழம் என்பதையும் நோக்குவோம். 


பெண்களுக்கு மார்பகம் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்ற குறிப்பையும் கவனிப்போம் .


யானைகள் மிகவும் விரும்பும் பழம் விளாம்பழம் இதை சாப்பிடும் போது உள்ளே உள்ள சதைகளை மட்டுமே கிரகித்து கொண்டு ஓடு மட்டுமே சாணத்தில் இருக்கும்.


 அதை உடைத்து பார்த்தால் ஏதோ சாம்பல் மாதிரி இருக்கும் இதை பார்த்தவர்கள் யாராவது உண்டு என்றால் யானை சாணியில் இருக்கும் விளாம்பழத்தின் ஓட்டின் புகைப்படத்தை இணைக்கவும்.


பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் முக சுருக்கம் வறட்சிக்கும் முக பொலிவிற்கு இதை விட சிறந்த மருந்தோ கிரீம்களோ கிடையாது அனுபவத்தில் பலபேர் உணர்ந்தது. 


தேவையான அளவு விளாம்பழம் விழுது அத்துடன் பசும்பால் அல்லது மோரை கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி ஒருவாரம் தொடர்ந்து செய்து வந்தால் இழந்த பொலிவு மீண்டு முகத்தில் இளமை ததும்பும் ...


மேலும் குளியல் பொடியாக இதன் ஓட்டை பயன்படுத்தும் போது முட்டி கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும் தோல் தடிப்பு காணமல் போகும் ....


கிராமங்களில் காமத்திற்காக அதிக பெண்களை தேடும் நபருக்கு அவருக்கே தெரியாமல் அவரது மனைவியோ அம்மாவோ இந்த ஓட்டின் பவுடரை பொடி ஆக்கி உணவில் கலந்து ஆண்களுக்கு கொடுக்க விந்தணு நீர்த்து போவது மட்டுமல்ல காம உணர்ச்சி முற்றிலும் மட்டுப்படும் "விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு"இது தான் பொருள் மேலே உள்ள கூற்றுக்கு.


 இதன் சூட்சமத்தை வரும் காலங்களில் உணரலாம் .


மேலும் வரப்புகளில் மரம் வளர்க்க விரும்புவர்கள் இந்த மரத்தை வளர்க்க முயலுங்கள் இதில் மிகப்பெரிய வியாபாரம் ஒளிந்து இருக்கிறது.


 இதன் ஒரு பழம் பல டாலர் கொடுத்து வாங்கும் காலத்தை கூடிய விரைவில் உருவாக்குவோம் .....

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி