தேங்காய் மகத்துவம்
இது மருந்தல்ல மாபெரும் விருந்து மருத்துவ குணத்தை தருகின்ற பத்தியம் இல்லாத உணவு முறைகள் ஒரு மாதுளம் பழத்தின் முத்துக்களும் அதே அளவு துருவிய தேங்காயும் கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் இதனால் கிடைக்கின்றது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியம் கிடைப்பதற்கு இதுவே முதன்மையான உணவாக இருப்பதாக சித்தர்களின் பாடல்கள் கூறுகின்றன தேங்காயும் வாழைப்பழமும் ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு களைப்பு உடல் சோர்வு ஏற்படுவதில்லை இதனால்தான் விரதம் இருப்பவருக்கு விரதம் முடிந்தவுடன் இதை முதல் உணவாக தருகிறார்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது தேங்காயுடன் மரவள்ளி கிழங்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதுடன் உடலுக்கு நல்ல வலிமையும் கிடைக்கின்றது மைதாவில் தயாரிக்கின்ற பிஸ்கட் மற்றும் ரொட்டி வகைகளை உண்பதால் குடலில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது இதனால் அஜீரண கோளாறுகள் உண்டாகின்றன எனவே இதற்கு பதிலாக எளிதாக கிடைக்கின்ற பப்பாளி பழம் கொய்யா பழம் அத்திப்பழம் பேரீச்சை பழங்களை சாப்பிடலாம் இ