எலும்பு வலிமை பெற

 🇨🇭#எலும்பின்_வலிமையை_அதிகரிக்க #சில_குறிப்புகள்❓❓❗❗❗


☀அதிகாலை சூரிய உதயம்❗❓


சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது, நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது, எலும்பின் வலிமைக்கு நல்லது என கூறுகிறார்கள்.


💊பூண்டு மற்றும் வெங்காயம்💊


உங்களது தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும். இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்கு காரணம்.


💊அதிகப்படியான புரதம் வேண்டாம்💊


இறைச்சி உணவுகளின் மூலம் கிடைக்கப் பெறும் அதிகப்படியான புரதம், கால்சியம் சத்தை வெளியேற்றிவிடுகிறது. இது, எலும்பின் வலிமை குறைய காரணமாகிறது. எனவே, புரதம் அதிகமுள்ள இறைச்சி உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம்.


💊உடற்பயிற்சி அவசியம்💊


எலும்பின் வலிமை அதிகரிக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். 


💊உங்களுக்கு பிடித்த விளையாட்டை💊 விளையாடுங்கள்


ஃபுட் பால், பாஸ்கெட்பால், பேட்-மிட்டன் என எந்த விளையாட்டு உங்களுக்கு பிடிக்கிறதோ அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுங்கள். இது, தசை மற்றும் எலும்பின் வலிமை அதிகரிக்க உதவும்.


💊பால் உணவுகள் அவசியம்💊


பால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்பிற்கு வலிமையை தரும்.


🇨🇭#ஆரோக்கியமான_உணவு🇨🇭


👉உங்களது உணவுப் பழக்கத்தில், கீரை, தானிய உணவுகள் போன்ற சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்கள் வேக வைத்த காய்கறிகள் அல்லது தானிய உணவுகள் சாப்பிடலாம்.


💊 கால்சியம் நிறைந்த உணவுகளில் முக்கியப்பங்கு வகிப்பவை பால் மற்றும் பால் பொருட்கள். 


தினசரி, நம் உடலுக்கு 1-1.3 கிராம் (1000- 1300 மில்லி கிராம்) கால்சியம் தேவை.


💊100 மி.கி சோயா பீன்ஸில் 25 மி.கி கால்சியம் உள்ளது. 


தினமும் காலையில் சோயாப்பால் அருந்துவது நல்லது.


💊100 மி.கி மீனில், 15 மி.கி கால்சியம் உள்ளது. 


ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது.


💊ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். 


ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. 


💊100 மி.கி நண்டில் 16 மி.கி கால்சியம் உள்ளது. 


எலும்புமுறிவு ஏற்பட்டவர்கள், மூன்று நாளுக்கு ஒரு முறை நண்டு சூப் குடிக்கலாம். 


💊கொள்ளில், சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்தது. 


எலும்பு உறுதிக்குக் கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்துக் குடித்துவந்தால் எலும்பு வலுவாகும்.


💊புரோகோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளைத் தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். கேரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


💊 அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. 100 மி.கி அத்திப் பழத்தில் 26 மி.கி கால்சியம் உள்ளது.

ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளைப் பாதுகாப்பாகவைத்திருக்கும்.


💊 கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை ஆகியவற்றில் கால்சியம் உள்ளது.


💊 100 மி.கி கேழ்வரகில் 35 மி.கி கால்சியம் உள்ளது. அவ்வப்போது ராகி கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத ராகிதோசை சாப்பிடலாம்.


💊 முந்திரியில் 37 மி.கி., பாதாமில் 26 மி.கி., பிஸ்தாவில் 10 மி.கி கால்சியம் உள்ளது. மேலும், உடலுக்குத் தேவையான மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புகள் உள்ளன.


💊100 மி.கி பேரீச்சம் பழத்தில் 39 மி.கி கால்சியம் உள்ளது. அதேபோல், மாங்கனீஸ், தாமிரம், மங்கனீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன.


💊100 மி.கி கறுப்பு உளுந்தில் 13 மி.கி கால்சியம் நிறைந்துள்ளது. கறுப்பு உளுந்து சுண்டல் சாப்பிடுவது நல்லது. 


💊சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் தினமும் காலை 7:00 - 8:00 மணி வெயிலில் நிற்கலாம். 


💊வாதுமை பருப்பு💊


வறுத்த வாதுமை பருப்பு ஒரு கப் சாப்பிட்டால் உடலில் 457 மில்லி கிராம் கால்சியம் சேரும். சுண்ணாம்பு சத்து மட்டுமல்ல புரோட்டீன் என்ற புரதமும் இதில் அதிகம் உள்ளது. இதய நோயை தடுக்கும் இயல்பு கொண்டது. புரதச் சத்து அதிகம் கொண்ட இந்த பருப்புகளில் சிலவற்றை காலை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.


💊தினசரி தேவையான சுண்ணாம்பு சத்தினை மோர் - 2 கப், கொஞ்சம் TOFU என்னும் சோயாகட்டி, கீரை, பீன்ஸ் - 1 கப், பழச்சாறு - 1 கப் சாப்பிடுவதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர கால்சியம் சத்து அதிகம் உள்ள சில உணவு பொருள்களை பார்க்கலாம்.


💊எள், கால்சியம் சத்து நிறைந்தø ஒரு எண்ணெய் வித்து, எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. 


💊பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.


🇨🇭 ஊட்டச்சத்தை அதிகரிக்கும் 🇨🇭

உளுந்து


கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பர். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இச்சமயத்தில், உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும். எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது.


மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது. உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உளுந்தை காயவைத்து, அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை பசியை போக்குவதுடன், உடலுக்கு குளிர்ச்சியைத் தரவல்லது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி