எலும்பு வலி காரணம்

 🇨🇭#எத்தனையோ_வலிகளை_பற்றி #கேள்விப்பட்டிருப்போம்.❗❗❗


🇨🇭#அது_என்ன_எலும்பு_வலி…❓❓❓


💢 எலும்புகளின் அமைப்பு மற்றும் சாதாரண இயக்கங்களை பாதிக்கிற நோய்களின் விளைவால் எலும்பு வலி ஏற்படக்கூடும். இந்த நோயின் வருவதற்கான காரணத்தையும், அறிகுறியையும் பார்க்கலாம்.


எத்தனையோ வலிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவைகள் பற்றி ஓரளவு நமக்கு தகவல்களும் தெரியும். ஆனால், எலும்பு வலி பற்றி நம்மிடம் இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லை.  


எலும்புகள் திடீரென மென்மையான மாதிரி உணர்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளில் வலி மற்றும் அசௌகரியமான உணர்வு போன்றவையே எலும்பு வலியாக கருதப்படுகிறது. எலும்பு வலி என்பது தசை மற்றும் மூட்டு வலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உடல் இயக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எலும்பு வலி இருக்கும். எலும்புகளின் அமைப்பு மற்றும் சாதாரண இயக்கங்களை பாதிக்கிற நோய்களின் விளைவால் எலும்பு வலி ஏற்படக்கூடும்.


🔴 எலும்பு வலி ஏன் ஏற்படுகிறது❓

 அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்❓


🈳 #அடிபடுதல்


கீழே விழுவது, வாகன விபத்துகளின் போது பலமாக அடிபட்டு கொள்வது போன்றவற்றால் எலும்பு வலி வரலாம். அப்படி விழுவதன் விளைவால் எலும்புகள் உடைந்து, ஃபிராக்சர் ஏற்படலாம். எலும்புகளுக்கு ஏற்படும் எந்தவகையான பாதிப்பும் இதற்கு காரணமாகலாம்.


💢#அறிகுறிகள்❓


▶ வீக்கம், 


▶ அசௌகரியமான உணர்வு, 


▶ எலும்புகளின் அமைப்பில் வித்தியாசம் தெரிவது, 


▶ எலும்புகள் அசையும்போது வித்தியாசமான சத்தம் வருவது.


🈵 #சத்து_குறைபாடு


எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு பலவகையான ஊட்டச்சத்துக்கள் அவசியம். மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் வைட்டமின் டி. இவை இரண்டும் குறையும்போது ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற நோய் ஏற்படுவது சகஜம். இந்த நோய் தீவிர நிலையை எட்டும்போது எலும்புகளில் வலி ஏற்படும்.


🉐 #அறிகுறிகள்❓


◀ தசை மற்றும் திசுக்களில் வலி, 


◀ தூக்கமின்மை, 


◀ தசைபிடிப்பு, 


◀ அதிக களைப்பு, 


◀ பலவீனமாக உணர்தல்.


🔴#புற்றுநோய்


உடலின் ஏதோ ஒரு பகுதியில் புற்றுநோய் உண்டாகி, அது சீக்கிரமே கவனித்து சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால் மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவும். மார்பகம், சிறுநீரகம், நுரையீரல், தைராய்டு புற்றுநோய்கள் தீவிரமடையும்போது எலும்புகளுக்கும் பரவும். அதன் காரணமாக எலும்புகளில் கடுமையான வலி ஏற்படும்.


🈯 #அறிகுறிகள்❓


👉தலை வலி, 


👉 நெஞ்சு வலி, 


👉 ஃபிராக்சர் [எலும்பு உடைதல் மற்றும் கீரல்]


👉 மயக்கம், 


👉 மஞ்சள் காமாலை, 


👉 வயிறு வீக்கம், மூச்சுவிடுவதில் சிரமம்.


🔴 #எலும்பு_புற்றுநோய்❗❓


எலும்புகளிலேயே உருவாகும் புற்றுநோய் இது. இது மிக அரிதான புற்றுநோய் என்றாலும் ஏற்பட்டுவிட்டால் எலும்புகளின் அடிப்படை அமைப்பையே சிதைத்துவிடும். எலும்புகளில் வலி அதிகரிக்கும்.


🈺 #அறிகுறிகள்❓


➡ எலும்புகள் உடைதல், 


➡ மரத்து போதல், 


➡ தோலின் அடியில் வீக்கம்.


🔴 #ரத்த_ஓட்டத்தை_பாதிக்கும் #நோய்கள்❓


சில நோய்கள், உதாரணத்துக்கு ‘சிக்கெல் செல் அனீமியா’ போன்றவை எலும்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்பவை. போதுமான ரத்த ஓட்டம் இல்லாவிட்டால் எலும்பு திசுக்கள் அழிந்துவிடும். இதனால் எலும்புகள் பலவீனமாகி, அவற்றில் வலியும் ஏற்படும்.


💢 #அறிகுறிகள்❓


➡ மூட்டு வலி, 


➡ மூட்டுகளை அசைக்க முடியாத நிலை, 


➡ பலவீனம்.


⭕ #தொற்று


ஆஸ்டியோமைலிட்டிஸ் என்பது எலும்புகளில் ஏற்படுகிற ஒருவகையான தொற்றுநோய். இது எலும்பின் செல்களை அழித்து, வலியையும் உண்டாக்கும்.


👉 #அறிகுறிகள்❓


வீக்கம், சிவந்துபோதல், வாந்தி, பசியின்மை, உடல் இயக்கம் குறைதல்.


⭕ #லுகேமியா


எலும்பு மஜ்ஜைகளில் ஏற்படும் புற்றுநோய்க்கு லுகேமியா(Leukemia) என்று பெயர். எலும்பு செல்களின் உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜை எலும்புகளில் காணப்படும். அவற்றில் உண்டாகும் புற்றுநோய் கடுமையான எலும்பு வலியை கொடுக்கும். கால்களில் இந்த வலி அதிகமாக இருக்கும்.


💢 #அறிகுறிகள்❓


▶ தோல் வெளிறிப் போதல், 


▶ களைப்பு, 


▶ உடல் எடை குறைவது, 


▶மூச்சு விடுவதில் சிரமம்.


🔴 #நோயுடன்_தொடர்புடைய_முக்கிய #தாக்கங்கள்_மற்றும்_அறிகுறிகள் #யாவை❓


♐ புற்றுநோய் தொடர்புடைய 

எலும்பு வலி❓


▶பாதிக்கப்பட்ட இடத்தை தொடும்போது ஆரம்பகட்டத்தில் வரும் வலி.


▶ஓய்வில் இருக்கும்போது கூட இடைப்பட்ட மற்றும் தொடர் வலி.


🉐 எலும்புத்துளைநோயுடன் (ஆஸ்டியோபோரோசிஸ்) தொடர்புடைய எலும்பு வலி❓


◀கடுமையான முதுகுவலி.


◀தோற்றத்தில் ஏற்படும் மாற்றம்.


◀உயரம் இழப்பு.


◀நடக்கும் திறனில் குறைபாடு.


◀நீடித்த இயலாமை.


❓🈹 கீல்வாதம் தொடர்புடைய 

எலும்பு வலி


◀மூட்டு நெகிழ்வுத்தன்மையில் குறைபாடு.


◀மூட்டு வீக்கம்.


◀விறைப்பு மற்றும் உருக்குலைவு.


◀குறைந்த இயக்கம் மற்றும் செயல்பாடு.


♈ பேஜட் நோய் தொடர்புடைய 

எலும்பு வலி❓


➡முதுகெலும்பு, இடுப்பெலும்பு மற்றும் கால்கள் போன்ற எடை தாங்கும் எலும்புகளில் வலி.


➡எலும்பில் நுண்ணிய முறிவுகள்.


➡பிற காரணிகள் காரணமாக ஏற்படும் எலும்பு வலிக்கு கூடுதல் அறிகுறிகள் இருக்கலாம்.


♓ எலும்பு வலிக்கான முக்கிய காரணங்கள் என்ன❓


எலும்பு வலிக்கு மிகவும் பொதுவான ஆனால் குறைந்த வெளிப்படையான காரணம் எலும்பு புற்றுநோய் (முதன்மை புற்றுநோய்).


👉பிற காரணங்கள் பின்வருமாறு


➡ எலும்புத்துளை நோய்.


➡ கீல்வாதம்.


➡ பேஜட் நோய்.


➡ ஒரு உறுப்பில் இருந்து மற்ற இடங்களுக்கு புற்றுநோய் பரவும் நிலை (மெட்டாஸ்டாடிக்).


➡ பாதிக்கப்பட்ட இரத்த ஓட்டம் (உயிரணு இரத்தசோகை போன்றது).


➡ எலும்பு முறிவு (ஆஸ்டியோமெலிடிஸ்).


➡ தொற்றுநோய்.


➡ காயம் அல்லது அதிர்ச்சி, விபத்துக்கு பின்னர் வரும் எலும்புமுறிவு.


➡ இரத்தப்புற்றுநோய்.


➡ அளவுக்கு அதிகமான காயம்.


➡ தளர்நடைப் பருவ எலும்பு முறிவு (குழந்தைகளில் ஏற்படக்கூடிய முறிவு).


❓எலும்புகளை பலப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும். அடுத்த பதிவில் பால்ப்போம்....❓

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி