கர்ப்ப்பை நீர்க்கட்டி தீர

 கர்ப்பை நீர்க்கட்டிக்கு அனுபவ மருந்து 


கழச்சிகாய் - 200 கிராம்  

கருஞ்சீரகம் - 100 கிராம் 

எள்ளு - 100 கிராம்   

மிளகு - 50 கிராம் 


சுத்தி முறைகள் 

கழச்சிகாய் - தண்ணீரில் ஊறவைத்து தோல் நீக்கி காயவைத்து பொடித்து வைக்கவும் 

கருஞ்சீரகம் - நன்றாய் ஆய்ந்து இரவியிலுலர்த்தி பொன்மேனியாக வறுத்துக் கொள்ளவும்.

எள்ளு : தூசு தும்பு நீக்கி வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். 

மிளகு - புளித்த மோரில் போட்டு மோரில் தாழ்ந்த மிளகை ஒரு சாமம் ஊறபோட்டு எடுத்துலர்த்தி கொள்ளவும்.


முறைப்படி சுத்தி செய்து கழச்சிகாய் தவிர்த்து மீதி உள்ளதை வறுத்து பொடித்து சளித்து பத்திரப் படுத்தவும்.


அளவு : 3 முதல் 5 கிராம் 


காலை மற்றும் மாலை 


உணவுக்கு பின் வெந்நீரில் குடிக்கவும்.


பயன்கள் :  உடல் வெப்பமுண்டாக்கும், ருது உண்டாக்கும், நீர் கட்டிகளை கரைக்கும், வலி அகற்றும், வயிற்றிலுள்ள புழுக்களை கொள்ளும், உடல் எடையை குறைக்கும், அண்ட வாயு, ஏறண்டம், இரங்கண்டம், தசையண்டம், வீக்கத்தை குறைக்கும், வயிற்று பெருமல் , சூதக கட்டு, சூதக சூலை நீங்கும். 


இது வர்ம ஆசான் இராஜேந்திரன் ஐயா  சொல்லிக் கொடுத்த முறை.  நானும் பலபேருக்கு கொடுத்த அனுபவ முறை. 


நன்றி,


மேலும் பயணிப்போம் . . . 


J. லோகேஷ் குமார்,

வேலூர்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி