முதுகு முடக்கு வாதம்

 🇨🇭#முதுகெலும்பு_முடக்கு_வாதம்

#எனும்………


🇨🇭#தனுர்வாதம்_பற்றி

#தெரிந்துகொள்ளுங்கள்……❗❗❗


♐ #அதற்கான_மருத்துவமும்……❗❓


👉 முதுகு தண்டு ஜவ்வு விலகலை 

ஆங்கிலத்தில் #டிஸ்க்_ப்ரோலாப்ஸ்  (அ)  #ஸ்போன்டிலோலிஸ்தேசிஸ் என்று சொல்லுவார்கள். 


👉 33 எலும்புகள் கூடிய பகுதியை தான் முதுகு தண்டு என அறிகின்றோம்.


🉐 ஜவ்வு விலகக் கூடிய பொதுவான இடங்கள் ❓


👉CERVICAL (செர்விகல் ) எனும் கழுத்து பகுதி


👉 தொரசிக் (தொராசிக் ) எனும் நெஞ்சுக் கூட்டுப்  பகுதி


👉 LUMBAR (லம்பார்) எனும் கீழ் முதுகு (அ) இடுப்புப் பகுதி.


ஆரம்பிக்கும் இந்த நோய் முதுகெலும்பில் நடுவிலே இருக்கும் மிக மெல்லிய சவ்வு போன்ற #Disc எனப்படும் தட்டுப்போன்ற #Shock_Observer போல வேலை செய்யும் அமைப்பை கெடுத்து தடிமனாகி 

Disc -  சவ்வு கடினமாகி ஒன்று மேல் ஒட்டிக்கொண்டு திரும்ப இயலாத அளவுக்கு சிரமத்தை கொடுக்கும் பயங்கரமான வியாதி இது.


முதுகெலும்பில் உள்ள மூட்டுகள் 

ஒன்றோடு#இணைந்து_இறுகிப்

#போவதால், இந்த நோயாளிகளால் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாது. 


முதலில் முதுகுவலியில் தொடங்கும். 

கவனிக்காமல் விட்டுவிட்டால் அது கழுத்துவரை பரவும். 


அதோடு கால்களின் மூட்டுகளிலும் வலி உண்டாகும். #கூனல்_விழும். 

இந்த முடக்கு வாதம் மரபணு உள்ளிட்ட காரணங்களால் உண்டாகும். 

முற்றிய நிலையில் #கண்களையும் பாதிக்கலாம்.


பலவீனம் சக்தி இழப்பீட்டினாலும் ஏற்படும் மூட்டுவலி,அளவுக்கு மீறிய உடற்பயிற்சி, அளவுக்கு மீறிய விந்து இழப்பு (புணர்ச்சி ) மூட்டில் உள்ள பசைகளை குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 


இதுவே முற்றிய நிலையான, #ஆங்கலோசின்_ஸ்பாண்டிலைடிஸ்

#Ankylosing_Spondylitis_நோய்யும்……

எனும் நிலை ஆகும். 


⭕ ஜவ்வு விலகலினால் ஏற்படக்கொடிய அறிகுறிகள்❓

                  

▶ மிதமான (அ) மிகுதியான கழுத்து (அ) முதுகு வலி


▶ சில சமயம் முதுகு வேதனை தவிர்த்த முழங்கால் (அ)                    கணுக்கால் (அ) பாதத்தில் வேதனை


▶ உணர்ச்சி சம்பந்தமான குறிகள் , அதாவது மரத்தல், எரிச்சல், தசைத்தளர்ச்சி  முதலானவை 


▶ தசைப்பிடிப்பு, 


▶ முதுகிலிருந்து கால் பாதம் வரை மிகுந்த வேதனை


▶ நடக்கையில் முழங்கால் பலம் இல்லாது மடங்கி விடுவது போன்ற உணர்வு


▶ தலை சுற்றல் , நெஞ்சு படபடப்பு , மார் வலி , தோள் பட்டை வலி , முழங்கை மற்றும் கை விரல்கள் வலி போன்றவை கழுத்தில் ஜவ்வு விலகும் பட்சத்தில் ஏற்படக்கூடிய குறிகள் 


▶ விலா எழும்பில் வலி அல்லது பிடிப்பு ,இடுப்பு பிடிப்பு போன்றவை நெஞ்சுக் கூட்டுப்  பகுதியில் ஜவ்வு விலகும் பட்சத்தில் ஏற்படக்கூடிய குறிகள்  .


⭕ அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ்

முதுகெலும்பு அழற்சி நோய்  என்றால் என்ன❓


முள்ளந்தண்டு அழற்சி என்பது முதுகெலும்பு சம்பந்தமான ஒரு கீழ் வாதம் ஆகும். 


இதனால் முதுகெலும்புக்கு இடையே அழற்சி ஏற்படும் மற்றும் முதுகெலும்பு மற்றும் முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டுகளிலும், இடுப்பு, 

தசைநார்களிளும் காணப்படும்.


மனிதர்களிடையே மிகவும் பொதுவானது மற்றும் கடுமையானதும் ஆகும். எப்பொழுதாவது இது மற்ற மூட்டுகளிலும் ஏற்படலாம்.


முதுகெலும்பு வாதத்தின் (spondyloarthritis) ஒருவடிவமான இந்நோய், நாள்பட்ட, வீக்கம் நிறைந்த வாதநோயாகும்.


நோய் எதிர்ப்பு சக்தியின் எதிர்ப்பு தாக்குதல் இந்நோயில் முக்கியப் பங்குவகிப்பதாகக் கருதப்படுகின்றது.


இந்நோயால் தாக்கமடைபவர்கள் பெரும்பாலும் இளவயது (18–30 வயதுக்கு இடைப்பட்டவர்கள்) ஆண்களே. இந்நோய்க்கான அறிகுறிகள் முதலில் தோன்றியவுடன், 

முதுகெலும்பின் அடிப்பகுதியில் கடுமையான வலியும் விறைத்த நிலையும் தோன்றும். 


சில நேரங்களில் முதுகெலும்பு முழுமையும் அவ்வாறு இருக்கும். பெரும்பாலும் வலியானது, ஒரு புட்டத்திலும், பின் தொடையில் பின் இடுப்பு மூட்டிலும் காணப்படும்.


பெண்களை விட ஆண்களே அதிக அளவில்  பாதிப்படைகின்றனர். அதேபோல, பெண்களை விட ஆண்களிடம் இந்நோய் அதிக வலி நிறைந்ததாகவும், நீண்டகாலத்துக்கும் காணப்படுகிறது. 


பெண்கள் பூப்பெய்துவதற்கு 

முன்பான நிலைகளில், வலியும் வீக்கமும் அக்குள் மற்றும் பாதம் போன்ற இடங்களில் ஏற்படக்கூடும். இந்த இடங்களில் வலியுடைய குதிகால் எலும்பைப்பற்றிய வாதம் போன்றவை தோன்றும்.


இந்த நிலை 18 வயதுக்கு முன்பாகவே ஏற்பட்டால், பெரிய எலும்பு மூட்டுகளில் 

வலியும் வீக்கமும் ஏற்படும், குறிப்பாக முட்டியில் அதிக வீக்கமும், வலியும் காணப்படும். 


40% நோயாளிகளிடையே, கண் அழற்சியுடன் [விழித்திரையழற்சி (Iritis) மற்றும் கருவிழிப்படல அழற்சி (uveitis)] தொடர்புடையதாக உள்ளது. 


⏩➡ #இதனால்…… 


கண் சிவந்துபோதல், 


கண் வலி, 


கண்பார்வை இழப்பு, 


ஆகியவை ஏற்படுகின்றன. மற்றொரு பொதுவான அறிகுறியானது, பொதுவான………


▶சோர்வு 


▶சிலநேரங்களில் மனக்குழப்பம் 


போன்றவையும் ஆகும். அரிதாக, பெருந்தமனி அழற்சி (aortitis), நுரையீரல்முனை இழைமப்பெருக்கம் (apical lung fibrosis) மற்றும் பல நரம்பு இழைகளின் வேர்பகுதிகளில் தளர்வு (ectasia) ஆகியவையும் தோன்றக்கூடும். 


எல்லா தண்டுவட எலும்பு மூட்டு நோயைப் போலவே, நகங்கள் வீக்கமுற்று காணப்படுவதும் தோன்றக்கூடும்.


⭕ #காரணங்கள்_யாவை❓


👉இது ஒரு #autoimmune_disease. அதாவது வீட்டில் வளர்க்கும் நாய் திருடனைக் கடிக்காமல்……

தன்னை வளர்ப்பவரையே கடிப்பது போன்றது. 


உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக உள்ள ஒரு திசுவை எதிர்க்கும் மோசமான நிலை இது. இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். ஆனால், நடுத்தர வயதில் அதிகம் வரும். ஆண்களைவிடப் பெண்களை இந்த நோய் அதிகமாகத் தாக்கும். 


♦ முகுதுத் தண்டுவாதம் வர முக்கிய காரணம் மரபியல். HLA/ B27 E என்ற காரணிதான் முகுதுத் தண்டுவாதத்தை உண்டாக்குகிறது. 


👉பெற்றோருக்கு முதுகுத்தண்டு வாதம் இருப்பின், குழந்தைகளையும் அது பாதிக்கும். 


👉சொரியாசிஸ் என்ற சரும நோய் மற்றும் குடல் அழற்சி நோய் இருந்தாலும் இது வரலாம்.


👉தன் உடல் சக்திக்கு மீறிய செயல்களை செய்தல் (உதாரணம் - மிகுந்த சிரமத்துடன் படிக்கட்டுகளில் தண்ணீரை வாளியில் பிடித்து எடுத்துச் செல்லுதல்)


👉அளவுக்கு மீறிய உடற்பயிற்சி.


👉சிற்றின்பத்தில் அதிக ஆர்வத்துடன் கூடிய செயல்பாடு.


👉மிகவும் உயர்ந்த இடத்திலிருந்து கீழே விழுதல்.


👉ஓடுதல், உடலுறுப்புகளை மிகுதியாகத் துன்பறுத்துதல்.


👉கீழே விழுந்து அடிபடுதல்


👉பெருங்குழி முதலியவற்றைத் தாண்டுதல், குதித்துக் கொண்டே நடத்தல்


👉அதிக தூரம் நீந்துதல், இரவு கண் விழித்தல், பளு சுமத்தல், நாற்காலியில் கால்மேல் காலைப் போட்டு அமர்தல்,


👉இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் வெகுதூரம் பயணம் செய்தல், மிகுந்த தூரம் நடத்தல்.


👉காரம், துவர்ப்பு, கசப்புச்சுவையுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுதல்


👉எண்ணெய்ப் பசையில்லாத, எளிதில் ஜீரணமாகக் கூடிய, குளுமையான வீரியம் கொண்ட பொருள்களை உணவாக சாப்பிடுதல்,


👉உலர்ந்த காய்கறிகள், வரகு என்னும் அரிசி, காட்டுத்திணை, பயறு, சிறுபயறு, துவரம்பருப்பு, பட்டாணி, மொச்சை போன்றவற்றை அதிகமாக சாப்பிடுதல்.


👉பட்டினி கிடத்தல், அதிகமாகவோ, அளவில் குறைந்தோ, குறிப்பிட்ட நேரத்திலல்லாமலோ உணவை உண்பது, உடலிலிருந்து வெளியேறும் காற்று, சிறுநீர், மலம், விந்து, வாந்தி, தும்மல், ஏப்பம் துக்கத்தால் தோன்றும் கண்ணீர் முதலியவற்றை வெளியேற்றாமல் அடக்குதல் முதலிய காரணங்களால் வாதம் சீற்றமடைந்து தண்டு வடத்தை பாதிக்கலாம்.


⏩➡ முகுதுத் தண்டு வாதம்……


◀கால் முட்டி, 


◀குதிகால், 


◀முகுதுத் தண்டு மட்டுமின்றி 


◀கண்கள், 


◀நுரையீரல், 


◀சிறுநீரகம் 


போன்ற உறுப்புகளையும் பாதிக்கும். முகுதுத்தண்டு வாதத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் கட்டுப்படுத்துவது எளிது. 


விளா, பிட்டம், இடுப்பு,பின் முதுகு,தோள்பட்டை மற்றும் குதிகால் ஆகியவைகளில் மிகுந்த வலி ஏற்படுதல் மற்றும் விறைப்பு தன்மை.


முதுகெலும்பின் இயக்கம் ஒரு எல்லைக்குட்பட்டது. ஆனால் இது அந்த இயக்கத்தினையே மாற்றுகிறது.

காய்ச்சல் மற்றும் சோர்வு.

கண் அல்லது குடலில் அழற்சி.

அரிதாக இதில் இதயம் அல்லது நுரையீரல் சம்பந்தப்படும்.


தசை, தோல்,கண்கள், சிறுநீர்ப்பை மற்றும் பிறப்புறுப்புகளில் வலி மற்றும் அழற்சி ஏற்படும்.


குதிகால் வலி, விழித்தசை நார் மற்றும் முழங்கால்களில் வீக்கம் ஏற்படும்.


💉 #இதற்கான_இரத்த_பரிசோதனைகள்💉


1, HLA-B 27 E

( Ankylosing Spondylosis )


2, CBC 

     Esr 


3, IgE


4, Crp


5, Ra Factor


6, Anti streptolysin O (ASO)


7, Anti CCP antibody


8, eGFR

[ Estimation of Glomerular filtration rate ]


9,  Creatinine   

     Urea

     Uric Acid


10,  Urine for Microalbumin


11, L F T

 [ Liver Function Tests ]


🇨🇭 #முதுகு_வலியைத்_தடுக்க…❓


1.நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலைசெய்ய வேண்டும்; கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது கீழ் முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.


2.சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்வது முதுகு வலி வராமல் தடுக்கும்.

3.காற்றடைத்த  பானங்கள், குளிர்பானங்கள், மென்பானங்கள், கோக் கலந்த பானங்

கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பாஸ்போரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். இது கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்துவிடும். எனவே, இவற்றை அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.


4.மேல் முதுகில் வலி ஏற்பட்டால் 

ஐஸ் ஒத்தடம் கொடுத்து, மூச்சுப்பயிற்சிகளைச் செய்தால் போதும். வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது, சுளுக்கு எடுப்பது, பேண்டேஜ் கட்டுவது, கண்ட கண்ட களிம்புளைப் போட்டு தேய்ப்பதை எல்லாம் செய்தால் பாதிப்பு அதிகமாகி வலியும் கடுமையாகிவிடும்.


5.முதுகில் வலி உள்ளவர்கள் கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்கக் கூடாது. இவர்கள் கட்டாந்தரையில்தான் படுக்க வேண்டும்; கட்டை பெஞ்சில்தான் படுக்க வேண்டும் என்பதில்லை. சரியான மெத்தையில் பக்கவாட்டில், சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.


6.பலமாகத் தும்மக்கூடாது. மலம் கழிக்கும்போது அதிகமாக முக்கக்கூடாது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


7.அதிக எடையைத் தூக்கக்கூடாது. அப்படியே தூக்கவேண்டியது இருந்தால் எடையைத் தூக்கும்போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க

வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக்கொள்வது இன்னும் நல்லது.


8.உடலை அதிகமாக விரியச் செய்தல், வளைத்தல் கூடாது. திடீரெனத் திரும்புதல் கூடாது.


9.குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.


10.இந்தியக் கழிப்பறைக்குப் பதிலாக மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் நல்லது.


11.ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியக்கூடாது.


12.அருகில் உள்ள இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வதைவிட நடந்தே செல்லுங்கள்.


13.    நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.


14.ஏற்கனவே முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது பஸ்ஸின் நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்துகொள்வது நல்லது.


15.  பருமனைத் தவிர்க்க வேண்டும்.


16.புகை, மது, போதை மாத்திரைகள் கூடாது.


17.மன அழுத்தம் தவிருங்கள்.


🇨🇭 #வீட்டு_கை_வைத்தியம்❓


⭕ உடல் நடுக்கம் & தலை சுற்றல் 


👉பொருட்கள்❓


அமுக்கிரா        -100 கிராம்


சுக்குத்தூள்       -100 கிராம் 


தணியாத்தூள்  - 75 கிராம்


சீரகத்தூள்      - 50 கிராம்


நெல்லித்தூள்   -25 கிராம்


👉சாப்பிடும் முறை❓


 மேலே உள்ள அனைத்தையும் கலந்து கண்ணாடி புட்டியில் அடைக்கவும்.இரவு  ஒரு செப்பு குவளை (டம்ளர்) சுடுநீரி ஊற்றி ஒரு தேக்கரண்டி அளவு கலந்து வைக்கவும்.காலையில் எழுந்து பல்துலக்கிய பிறகு நீரைமட்டும் வடிகட்டி குடித்து வர குணம் காணும்.


⭕ #எலும்பு_உறுதிக்கு_உதவும் 

#வெள்ளரி_எள்_சாலட்


👉தேவையானவை❓


வெள்ளரி - 2 கப் 


எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் 


சீரகம் – ½ டேபிள்ஸ்பூன் 


பச்சைமிளகாய் - 1


பெருங்காயம் – ¼ டேபிள்ஸ்பூன் 


உப்பு - தேவைக்கு


எள் – 2 டேபிள்ஸ்பூன் 


உடைத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன் 


சிறியதாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன். 


⏩ செய்முறை❓


வாணலியில் எண்ணெயை ஊற்றி சீரகம், பெருங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து, அடுப்பை இளம் தீயில் வைத்து வதக்கவும். பிறகு அதில் வெள்ளரி மற்றும் உப்பு சேர்க்கவும். கடைசியாக எள், உடைத்த வேர்க்கடலை, சிறியதாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து, கலந்து பரிமாறவும். 


#முடக்கத்தான்_கீரை_சூப்


💢 தேவையானவை❓


வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் முடக்கத்தான் கீரை 2 கைப்பிடி அளவு,


நசுக்கிய பூண்டு  2 பற்கள்


சின்ன வெங்காயம், தக்காளி 1


மிளகுத்தூள் 

சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு


வெண்ணெய்  ஒரு டீஸ்பூன்.  


👉 செய்முறை❓


கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, முடக்கத்தான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, 4 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.


👉 பலன்கள்❓


வாயுத் தொல்லைக்கு அருமருந்து முடக்கத்தான் சூப். 


வாயுப் பொருமல், தொப்பை, அக்கி, வயிற்றுப்புழு, மசக்கை, பசி, ஏப்பம் மறைந்து உடலுக்கு தெம்பைக் கூட்டும். குடல் புழுக்கள் அழியும். மேல் வாய்வுப் பிடிப்பு, இடுப்பு வாய்வுப் பிடிப்பு விலகும். கை, கால், கழுத்து பிடரி வலி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். முடக்குவாதம், பக்கவாதம் இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டுவந்தால் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


🈵 #அனைத்து_வாத_நோய்_வலிகளும் #குணமாகும்


👉 மருந்து செய்யும் முறை❓


வில்வம் வேர்   ................  ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம் )


பாதிரி வேர்  ................  ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம் )


பெருவாகை வேர்  ................  ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம் )


குமிழ் வேர்  ................  ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம் )


தழுதாழை வேர்  ................  ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம் )


ஆகிய ஐந்து மரங்களின் வேர்களை கொடுக்கப் பட்டிருக்கும் அளவுகளின்படி 

ஒரு லிட்டர் தண்ணீரில் அனைத்துப் பொருட்களையும் போட்டு சிறுதீயில் காய்ச்சி முன்னூறு மில்லி கசாயமாக்கி இறக்கி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் உணவுக்கு அரைமணி நேரத்துக்கு முன் வேளைக்கு நூறு மில்லி குடித்து வர குணம் காணலாம் 

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேன் கலந்தும் குடிக்கலாம் 


மருந்தாக எண்ணாமல் டீ காப்பி குடிப்பது போல தினமும் குடித்து வர 

உடலின் ஆரோக்கியமும் மூட்டுகளின் ஆரோக்கியமும் மேம்பட்டு குறிப்பாக வலிகளில் இருந்து 

விடுபட முடியும்.


படுக்கையில் இருந்து  எழும்போது கைகால்களை மடக்கி நீட்ட முடியாத கொடுமையான நிலை கடுமையான வலி வேதனை,மூட்டுகளில் உள்ள வலி வீக்கம்,முடக்கு வாதம்,மூட்டுவலி 

முதுகு தண்டு நரம்புகளில் ஏற்படும் வலிகள்,பசி இன்மை,சுவை இன்மை 

உடலில் ஏற்படும் கடுமையான சோர்வு 

நரம்புகளின் செயல் குறைபாடு செயலிழப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும். 


குடலைப் பலப்படுத்தி பெருங்குடலில் உள்ள வாதத்தை குறைத்து மலசிக்கல் நோய் படிப்படியாகக் குணமாகும் 

தேவையற்ற கழிவுகள் நீங்கும்.


🔴 கழுத்து எலும்பு தேய்மானத்தையும் 

(Cervical Spondalytis), இடுப்பு எலும்பு தேய்மானத்தையும் (Lumbar Spondalytis) நிரந்தரமாக சரி செய்ய…… 


பிரண்டை உப்பை தினமும் காலை மாலை இருவேளை 300mg அளவிற்கு 2 முதல் 3 

மாத காலத்திற்கு சாப்பிடும் போது, உடன் மூங்கில் அரிசியும் முருங்கை கீரையும் சேர்த்து கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால்…… 


கழுத்து தண்டுவட எலும்பு தேய்மான பிரச்சினைகள், இடுப்பு கழுத்து தண்டுவட எலும்பு தேய்மான பிரச்சினைகள் அனைத்தும் குணமாகும்.


🉐👉 தேவையானவைகள்❓


வில்வ இலையை அரைத்து விழுது ஆரஞ்சிப்பழ அளவு 

எள்ளெண்ணை ( நல்லெண்ணெய்)  அரை லிட்டர்


👉 செய்முறை❓


வில்வ இலைகளை சுத்தமானதாகத் தேர்ந்தெடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து நைய அரைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் ஓரு பாத்திரத்தில் நல்லெண்ணையை  விட்டு தில் வில்வஇலை விழுதைப்போட்டு 

எண்ணையுடன் நன்றாக உறவாகும்படி கலந்து கொள்ளவும் பாத்திரத்தை அடுப்பேற்றி மிதமான தீயாக எரித்து இலை நீர் சுண்டிய பிறகு பக்குவமான பதத்தில் இறக்கி வடிகட்டிக் கொண்டு புட்டியில் அடைத்து கொள்ளவும்  


💢 உபயோகம்❓


விடியற்காலையில் சுமார் 5 -6 மணிக்கு இந்த எண்ணையில் தேவையான அளவு எடுத்து தலைக்குத் தேய்த்துக் கொண்டு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளிக்கவும் தலையைத் துவட்டியவுடன் ரசத்துடன் சாதம் சாப்பிடவும் இவ்வாறு வாரம் இரு முறை குளிக்கவும் 5,  6,  முறை குளித்தால் போதும். தலை வலி கழுத்து வலி இசிவு பிடரிவலி தீரும்.


💊 நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள்.


💊  இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பாலும்  நீரும்  சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி, பிடரி வலி காணாமல் போகும்.


💊 கழுத்து மற்று பிடரி வலியை போக்க உடற்பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். கை  கால்களை நீட்டி செய்யும் பயிற்சிகள் கழுத்து பகுதியை நெகிழ்வுத்தன்மையோடு வைக்க உதவும். இதனால் கழுத்து பகுதி வலிமை அடையும்.


💊 தலையை முன்னும் பின்னும் சில நிமிடங்கள் தொடர்ந்து அசைக்கவும். பிறகு இரண்டு பக்கமும் மாறி மாறி தலையை திருப்பவும். மெதுவாக இந்த பயிற்சியை செய்ய வேண்டும் 20 முறை தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொள்ளவும். சிறிது நேரத்தில் உங்கள் கழுத்து மற்றும் பிடரி வலி பறந்து விடும்.


⭕ இதற்கு மேலும் பாதிக்கப்பட்ட இடுப்பு, கழுத்து தண்டுவட எலும்பு தேய்மான பிரச்சினைகள் உள்ள பகுதிகளில்…… 


👉செம்மண் புற்று மண்ணை பக்குவப்படுத்தி எடுத்து வந்து தினசரி ஒன்று அல்லது இரண்டு வேளை தண்ணீருடனோ அல்லது இஞ்சி சாற்றுடனோ கலந்து பசை போல ஆக்கி பற்று போட்டு வர விரைவில் குணம் தெரியும்.


💊 வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 3 பல் பூண்டு, திப்பிலியுடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் வாத நோய் வலி குறையும்.


💊 முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து அவித்துத் தொடர்ந்து 15 நாட்களுக்குச் சாப்பிட்டால்  

வாத நோய் வலி குணமாகும்.


💊 பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்துக் காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி போன்ற பிரச்சினைகள் குறையும்.


💊 முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு பல் பூண்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் 

வாத நோய் வலி குறையும்.


💊 பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை மூன்றையும் சம அளவு எடுத்துச் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குறையும்.


💊  கருஊமத்தை இலை அல்லது சாதாரண ஊமத்தையை இடித்துப் பிழிந்த சாறு 200 IL. 


நல்லெண்ணெய் 400 IL. ஆகிய இரண்டையும் அடுப்பிலேற்றிச்சாறு சுண்டிக் கசண்டாகும் வரை காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். 


சற்று ஆறியதும் கட்டிச்சூடம் 10 கிராம் தூளாக்கிப் போட்டு கலக்கிவிடவும். 


இந்தத் தைலத்தை வலியுள்ள பகுதிகளில் தடவிக் கோதுமை தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுக்கவும். 


தினம் மூன்று வேளை ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒத்தடம் கொடுத்த பின் ஏற்படும் வியர்வையையும் எண்ணெய்ப் பிசுக்கையும் துணியால் துடைத்துவிட்டு ஓய்வு தரவும். பிறகு மெல்லிய பூச்சாக இம் மருந்தை தடவி விடுவதும் நல்லதே. 


💊 ஓமம் 400 கிராம். நல்லெண்ணெய் 400 IL. ,  4 லிட்டர் தண்ணீரில் கஷாயமிட்டு 1 லிட்டர் மிதமாகக் காய்ச்சி முன்போல எண்ணெய்யுடன் காய்ச்சி எடுத்துக் கற்பூரம் கலந்து கொள்ளவும். 


முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.


சுத்தம் செய்தபின் தண்­ர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸ’யில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.

நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.


தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.


⭕ #கழுத்து_இடுப்பு_வலி_நீங்க ...⭕ 


நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் குறுக்கு வலி குணமாகும்.


நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும்.


⏩ சாப்பிடும் விதம்


தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.


எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால் குணமாகும்.


பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர வேண்டும். வலிக்கும் இடத்தில் பச்சை உருளைக் கிழங்கை அரைத்துப் பற்று போடவேண்டும்.


வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.


👉வேறு எந்த மருந்துகள் சாப்பிட்டு வந்தாலும் மேலே கூறிய மருந்துகளையும் சேர்த்து சாப்பிட்டு வரவும் நோயின் பாதிப்புகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.


🔴 #பத்தியம்


❌ செய்ய கூடாதவை……


படுத்துக்கொண்டே டி.வி. பார்க்கக்கூடாது. கடுமையான வேலைகளை தொடர்ந்து செய்யக்கூடாது. வண்டி ஓட்டுதல், வீட்டு வேலை தொடர்ந்து மணிக்கணக்கில் செய்தல், கழுத்துவலியினை அதிகப்படுத்தும்.


உணவு முறைகளில் கவனம் இருத்தல் வேண்டும். பித்த உணவுகளையும் எண்ணெய் வகை உணவுகளையும் தவிர்க்க வேண்டும் மன அழுத்தத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.


❌  👉 மருந்து உட்கொள்ளும் காலங்களில் உடல் உறவை தவிர்க்க வேண்டும். 


👉 குளிர்ந்த நீர், பனி, மழை, குளிர், காற்று இவற்றில் பிரவேசிக்கக் கூடாது. 


👉 அகத்திக்கீரை, சிறுகீரை, பாகற்காய், தயிர், தட்டை, மொச்சை, முற்றிய வாழைக்காய், கொத்தவரங்காய், கசப்பு, துவர்ப்பு உணவு பதார்த்தங்களையும், எண்ணெய் பலகாரங்களையும் சாப்பிடக் கூடாது.


👉 பகல் தூக்கம் கூடாது. 


👉 கடுமையான சுமை தூக்குவதோ, கடுமையான உடற் பயிற்சிகள் செய்வதோ கூடாது. 


💚  பால், நெய், தேன், வெள்ளைப்பூண்டு, மிளகு, முருங்கை பிஞ்சு ஆகியவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்வது நல்லது.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭

   👉999 437 9988 ☎ 81 4849 6869👈

 #மேலப்பாளையம்_திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி