காய்ச்சல் குணமாக

 🇨🇭#காய்ச்சல்_குணமாக_சில……❗❗

 

🇨🇭#நம்ம_வீட்டு_வைத்தியம்❓


💊மிளகு மருந்து காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.


மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம்.


இந்த மிளகு கஷாய நீரை ஆற வைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினம் தினம் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால் நலம்.

இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.


💊சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை மருந்து காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் கறிவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். அரைத்த கலவை மை போன்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் மருந்தை ஒரு சிறிய நெல்லிக்கனி அளவு எடுத்து காலையும் மாலையும் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.


💊வல்லாரை, மிளகு, துளசி மருந்து

வல்லாரை இலை, துளசி இலை மற்றும் மிளகு ஆகியவற்றை ஒரு கைப்பிடி வீதம் எடுத்துக் கொண்டு நன்கு அரைக்க வேண்டும். மை போல் அரைத்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேளைக்கு ஒரு உருண்டை வீதம் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்தச் செய்தால் காய்ச்சல் குணமாகும்.


💊துளசி, இஞ்சி மருந்து

காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.


💊பார்லி அரிசி, பால் மருந்து

காய்ச்சல் குணமாக பார்லி அரிசி வாங்கி சாதம் வைப்பது போல் தண்ணீருக்கு பதில் பாலில் வேக வைத்து கொடுக்கலாம். காய்ச்சல் அடிக்கும் போது நாவில் ருசி அவ்வளவாக இருக்காது. சாப்பாடும் சாப்பிட தோன்றாது. அந்த மாதிரி சமயங்களில் இந்த பார்லி பால் சாதம் கை குடுக்கும்.


💊சாதாரண ஜூரத்திற்கு

இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.


🇨🇭காய்ச்சல் என்ற நிலை 💊 ஆரம்பித்தவுடனேயே………


மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்து விட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.


கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.


எந்த விதமான காய்ச்சலும் குணமாக

வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.


💊சீரக தண்ணீர்


சீரகத்தை தண்ணீரில் போட்டு, கொதிக்க விட்டு, ஆற வைத்து பருக வேண்டும். சீரக தண்ணீர் நம் உடம்பில் நீர் சத்துக்கள் குறையாமல் உடம்பை பாதுகாக்கிறது. 


💊உலர் திராட்சை (dry graphs)


இதை தினமும் நான்கு வேலை ( காலை, மதியம், மாலை, இரவு )

என 10 திராட்சை வீதம் வாயில் போட்டு சப்பி ,10 நிமிடம் முதல் 20 நிமிடம்  வரை உமிழ் நீரில் ஊர வைத்து  பிறகு சாப்பிடவும்  .


இவற்றை செய்தால் ,தட்டணுக்களின் எண்ணிக்கை குறையாமல் , நம் உடம்பிற்கு தேவையான தட்டணுக்களை ,உலர் திராட்சை தந்து  உடம்பை பாதுகாத்து டெங்கு வைரஸிலிருந்து நம்மை காக்கிறது.

இவ்வாறு செய்தால் நம் உடல் ,எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். காய்ச்சல் வராதவர்களும் பயன்படுத்தி வருமுன் காக்கலாம்.


🇨🇭காய்ச்சல் நீங்க……🇨🇭


கோரைக் கிழங்கு


கோரைக் கிழங்கு – 50 கிராம்


உலர்ந்த மாவிலை – 50 கிராம்


மாம்பட்டை – 50 கிராம்


அதிவிடயம் – 20 கிராம்


இலவம் பிசின் – 20 கிராம்


     ஆகியவற்றை எடுத்து நன்கு காயவைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, கால் லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்துச் சாப்பிட, காய்ச்சல்கள் அனைத்தும் தீரும்


💊 இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.


💊சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.


💊குளிர்காய்ச்சல்💊


நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குணமாகும்.


💊வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.


💊வல்லாரை இலை , உத்தாமணி இலை , மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து பருகினால் காய்ச்சல் குணமாகும் . 


💊வேலிப் பருத்திச் செடியின் இலையை அரைத்து இரண்டு தேக்கரண்டி சாறு எடுத்து சமஅளவு தேனுடன் கலந்து காய்ச்சல் வரும்போது கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும் . காய்ச்சல் விட்டவுடன் முதலில் தலைக்கு நீர் விடும்போது ஒமத்தை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு , பின்னர் நீர் விட்டால் ஜலதோஷம் பிடிக்காது . 


💊கோரைக்கிழங்கைக் காய்ச்சி கஷாயம் குடித்தால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும் . 


💊திருநீற்றுப்பச்சை இலையைக் கசக்கிச் சாறு பிழிந்து மூக்கில் நுகர தும்மல் வரும் . அதன்மூலம் மூளைக் காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகள் வெளியேறிவிடும் . 


💊துளசி இலை , வில்வ இலை , வேப்ப இலை , கடுக்காய் , சந்தனக்கட்டை , மிளகு , சிற்றரத்தை ஆகியவற்றை அரைத்து , வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தவும் . காய்ச்சல் வரும்போது காலை , மாலையில் 2 கரண்டித் தூளை வெந்நீரில் போட்டுக் கலக்கிக் குடித்துவரக் காய்ச்சல் குணமாகும்.


💊ஜன்னிபாத காய்ச்சல் ஏற்பட்டால் வங்காரம் , கிராம்பு இரண்டையும் கொதிக்கவைத்து , ஒரு பாலாடை அளவில் 2 துளி துளசி சாற்றைச் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாவதுடன் வயிறு உப்புசம் , காசம் ஆகியவையும் குணமாகும் . 


💊விஷ ஜுரம் வந்தால் ஒரு ரூபாய் எடையுள்ள துளசி சாற்றில் 5 மிளகைத் தூள் செய்து கலந்து சாப்பிடவும் . எண்ணெய் , புளி , மிளகாய் கூடாது . 


💊காய்ச்சல் வரும் என்று தோன்றினால் கருந்துளசி , சுக்கு , நாட்டுச் சர்க்கரை இவற்றை சம அளவு கலந்து லேகியம் போல் தயாரித்துச் சாப்பிடவும் . எண்ணெய் , புளி , மிளகாய் சேர்க்கக் கூடாது .


💊ஆடாதோடைதூதுவளை கண்டங்கத்திரி சிறுதும்பை  சித்தரத்தை முகமுசுக்கை விஷனுகிரந்திதாளிசாபத்திரி இம்பூரல் அதிமதுரம் இவைகளைசமாஅளவாககலந்து தினமும் இரண்டு கிராம் மூன்று வேலைக்கு சாப்பிட வேண்டும்.  


💊சுக்கு மிளகு திப்பிலி கொத்தமல்லி சோம்பு சிரகம்  ஓமம் பிரண்டை வெட்பாலை அரிசி  சதகுப்பைசமாஅளவாககலந்து இரண்டுகிராம்தினமும் மூன்று வேலைக்கு சாப்பிடவேண்டும்.


💊திரிபலாவை தினமும் மூன்று வேலைக்கு இரண்டு கிராம் சாப்பிட வேண்டும். 


💊நிலவேம்பு குடிநீர் கசயம் குடிக்க வேண்டும். 


💊பசித்தால் சாப்பிடுங்கள்.   

ஓய்வு எடுங்கள் சரியாகிவிடும்.


🇨🇭காய்ச்சல் வந்தால் 3 வேளையும் இதை சாப்பிடுங்கள்.❓


காய்ச்சலின் போது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த மற்றும் விரைவில் செரிமானம் அடையைக் கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.


♑ காலைஉணவு👈


காலை உணவாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜூஸ்கள், சூடான பாலில் சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து குடிக்கலாம். மேலும் பாதாம் உட்பட நட்ஸ் சாப்பிடலாம்.


♐ மதியஉணவு👈


கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை மதிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் பிரவுன் பிரட் மற்றும் வேக வைத்த முட்டை ஆகியவை சாப்பிடலாம்.


♉ இரவுஉணவு👈


காய்ச்சலாக இருக்கும் போது இரவில் குறைந்த அளவிலான உணவை சாப்பிட வேண்டும். அதுவும் மசாலா அதிகம் சேர்க்காத, சாலட், பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.


👉இதை தவிர………


காய்ச்சலின் போது அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாகுறையால் வைரஸ், பாக்டீரியா தொற்றுக்கள் எளிதில் பரவும்.


காய்ச்சல் இருக்கும் போது செயற்கை குளிர்பானங்கள், சுவையூட்டிகள் நிறைந்த உணவுகள், பாக்கெட் உணவுகள், சோடா போன்றவற்றை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.


பச்சையான காய்கறிகளை சாப்பிடுவதற்கு பதிலாக வேகவைத்த, சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். எனவே சூப், பழச்சாறு போன்றவை குடிக்கலாம்.


🔴 #குறிப்பு❓


அதிக காய்ச்சல் இருந்தால் எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு இவற்றில் ஏதேனும் ஒன்றின் பழச்சாறை எடுத்து அதனுடன் சரிசம அளவு தண்ணீர் கலந்து சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் குடிக்கலாம்.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


       999 437 9988 ☎ 81 4849 6869


💊#மேலப்பளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி